Police hunt to nab 3 Persons for molesting Class XI Dalit student லிஃப்ட் தருவதாக கூறி தலித் மாணவியை காரில் கடத்திச் சென்று கற்பழித்த மூவருக்கு போலீஸ் வலை Police hunt to nab 3 Persons for molesting Class XI Dalit student
லக்னோ, டிச. 30-
உத்தரபிரதேசம் மாநிலம், மதுரா அருகே உள்ள நாக்லா ஹன்சி பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் தலித் மணவி கடந்த 26-ம் தேதி பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது ஊரை சேர்ந்த 3 பேர் காரில் வந்து அவரை வீட்டில் இறக்கி விடுவதாக கூறினர்.
இதற்கு சம்மதிக்காத அந்த இளம் பெண்ணை பலவந்தமாக காருக்குள் தூக்கிப் போட்டுக்கொண்டு ஆள்நடமாட்டமில்லாத ஓரிடத்தில் காரை நிறுத்தி, காரினுள் வைத்தே அந்த பெண்ணை கதறக் கதற மூவரும் கற்பழித்தனர். அவர்களிடமிருந்து தப்பியோடி வந்த மாணவி நடந்த சம்பவத்தை அழுதபடியே பெற்றோரிடம் கூறினார்.
இதனையடுத்து, அதே ஊரை சேர்ந்த அண்ணு, ராஜேஷ், லலித் ஆகியோர் தனது மகளை கடத்திச் சென்று கற்பழித்து விட்டதாக மாணவியின் தந்தை அருகில் உள்ள ரயா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மூவரும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் புகாரை வாங்கிக்கொள்ள மறுத்த போலீசார், குற்றவாளிகளுடன் சமரசமாக போகும்படியும் புகார்தாரரை வற்புறுத்தினர்.
பாதிக்கப்பட்ட தலித் மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கவும் போலீசார் சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது. இங்கு நமக்கு நீதி கிடைக்காது என்பதை உணர்ந்துக் கொண்ட தந்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து நடந்த கொடுமைகளை எல்லாம் விபரமாக கூறினார்.
சூப்பிரண்ட்டின் உத்தரவையடுத்து, தற்போது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் மூவரையும் பிடிக்க வலைவீசி தேடி வருகின்றனர்.
...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?