Saturday, 3 May 2014

சிவாஜி குடும்பத்திற்காக பணம் வாங்காமல் இசை நிகழ்ச்சி நடத்தினேன்: ஏ.ஆர்.ரகுமான் வாக்குமூலம்

- 0 comments



தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா மீது பெங்களூர் கோர்ட்டில் சொத்து குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கின் ஒரு பகுதி பிரமாண்டமாக நடத்தப்பட்ட ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணம் சேர்க்கப்பட்டுள்ளது. திருமணத்தின் செலவு கணக்குகள் சொத்து குவிப்பு வழக்கின் கீழ் வருகிறது. இந்த திருமண நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தினார். அந்த நிகழ்ச்சிக்கு அவர் எவ்வளவு சன்மானம் பெற்றார் என்பது நீதிமன்றத்தின் கேள்வி.

இதுபற்றி ஏ.ஆர்.ரகுமான் அளித்த எழுத்துபூர்வமான வாக்குமூலத்தை வழக்கறிஞர் பவானி சிங் வாசித்தார் "சுதாகரனின் மனைவி நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்தைச் சேர்ந்தவர். தமிழ் திரையுலகின் மிக மூத்த கலைஞரின் குடும்ப விழா என்பதால் பணம் வாங்காமல் இசை நிகழ்ச்சி நடத்திக் கொடுத்தேன். இதற்காக ஜெயலலிதா வீட்டிலிருந்து வெள்ளி தாம்பூலம், வெள்ளிக் கிண்ணம், குங்கும சிமிழ் உள்ளிட்ட சில வெள்ளிப் பொருட்களை எனக்கு பரிசாக வழங்கினர்"
இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் வாக்குமூலம் அளித்திருப்பதாக நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது.
[Continue reading...]

அப்பா மாதிரி வேண்டாம், சூர்யா மாதிரி நடிகராக வேண்டும்!! -அதர்வா

- 0 comments


தனுஷ், 'ராஞ்சனா' படம் மூலம் இந்திக்கு சென்று விட்டார். அதனால் தமிழில் அவர் இடத்தை நான் பிடிப்பேன் என்று ஒரு மேடையில் தனுஷை வைத்துக்கொண்டே சொன்னார் சிவகார்த்திகேயன். ஆனால் அதற்கு பதில் கொடுத்த தனுஷ், தமிழ் சினிமாவைப்பொறுத்தவரை எனது இடத்தை நான் யாருக்கும் விட்டுத்தர மாட்டேன். இன்னும் 12 வருடங்கள் நான் தமிழ் படங்களில்தான் நடிப்பேன். அதன்பிறகுதான் மற்ற மொழிகளுக்கு செல்வேன். அதன்பிறகு வேண்டுமானால் யார் வேண்டுமானாலும் என் இடத்தை பிடித்துக்கொள்ளட்டும் என்றார்.

இந்த விசயத்தில் அதர்வாவும் சிவகார்த்திகேயனை ஒத்துப்போகிறார். பரதேசிக்குப்பிறகு ஒரு முக்கிய நடிகராக களத்தில் நிற்கும் அவரது கையில் தற்போது இரும்புக்குதிரை, ஈட்டி, கணிதன் போன்ற படங்கள் உள்ளன. இந்த படங்களுக்குப்பிறகு கோலிவுட்டில் தனக்கென ஒரு வியாபார வட்டம உருவாகும் என்று எதிர்பார்க்கும் அதர்வா, இப்படங்களில் கடினமான உழைப்பைக் கொடுத்துள்ளாராம்.

அவரது மெனக்கெடலைப்பார்த்து சிலர், சினிமாவில் உங்கள் அப்பா முரளி விட்டுச்சென்ற இடத்தை பிடிக்க முயற்சிக்கிறீர்களா? என்று அவரிடம் கேட்டதற்கு, என் அப்பா பாணி எனக்கு வேண்டாம். நான் சூர்யா மாதிரி ஒரு நடிகராக வளரவே ஆசைப்படுகிறேன். அதனால்தான் படத்துக்குப்படம் எனது உழைப்பை அதிகப்படுத்திக்கொண்டே வருகிறேன். அதற்கான பலன் தற்போது நடித்து வரும படங்கள் திரைக்கு வரும்போது எனக்கு கிடைத்து விடும் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறாராம் அதர்வா.
[Continue reading...]

தனுஷின் அனேகனை காப்பியடித்த அஞ்சான் லிங்குசாமி!

- 0 comments



ங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் அஞ்சான். இப்படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கிறார். பெரும்பகுதி படப்பிடிப்பு மும்பையில் நடத்தப்பட்டு சமீபத்தில் பாடல்களுக்காக வெளிநாடுகளுக்கும் சென்று திரும்பி விட்டனர். படத்தை ஆகஸ்ட் 15-ல் வெளியிடும் முயற்சிகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், மே 1-ந்தேதி உழைப்பாளர் தினத்தன்று அஞ்சான் படத்தின் பர்ஸ்ட் லுக், டைட்டில் லோகா ஆகியவற்றை வெளியிடுவதாக முன்பே அறிவித்திருந்த லிங்குசாமி, ஒருநாள் முன்னதாகவே அவற்றை வெளியிட்டார். இதை சூர்யாவின் ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். அதேசமயம், அப்படி அவர் வெளியிட்ட அஞ்சான் என்ற டைட்டில் லோகோ பெருவாரியான ரசிகர்களை குழப்பியது.

காரணம், சில மாதங்களுக்கு முன்பே கே.வி.ஆனந்த் வெளியிட்ட அனேகன் படத்தின் டைட்டில் லோகோவை போன்றே அஞ்சான் டைட்டிலும் இருந்ததுதான். இதையடுத்து, சூர்யாவின் அபிமானத்திற்குரிய ரசிகர்கள் இதை அவரது கவனத்துககு கொண்டு சென்றிருக்கிறார்களாம். அதனால், அஞ்சான் லோகோ விரைவில் மாற்றியமைக்கப்பட்டு வெளியாகும் என்று தெரிகிறது.

ஆக, இது தற்செயலாக நிகழ்ந்ததா? இல்லை அதே பாணியில் வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டு வெளியிடப்பட்டதா? என்பது லிங்குசாமி வாய்திறக்கும் போதுதான் தெரியவரும்.
[Continue reading...]

ஜாலி பையன் சிம்புவை காலி பண்ணிய காதல் தோல்விகள்!

- 0 comments
வல்லவன் படத்தில் நடித்தபோது பொசுக்கென்று நயன்தாராவிடம் காதல் வயப்பட்டார் சிம்பு. ஆனால், அதை சாதகமாக்கிக்கொண்டு உதட்டு முத்தம் கொடுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு நயன்தாராவின் உதட்டை கடித்து புண்ணாக்கினார். அதனால், பயந்து போன நயன்தாரா, இது சரிப்பட்டு வராது வாழ்க்கை முழுவதும் புண்ணான உடம்போடு வாழ முடியாது என்று நினைத்தாரோ என்னவோ, சில மாதங்களிலேயே சிம்புவுடனான காதலை ப்ரேக் அப் செய்து கொண்டார்.

அதேபோல்தான், வாலு படத்தில் நடித்தபோதும் சிம்பு-ஹன்சிகாவுக்கிடையே மலர்ந்த காதலும் சில மாதங்களிலேயே ப்ரேக்அப் ஆனது. ஆக, இப்போது தேவதாஸ் போன்று தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான காதல் அனுபவங்களை நண்பர்களிடம் சொல்லி புலம்பிக்கொண்டு திரிகிறார் சிம்பு. அதோடு, தனது மனதை ஆன்மீகத்திலும் திருப்பி விட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, யோகா, தியானம் என்றெல்லாம் தினமும் இறங்கி விடுகிறாராம். அதனால், ஜாலி பையனாக இருந்த சிம்புவை இப்படி காலி பண்ணி விட்டார்களே இந்த நடிகைகள் என்று அவரது நெருக்கமான நண்பர்கள் மேற்படி நடிகைகளை வசைபாடுகின்றனர். அதோடு சிம்புவை கல்யாணம் செய்து கொள்ளுமாறும் அட்வைஸ் செய்கிறார்கள்.

அதற்கு, இரண்டு முறை காதலில் விழுந்த மனசு கலங்கிப்போயிருக்கிறது. அதை தெளிவுபடுத்தத்தான் ஆன்மீகத்தில் இறங்கியிருக்கிறேன். எனது மனது சுத்தமானதும் ஒரு நல்ல பெண்ணை பார்த்து திருமணம செய்து கொள்வேன். ஆனால் அதற்கு கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் என்று சொல்லும் சிம்பு, காதல் என்னோட வாழ்க்கையில் தோல்வியாக இருந்தாலும், என்னை நிறைய யோசிக்க வைத்திருக்கிறது. அதனால்தான் இதுவரைக்கும விளையாட்டு பிள்ளையாக இருந்த நான் இப்போது கொஞ்சம் விவரமான பையனா மாறிக்கிட்டே வர்றேன் என்கிறாராம்.

Tags »
[Continue reading...]

மீடியாக்களைக்கண்டு ஓட்டம் பிடிக்கும் நயன்தாரா!

- 0 comments


ஐயா படத்தில் தமிழுக்கு வந்த நயன்தாரா, அந்த சமயங்களில் மீடியாக்களை தேடித்தேடிச்சென்று பேட்டி கொடுப்பார். தான் படித்த காலங்களில் நடந்த சுவையான விசயங்களைகூட சொல்வார். அப்போது தனக்கு காதல் கடிதம் கொடுத்தவர்களை தான் கன்னத்தில் அறைந்ததையும் கதைகதையாய் சொல்லி வியக்க வைத்தார்.

ஆனால், அப்படிப்பட்ட நயன்தாரா இப்போதெல்லாம் மீடியாக்களைக்கண்டாலே ஜென்ம எதிரிகளைப்போல் பார்க்கிறார். காரணம், சிம்புவின் காதல் விவகாரத்தை விட பிரபுதேவாவை இவர் காதலித்தபோது அவரது இமேஜை கெடுக்கும் வகையில் மீடியாக்கள் செய்தி வெளியிட்டு விட்டார்களாம. குறிப்பாக, திருமணத்துக்கு முன்பே பிரபுதேவாவை சந்திக்க மும்பைக்கு செல்லும் நயன்தாரா, அங்கு அவருடன் ஹோட்டல்களில் பல நாட்கள் ஒன்றாக தங்கி விட்டு திரும்புகிறார் என்று வெளியான செய்தி அவரை ரொம்பவே புண்படுத்தி விட்டதாம்.

அதிலிருந்துதான் இனிமேல் மீடியாக்களை தான் சந்திக்கப்போவதில்லை என்று உறுதிமொழி எடுத்துக்கெண்ட நயன்தாரா, இப்போதுகூட தான் நடிக்கும் படங்களின் ஆடியோ நிகழ்ச்சிகளுக்கு போனால் மீடியாக்களை சந்திக்க வேண்டியதிருக்கும். அப்போது ஏடாகூடமாக எதையாவது கேட்பார்கள். அதற்கு பதில் சொல்ல வேண்டியதிருக்கும் என்றுதான் ஓடி ஒழிக்கிறாராம்.

இதுபற்றி தனது நட்பு நடிகர்களிடம் சொல்லும் நயன்தாரா, அஜீத் பாணியில் எந்த சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை என்று இருப்பது எவ்வளவோ மேல். நிம்மதியாக இருக்கலாம் என்கிறாராம்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger