ங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் அஞ்சான். இப்படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கிறார். பெரும்பகுதி படப்பிடிப்பு மும்பையில் நடத்தப்பட்டு சமீபத்தில் பாடல்களுக்காக வெளிநாடுகளுக்கும் சென்று திரும்பி விட்டனர். படத்தை ஆகஸ்ட் 15-ல் வெளியிடும் முயற்சிகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், மே 1-ந்தேதி உழைப்பாளர் தினத்தன்று அஞ்சான் படத்தின் பர்ஸ்ட் லுக், டைட்டில் லோகா ஆகியவற்றை வெளியிடுவதாக முன்பே அறிவித்திருந்த லிங்குசாமி, ஒருநாள் முன்னதாகவே அவற்றை வெளியிட்டார். இதை சூர்யாவின் ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். அதேசமயம், அப்படி அவர் வெளியிட்ட அஞ்சான் என்ற டைட்டில் லோகோ பெருவாரியான ரசிகர்களை குழப்பியது.
காரணம், சில மாதங்களுக்கு முன்பே கே.வி.ஆனந்த் வெளியிட்ட அனேகன் படத்தின் டைட்டில் லோகோவை போன்றே அஞ்சான் டைட்டிலும் இருந்ததுதான். இதையடுத்து, சூர்யாவின் அபிமானத்திற்குரிய ரசிகர்கள் இதை அவரது கவனத்துககு கொண்டு சென்றிருக்கிறார்களாம். அதனால், அஞ்சான் லோகோ விரைவில் மாற்றியமைக்கப்பட்டு வெளியாகும் என்று தெரிகிறது.
ஆக, இது தற்செயலாக நிகழ்ந்ததா? இல்லை அதே பாணியில் வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டு வெளியிடப்பட்டதா? என்பது லிங்குசாமி வாய்திறக்கும் போதுதான் தெரியவரும்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?