தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா மீது பெங்களூர் கோர்ட்டில் சொத்து குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கின் ஒரு பகுதி பிரமாண்டமாக நடத்தப்பட்ட ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணம் சேர்க்கப்பட்டுள்ளது. திருமணத்தின் செலவு கணக்குகள் சொத்து குவிப்பு வழக்கின் கீழ் வருகிறது. இந்த திருமண நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தினார். அந்த நிகழ்ச்சிக்கு அவர் எவ்வளவு சன்மானம் பெற்றார் என்பது நீதிமன்றத்தின் கேள்வி.
இதுபற்றி ஏ.ஆர்.ரகுமான் அளித்த எழுத்துபூர்வமான வாக்குமூலத்தை வழக்கறிஞர் பவானி சிங் வாசித்தார் "சுதாகரனின் மனைவி நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்தைச் சேர்ந்தவர். தமிழ் திரையுலகின் மிக மூத்த கலைஞரின் குடும்ப விழா என்பதால் பணம் வாங்காமல் இசை நிகழ்ச்சி நடத்திக் கொடுத்தேன். இதற்காக ஜெயலலிதா வீட்டிலிருந்து வெள்ளி தாம்பூலம், வெள்ளிக் கிண்ணம், குங்கும சிமிழ் உள்ளிட்ட சில வெள்ளிப் பொருட்களை எனக்கு பரிசாக வழங்கினர்"
இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் வாக்குமூலம் அளித்திருப்பதாக நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?