Friday, 23 September 2011

அதிமுக கூட்டணியிலிருந்து கம்யூனிஸ்ட்டுகளும் வெளியேறுவார்களா?

- 0 comments
 
 
 
உள்ளாட்சித் தேர்தலில் தங்களுடன் பேச்சு நடத்திக் கொண்டே பெரும்பாலான பதவிகளுக்கு அதிமுக வேட்பாளரை அறிவித்துவிட்டதால், கூட்டணியிலிருந்து வெளியேற மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
 
விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாமா என இந்தக் கட்சிகள் யோசித்து வருகின்றன.
 
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அணியில் சேர்ந்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை அதிமுக மதிப்பதாகத் தெரியவில்லை. இவர்களுடன் பேசிக் கொண்டே உள்ளாட்சித் தேர்தலில் 10 மாநகராட்சிகளுக்கும் மேயர் வேட்பாளர்களை முதலில் அறிவித்த அதிமுக, அடுத்தடுத்து 124 நகராட்சிகளுக்கும், அனைத்து பேரூராட்சிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.
 
மேலும் மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கும்கூட வேட்பாளர்களை அறிவித்துவிட்டது அதிமுக.
 
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மட்டுமே கொஞ்சம் தைரியமாக தனது அதிருப்தியை முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதமாக எழுதி வெளிப்படுத்தியது. ஆனாலும் அந்தக் கடிதத்தில் கெஞ்சலே அதிகமாக இருந்தது.
 
ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் அதைக் கூட செய்யவில்லை.
 
2006ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடதுசாரி கட்சிகளுக்கு டீசன்டான இடங்களை ஒதுக்கிக் தந்தது திமுக. அப்போது போட்டியிட்ட இடங்களையாவது தங்களுக்கு இப்போது ஒதுக்குமாறு இந்தக் கட்சிகள் கோரி வருகின்றன.
 
ஆனால், கம்யூனிஸ்டுகள் கேட்கும் இடங்களுக்கும் அதிமுக தரப்பில் தருவதாக சொல்லும் இடங்களின் எண்ணிக்கைக்கும் சம்பந்தே இல்லை என்று தெரிகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் 8 சதவீதம் அளவுக்கு மார்க்சிஸ்ட் கேட்க, 2 சதவீதத்துக்கும் குறைவான இடங்களையே தர முடியும் என அதிமுக கூறிவிடடதாகத் தெரிகிறது.
 
இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்னொரு பட்டியலைத் தயாரித்து அதிமுக குழுவிடம் தந்துள்ளனர். அதில் கேட்கப்பட்டுள்ள இடங்களுக்கு நெருக்கமாக இட ஒதுக்கீடு தருவதாக இருந்தால் மட்டுமே தங்களை மீண்டும் பேச அழைக்குமாறும், மற்றபடி போயஸ் கார்டனுக்கு ராத்திரி நேரத்தில் வந்து டீ, பிஸ்கெட், வடை சாப்பிட்டுவிட்டுப் போக நாங்கள் தயாராக இல்லை என்றும் அதிமுகவிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.
 
ஆனால், அப்படி ஏதும் பிரச்சனையே இல்லாதது போல நடித்து வருகிறது இந்திய கம்யூனிஸ்ட். அதிமுக குழு அழைக்கும்போதெல்லாம் பேச்சு நடத்த போயஸ் தோட்டத்துக்கு வந்துவிட்டுச் செல்லும் இந்தக் கட்சியினர் நேற்றும் அதிமுகவுடன் பேச்சு நடத்தினர்.
 
ஆனால், பேச்சுவார்த்தைக்குப் பின் முகம் வெளிறிப் போய் வெளியே வந்த இந்திய கம்யூனிஸ்ட் குழுவினர் நிருபர்களிடம் எதையுமே கூறாமல் அங்கிருந்து இடத்தைக் காலி செய்துவிட்டனர்.
 
இதற்கிடையே வேட்பு மனு தாக்கல் செய்ய 29ம் தேதி தான் கடைசி நான் என்ற நிலையில், 30ம் தேதி வரை கூட அதிமுக தங்களிடம் பேச்சு நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருதுகின்றனர்.
 
கடைசி நேரத்தில் சிக்கலில் மாட்டிக் கொள்வதைத் தவிர்க்க தனது கட்சி வேட்பாளர்களை தனியாகவே வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யுமாறு மார்க்சிஸ்ட் தலைமை அறிவுறுத்தி இருப்பதாகத் தெரிகிறது.
 
இந் நிலையில் திமுகவால் கழற்றிவிடப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட்டுகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கத் திட்டமிட்டுள்ளது.
 
தங்களுடன் கூட்டணிக்கு வருமாறு விடுதலைச் சிறுத்தைகளுக்கு பா.ம.க. அழைப்பு விடுத்துள்ளது. ஆனாலும், உள்ளாட்சித் தேர்தலில் இந்தக் கூட்டணி வெல்லாது என விடுதலை சிறுத்தைகள் கருதுகிறது.
 
கவுன்சிலர் தேர்தல்களைப் பொறுத்தவரை வன்னியர்கள் அதிகமுள்ள பகுதிகளில் தங்களது வேட்பாளர்களுக்கும், தலித்கள் அதிகமுள்ள பகுதிகளில் பாமகவுக்கும் ஓட்டு கிடைக்காது என்பதால் இந்தக் கூட்டணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் தயாராக இல்லை.
 
இதனால் இடதுசாரிகளுடன் இணைந்து போட்டியிடவே விடுதலைச் சிறுத்தைகள் ஆர்வமாக உள்ளது.



[Continue reading...]

இருந்த ஒரு கண்ணையும் தானம் செய்த பட்டோடி!

- 0 comments
 
 
 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடியின் விருப்பத்தின் பேரில், அவருக்கு இருந்த ஒரே கண்ணும் தானமாக கொடுக்கப்பட்டது.
 
மன்சூர் அலிகானின் வலது கண் விபத்தில் செயலிழந்து போய் விட்டது. அவர் இடது கண்ணுடன்தான் சில காலம் கிரிக்கெட் ஆடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது இடது கண்ணை அவர் தானம் தர விருப்பம் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவரது விருப்பப்படி அவரது மரணத்திற்குப் பின்னர் பட்டோடியின் இடது கண் தானமாக தரப்பட்டது.
 
பட்டோடி இறக்கும் முன் தனக்கிருந்த ஒரு கண்ணையும் தானமாக அளிக்குமாறு விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து அவர் இறந்த பின், இடதுபக்க கண்ணை டாக்டர்கள் எடுத்து கொண்டனர்.



[Continue reading...]

''பயந்தாங்கொள்ளி சச்சின்'': சுயசரிதையில் சோயப் அக்தர் தாக்கு!

- 0 comments
 
 
 
 
 
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர் சோயப் அக்தர் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில் இந்திய வீரர் சச்சின் மற்றும் திராவிட் பற்றி தெரிவித்துள்ள சில கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளன.
 
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தனது பந்துவீச்சால் உலகின் பல முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு பீதியை அளித்தவர். ஆனால் பல சர்ச்சைகளில் சிக்கிய அக்தர் அணியில் இருந்தே வெளியேற்றப்பட்டார்.
 
இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் விளையாடிய போது தனக்கு நேர்ந்த அனுபவங்களை மையமாக கொண்ட தனது சுயசரிதை புத்தகத்தை எழுதிய அக்தர் வெளியிட்டார். 'தங்கள் சர்ச்சைக்குரிய' (கான்ட்ரோவஸ்லீ யுவர்ஸ்) என்ற பெயரில் எழுதியுள்ள அக்தர் அந்த புத்தகத்தில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.
 
இந்திய கிரிக்கெட் வீரர்களான சச்சின் மற்றும் திராவிட் ஆகியோரை ஆட்டத்தில் பெரிய திறமைசாலிகள் என்று கூற முடியாது. அந்த 2 பேருக்கும் ஆட்டத்தில் சரியான துவக்கத்தை அளிக்கவோ, ஆட்டத்தை முடிக்கவோ தெரியாது.
 
சச்சின் எனது வேகபந்துகளை சந்திக்க பயந்தது உண்டு. இதை தெரிவிக்க நான் எதற்கு பயப்பட வேண்டும். சச்சின் மற்றும் திராவிட் ஆகிய 2 பேரும் அணியின் வெற்றிக்கு உதவும் வீரர்கள் என கூற முடியாது. பாலிவுட் நடிகரும் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவருமான ஷாருக்கானிடம் எனக்கு அளிக்கப்பட்ட சம்பளத்தில் திருப்தியில்லை என ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.
 
ஆனால் அவரும், ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடியும் சேர்ந்து என்னை சம்மதிக்க வைத்தனர். அதற்கு பின் அவர்கள் 2 பேரின் ஆலோசனையும் நான் கேட்கவில்லை, என கருத்து தெரிவித்து உள்ளார்.
 
இதுகுறித்து இந்திய வீரர் சச்சினிடம் கேட்டபோது, சோயப் அக்தரின் சர்ச்சைக்குரிய புத்தகம் குறித்து கருத்து தெரிவி்த்தால் எனது புகழுக்கு இழுக்காக அமையும், என்றார்.



[Continue reading...]

7ஆம் அறிவு பாடல் வெளியீட்டு விழா போட்டோக்கள் மற்றும் வீடியோ

- 0 comments
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


 


[Continue reading...]

சூடுபிடிக்கும் பிடிக்கும் தினகரன் அலுவலக எரிப்பு வழக்கு

- 0 comments
 
 
 
 
 
 
மதுரையில் தினகரன் பத்திரிக்கை அலுவலக எரிப்பு வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த தாமதமான மேல் முறையீட்டு மனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் கோர்ட் உத்தரவிட்டது.
 
தினகரன் அலுவலக எரிப்பு வழக்கு மீ்ண்டும் உயிர் பெற்றிருப்பதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கடந்த 2007ம் ஆண்டு மே மாதம் தினகரன் நாளிதழ் ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டது. அதில் அழகிரியை விட ஸ்டாலினுக்கே செல்வாக்கு உள்ளதாகவும், அவரே கருணாநிதியின் அடுத்த வாரிசு என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதைப் பார்த்த மதுரை அழகிரி ஆதரவாளர்கள் கொந்தளித்து வன்முறை வெறியாட்டத்தில் குதித்தனர்.
 
தினகரன் அலுவலகத்திற்குள் புகுந்து கொலை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். 3 ஊழியர்களை உயிரோடு தீவைத்துக் கொளுத்தி சாம்பலாக்கினர். மதுரை நகரிலும் அவர்களின் வன்முறை கொடூரமாக இருந்தது. இதனால் மதுரை மக்கள் பெரும் பீதியடைந்தனர். பல பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன, கல்வீச்சு என மதுரை நகரையே போர்க்கள பூமி போல ஆக்கி விட்டது அழகிரி ஆதரவுக் கும்பல்.
 
தினகரன் அலுவலகத்தில் வைக்கப்பட்ட தீயில் வினோத், முத்துராமலிங்கம், கோபி ஆகிய மூன்று பேர் கொடூரமாக உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி அப்போதைய திமுக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அட்டாக் பாண்டி, திருச்செல்வம், சரவணமுத்து உள்ளிட்ட 17 திமுகவினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
 
அதேபோல கவனக்குறைவாக இருந்ததற்காக டி.எஸ்.பி.ராஜாராம் மீதும் வழக்குப் பதிவானது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ கோர்ட், கடந்த 2009, டிசம்பர் 9ம் தேதி அத்தனை பேரையும் விடுதலை செய்து அதிர்ச்சித் தீர்ப்பை அளித்தது.
 
அதன் பின்னர் இந்த வழக்கில் சிபிஐ சார்பில் மேல் முறையீடு செய்யவே இல்லை. அதாவது தி்முக ஆட்சிக்காலம் முடியும் வரை மேல் முறையீடு குறித்து சிபிஐ சிந்திக்கவே இல்லை. இந்த நிலையில் தற்போது திடீரென விழித்துக் கொண்டு மேல் முறையீடு செய்துள்ளது. பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்த நெருக்குதல்களே சிபிஐ மேல் முறையீடு செய்யக் காரணம்.
 
இதுதொடர்பாக உயர்நீதிமன்றக் கிளையில் சிபிஐ தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுவில்,
 
ஒத்தக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆலடியார் நடந்த சம்பவங்களை விளக்கமாக கூறி உள்ளார். யாரெல்லாம் வாகனங்களுக்கு தீ வைத்தது, யாரெல்லாம் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசினர் என்று குற்றவாளிகளை அடையாளம் காட்டி உள்ளனர். அவரது சாட்சியத்தை விசாரணை கோர்ட் கருத்தில் கொள்ளாமல் முற்றிலுமாக நிராகரித்து இருக்கக்கூடாது.
 
சப்-இன்ஸ்பெக்டர் ஆலடியார் அடையாள அணிவகுப்பின் போது குற்றம்சாட்டப்பட்டவர்களை அடையாளம் காட்டவில்லை என்று கூறுவது தவறானது. இந்த வழக்கில் சாட்சிகளில் பெரும்பாலானவர்கள் பிறழ்சாட்சியாக மாறிய போதிலும் கூட, வீடியோ ஆதாரம், பத்திரிகை புகைப்பட ஆதாரம் போன்ற தொழில்நுட்ப சாட்சியங்களை கோர்ட் கருத்தில் கொள்ளவில்லை.
 
குற்றம் நடந்ததற்கு அடிப்படை முகாந்திரம் உள்ளது. எனவே குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்த கீழ்கோர்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தது.
 
மேலும் அப்பீல் மனுவைத் தாக்கல் செய்ததற்கு கால தாமதம் ஆனதற்கும் சிபிஐ விளக்கம் அளித்திருந்தது. இதை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஜனார்த்தன ராஜா, அருணா ஜெகதீசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மனுவை விசாரணைக்கு ஏற்று உத்தரவிட்டது.
 
மேலும் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் கோர்ட் உத்தரவிட்டது.
 
அட்டாக் பாண்டி தற்போது பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



[Continue reading...]

ஆஸ்கர் விருதுப் -எந்திரன் நிராகரிப்பு- மலையாளப் படம் தேர்வு!

- 0 comments
 
 
 
 
 
சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு இந்த முறை மலையாளப் படம் ஒன்று அனுப்பப்படுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்ற எந்திரன், தெய்வத்திருமகள் உள்ளிட்ட 5 தமிழ்ப் படங்களும் தேர்வாகவில்லை.
 
எடிட்டர் பி.லெனினைத் தலைவராகக் கொண்ட 14 பேர் கொண்ட குழு இந்தியாவிலிருந்து இந்த ஆண்டு அனுப்பப்படும் படத்தைத் தேர்வு செய்ய நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த கங்கை அமரன், ஏ.எஸ்.பிரகாசம் உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர்.
 
இந்தக் குழுவினர் எந்திரன், தெய்வத்திருமகள், கோ, ஆடுகளம், முரண் ஆகிய ஐந்து தமிழ்ப் படங்கள் உள்பட 16 படங்களைப் பரிசீலித்தனர். இறுதியில் மலையாளத்தில் வெளியான ஆதாமிண்டே மகன் அபு படம் தேர்வானது.
 
இந்தப் படத்தில் நாயகனாக நடித்த சலீம் சிறந்த தேசிய நடிகராக தேர்வு பெற்று, தனுஷுடன் சேர்த்து விருதளித்துக் கெளரவிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.



[Continue reading...]

ஏழாம் அறிவில் வரும் ஹீரோ 'போதி தர்மன்'... சில குறிப்புகள்!

- 0 comments
 
 
 
போதி தர்மன்... தமிழ் சினிமாக்காரர்கள் மற்றும் ரசிகர்கள் இணையத்தில் அதிகமாககத் தேடிக் கொண்டிருக்கும் பெயர் இன்றைக்கு இதுதான்!
 
காரணம், சூர்யா நடிக்கும் ஏழாம் அறிவு படத்தில் கதையின் நாயகன் இந்த போதி தர்மன்தான்!
 
முதலில் போதி தர்மன் யார் என்பதை சுருக்கமாகப் பார்த்து விடுவோம்.
 
கிபி 5-ம் நூற்றாண்டில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்தவர் இந்த போதி தர்மன். காஞ்சிபுரத்தில் பிறந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவர்.
 
புத்த மத குருவாக மாறியபிறகு, சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி, அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும், 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.
 
ஷோலின் குங்ஃபூ என்ற உலகின் மிகச் சிறந்த தற்காப்புக் கலையை நிறுவியரே இவர்தான் என்கிறது வரலாறு. இதற்கான கல்வெட்டு சீனக் கோயிலில் இன்றும் உள்ளது.
 
புத்த மதத்தில் உள்ள 28 குருக்களில் கடைசி குரு போதிதர்மர் என்ற இந்த தமிழன்தான் என்பதை பல வரலாற்று ஆசிரியர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். செயற்கரிய பல செயல்களைச் செய்து ஆச்சரியத்தில் மூழ்கடித்தவராம் இந்த போதி தர்மர்.
 
அதுமட்டுமல்ல, அவர் கால் தடம்பதியாத நாடுகளே இல்லையாம். இதை அவரது குறிப்பிலிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது. கடல்வழியாக இந்தோனேஷியா, ஜாவா, சுமத்ரா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் போதி தர்மன் மகாயானத்தைப் பரப்பியுள்ளார்.
 
போதிதர்மன் மரணமடைந்து, அவர் உடல் எரிக்கப்பட்டதாக சீனாவின் ஷோலின் வம்ச அரசன் நம்பிக்கொண்டிருந்தபோது, போதியோ உயிருடன் 'பாமீர் முடிச்சு' பிரதேசத்தில் ஒற்றை காலணியை சுமந்தபடி நடந்து சென்றுகொண்டிருந்ததை சீன அமைச்சர் நேரில் கண்டாராம். அவரிடம் விசாரித்த போது, நான் என் சொந்த ஊருக்குப் போகிறேன், என்று கூறிவிட்டுச் சென்றாராம் போதி. அவர் மீண்டும் உயிர்த்து எழுந்துவிட்டதை, ஷோலின் கோயிலின் குருக்களும் உறுதி செய்தார்களாம்... இப்படிப் போகிறது போதியின் கதை.
 
இந்தக் கதைதான் சூர்யா நடிக்கும் ஏழாம் அறிவு படத்துக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. போதியின் ஜீன்களைப் பயன்படுத்தி, நவீன மருத்துவமுறையில் சாதனைகளைச் செய்வதாக இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
 
படத்தின் முக்கிய காட்சிகளை சீனா, தாய்லாந்து என போதி தர்மன் வாழ்ந்த இடங்களிலேயே எடுத்திருப்பதுதான் ஏழாம் அறிவின் சிறப்பு.
 
தகவல்களைப் படிக்கும்போதே படம் குறித்து ஏக எதிர்ப்பார்ப்பு உருவாகிறதல்லவா... எதிர்ப்பார்ப்பை பொய்யாக்க மாட்டார் முருகதாஸ் என நம்புவோம்!



[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger