கனேடிய வெளிவிவகார அமைச்சின் தென்னாசியப் பிரிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உத்தியோகபூர்வமாக கனடாவிற்கு அழைத்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக கனடிய தமிழர்களது பிரதிநிதிகள் சிலரிடமிருந்து தெரிவிக்கப்படுகிறது.
ஆளுங்கட்சியான கொன்சவேட்டிவ் கட்சியின் தமிழ் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்கள் இலங்கை விவகாரம் தொடர்பாக கனடாவின் தெளிவான நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு விடுத்த வேண்டுகோள்கள் சாதகமாகப் பரிசீலிக்கப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அநேகமாக கனடியப் பிரதமர் அலுவலகம் அல்லது வெளிவிவகார அமைச்சு இலங்கை விவகாரம் தொடர்பான கனேடிய அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் அறிக்கையொன்றை அடுத்தடுத்த வாரங்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் கனேடிய வெளிவிவகார அமைச்சின் தென்னாசியப் பிரிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கனடாவிற்கு உத்தியோகபூர்வமாக அழைக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ள இவ்வேளையில் அவர்கள் கனடாவிற்கு வருவதற்கு முன்பாகவே இவ்வறிவிப்பு விடுக்கப்படுமெனவும் தெரிய வருகிறது.
கனடிய அரசின் இத் திடீர் நிலைப்பாட்டால் சிறிலங்கா அரசுக்கு இராஜதந்திர ரீதியாக பெரும் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
http://dinasarinews.blogspot.com
http://dinasarinews.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?