சுவிஸ் நாட்டில் பெண்கள் யாரும் நகை அணிவதில்லை என்றும் தோடு கூட போடுவதில்லை என்றும் தோடு போட்டால் காதோடு அதனை அறுத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள் என அண்மையில் சுவிஸ் ஜெனிவாவுக்கு வந்து விட்டு யாழ்ப்பாணம் திரும்பியுள்ள யாழ். மாவட்ட அரச முகவர் இமெல்டா சுகுமார் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
தான் அண்மையில் பயணம் செய்த பிலிப்பைன்ஸ், சுவிஸ், பிரான்ஸ் போன்ற நாடுகளில் நகைகளை அணிந்து செல்ல வேண்டாம் என தன்னுடன் வந்த சிங்கள அதிகாரிகள் ஆலோசனை வழங்கியதாகவும் விமான நிலைய அதிகாரிகளும் நகைகளை அணிய வேண்டாம் என ஆலோசனை வழங்கியதாகவும் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
சுவிஸ் நாட்டில் தோடு அணிந்தால் காதோடு தோட்டை அறுத்து சென்றுவிடுவார்கள் என்றும் அங்குள்ள பெண்களும் நகைகள் எதனையுமே அணியாமல்தான் உலாவுகின்றனர் என்றும் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இந்தக் காரணத்தினால் என்னை நகைகளைக் கழற்றி வைக்குமாறு கூறினர்.
சுவிஸ், பிரான்ஸ் போன்ற நாடுகளில் தங்க நகை அணிந்து செல்லும் சுதந்திரம் கூட அங்கு இல்லை என்று தெரிவித்த இமெல்டா சுகுமார் இலங்கையில் மகிந்த ராசபக்ச ஆட்சியில் எவ்வளவு நகையையும் அணிந்து செல்லலாம். மக்களுக்கு பாதுகாப்பு நிறைந்த நாடு இலங்கைதான் என தெரிவித்துள்ளார்.
அண்மையில் சுவிஸ் ஜெனிவாவுக்கு வந்த இமெல்டா சுகுமார் அரசாங்கம் அச்சடித்து கொடுத்த புத்தகம் ஒன்றை சகலருக்கும் கொடுத்து திரிந்ததாகவும், யோசப் பரராசசிங்கம், ரவிராஜ், குமார் பொன்னம்பலம் உட்பட தமிழ் தலைவர்கள் அனைவரையும் புலிகளே சுட்டுக்கொன்றனர் எனப் பிரச்சாரம் செய்து திரிந்தார் என்றும் ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொண்ட ஒருவர் அதிர்வுக்கு தெரிவித்தார்.
http://dinasarinews.blogspot.com
http://dinasarinews.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?