கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தேமுதிக கூட்டணி பெற்ற வெற்றியில், தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.
உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடனான கூட்டணியை வைத்துக்கொண்டு, உள்ளாட்சி அமைப்புகளில் பெருமளவில் நிறைய தேமுதிகவினரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று விஜயகாந்த் தரப்பு கணக்கு போட்டது,
இந்நிலையில் ஜெயலலிதா உள்ளாட்சி தேர்தலில் நகர, பேரூராட்சிகளில் அதிமுக வேட்பாளர்களையே தன்னிச்சையாக அறிவிக்க, தேமுதிகவுக்கு பெரும் குழப்பம் நீடித்தது.
பெரும் கணக்குகளை போட்டுக்கொண்டிருந்த தேமுதிகவோ, ஜெயலலிதாவின் அறிவிப்பை அடுத்து, தங்களின் கூட்டணி பாதையில் குண்டும் குழியும் விழுந்துகொண்டிருப்பதை முழுமையாக அறிந்தபோது, பாதையே முடிந்துபோயிருக்கிறது.
இந்த சூழ்நிலையில்தான், காங்கிரசுடன் தேமுதிக கூட்டணி அமைக்குமா, தனித்து நிற்குமா என்று கேள்விகள் எழுந்துகொண்டிருந்த நிலையில்தான், தேமுதிகவின் 7வது ஆண்டு துவக்க விழா கோவையில் நடைபெற இருந்தது.
இந்நிலையில் கோவையில் இருந்து பல தேமுதிகவின் நிர்வாகிகள் விஜயகாந்த்திற்கு கடிதங்கள் அனுப்பியுள்ளனர். அதில், அதிமுக நம்மை ஏமாற்றிவிட்டது.
சட்டமன்ற தேர்தலில் திமுகவை எதிர்க்க நம்மால் தான் முடியும் என்று ஜெயலலிதா நினைத்து நம்மை கூட்டணிக்கு சேர்த்தார். எதிர்பாராத விதமாக நம்முடைய கூட்டணியால்தான் அதிமுக பெரும்பாண்மையாக வந்தது.
ஆனால் இதை புரிந்துகொள்ளாத ஜெயலலிதா, இந்த உள்ளாட்சித் தேர்தலில் நம்மை கழட்டி விட்டு அதே பெரும்பாண்மையை வாங்க நினைத்துக்கொண்டிருக்கிறார். நாம் தன்னிச்சையாக தேர்தல் களத்தில் இறங்கி, இந்த தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று கோவையில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தேமுதிகவினர் விஜயகாந்த்துக்கு எழுதியுள்ளனர்.
கூட்டணி பேச்சு முடிவதற்குள்ளாகவே தேர்தல் கமிஷன் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவித்திருப்பதால் தேமுதிக என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தது.
அதே முழித்துக்கொண்டிருந்த நிலையில், கோவையில் நடக்க இருந்த 7ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்திற்கு பெரும் கூட்டங்களோ, எதிர்பார்ப்புகளோ நடக்காது என கோவை தேமுதிக தலைமைக்கு செய்தி அனுப்பியது.
இதனாலேயே 7ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தை ரத்து செய்திருக்கிறது தேமுதிக தலைமை.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?