கேப்புடன் அவர்களே என்ன திகைச்சுப்போய் நின்னூட்டீங்க."தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்னாடி, இந்த ஜெயலலிதா மம்மி, வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுட்டாங்க. அதுவும் அத்தனை தொகுதிக்கும் சேர்த்து அப்படி"னு கிர்ர்ரடித்து இருக்கீங்களா?
அங்க பாருங்க... போன தேர்தலை புறக்கணிச்ச வைகோ-கூட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டாரு... நீங்க என்ன பண்றதா உத்தேசம்?
"அன்புச்சகோதரி-னு நினைச்ச அம்மா மதிக்கல" அப்படினு சொல்லிட்டு, கலைஞர் வாழ்க கோஷம் போட முடிவு பண்ணி, மஞ்சத்துண்ட போட கிளம்பிறாதீங்க. அப்புறம் உங்கள கறுப்பு எம்ஜிஆர்-னு மக்கள் சொல்லமாட்டாங்க. "கறுப்பு ராமதாஸ்"-னு தான் கூப்பிடுவாங்க. அந்த தமிழ்க்குடிதாங்கி தான், அம்மா திண்ணை இல்லைனா அய்யா திண்ணைனு விலாசத்தை டக்குனு மாத்திடுவாரு.
திமுக-காரங்க எல்லாம் மங்காத்தா பாணியில் உள்ளே- வெளியே ஆடிகிட்டு இருக்கிறதாலே, எல்லா தொகுதியிலையும் உங்களையே நிறுத்தி, உங்கள காமெடி பீஸா மாத்திடுவாங்க.(போன தேர்தலில் வல்லரசா இருந்த உங்கள, இந்த தேர்தலுக்கு வடிவேலு ரேஞ்சுக்கு மாத்தியிடுவாங்க)
அப்புறம் அவுங்க சொன்னாங்க- இவுங்க சொன்னாங்க-னு னு காங்கிரஸ் பின்னாடி போயிடாதீங்க. அப்புறம் "கூடாநட்பு - அத்தியாயம் இரண்டு" உங்கள வெச்சு நடந்திடும்.
காங்கிரஸ்காரங்க சண்டையில கிழியாத சட்டை இதுவரைக்கும் கண்டுபுடிக்கவே இல்லைங்கிறதால, உங்க சட்டையை இழுத்து விளையாட பாக்குறாங்க.(சீமான் வேற காத்துகிட்டு இருக்காரு)
அந்த ஈவி"கேஸ்" பேச்சை நம்பி போனா அப்புறம் ரணகளம் தான். அவருக்கு யாராவதை உசுப்பேத்தி, அப்புறம் தேரை இழுத்து தெருவுல உடுற விளையாட்டு ரொம்ப புடிக்குங்க.
காங்கிரஸ் கூட கூட்டணி வெச்சா "கறுப்பு சிரஞ்சீவி"னு பெயர் வாங்க மட்டுமே முடியும். நல்லா யோசிச்சு பாருங்க. உங்க தம்பி விசய் கூட அவமானப்பட்டு திரும்ப அம்மாகிட்ட வந்து, அணிலா மாறிட்டாரு.
அதனால வேக,வேகமா தனியா நிக்கப்போறேன்னு வீறாப்பா கிளம்பிடாதீங்க. யாவாரத்துல லாபம் பாக்குற சமயத்துல மறுபடியும் ஆரம்பத்துல இருந்து வர உங்க ஆளுக யாருக்கும் விருப்பமும் இல்லை. தெம்பும் இல்லை.(முன் ஜா"மீன்" இப்போது விற்கப்படுவது இல்லை)
உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்த வரை, மாநிலத்தில் ஆளும்கட்சிதான் பெரும்பாலான இடங்களில் ஜெயிக்கும் என்பது எழுதப்படாத விதி.(இந்த விதி மாநில தேர்தல் "கமிஷனின்" அங்கீகாரம் பெற்றது)
அங்கொரு கட்சியும், இங்கொரு கட்சியும் இருந்தால் அந்த உள்ளாட்சித்தலைவர் தூக்கப்படுவார் அல்லது தாக்கப்படுவார் என்பது உலகமறிந்த உண்மையோ உண்மை.
அதனால மானம் மாரியாத்தா..,வெட்கம் வேலாயுதம்.., சூடு சூலாயுதம் எல்லாத்தையும் கழட்டி வைச்சுட்டு., அம்மா கொடுக்குற சீட்டை வாங்குங்க.
மாநகராட்சியோ, நகராட்சியோ அம்மா கொடுக்கிற சீட்டு என்பது சீட்டு கணக்கு அல்ல. பதவி கணக்கு. நிச்சயம் ஜெயிப்பீர்கள்.
ஜெயிச்ச பிறகு வேணா கொஞ்சம் தெம்பா அம்மா கூட "கலாட்டா அரசியல்" நடத்தி பார்க்கலாம். அம்மா பயந்தா தொடரலாம். இல்லையென்றால் இருக்கவே இருக்கான் நம்ம வாசிம்கான்.(இப்ராஹிம் ராவுத்தர் துணை)
ஆனா கடைசி வரைக்கும் அம்மா கூட இருந்தா ஆப்பு தான். அடுத்த "கறுப்பு வைகோ" நீங்கதான்.
சினிமாவுல சுழண்டு, சுழண்டு சுனாமி மாதிரி, கால் விளையாடு காட்டுற உங்கள இந்த மாதிரி தலைக்கவுந்து பாக்குறதுக்கு சங்கடமா இருந்துச்சுங்க.
அதுதான் நம்ம மூளைக்கு எட்டின மாதிரி ஆலோசனை சொல்லவந்தேங்க.
டிஸ்கி:
கறுப்பு நிலா நீதான் கலக்குவதேன்... துளித்துளியாய் கண்ணீர் விழுவது ஏன்?
இந்த விஜயகாந்த் பட பாடலை பதிவின் பொருத்தமான இடத்தில் பொருத்திக்கொள்ளவும்.
http://dinasarinews.blogspot.com
http://dinasarinews.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?