Wednesday, 28 August 2013

சோனியாகாந்தியின் செல்போன் திருடு போய்விட்டது hospital soniya gandhi cellphone theft

- 0 comments
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடந்த திங்கட்கிழமை உணவு பாதுகாப்பு மசோதா விவாதத்தில் பங்கேற்றார். இரவு பாராளுமன்றத்தில் இருந்தபோது, சோனியா காந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மசோதா மீதான ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் பாதியிலேயே எழுந்து வெளியே வந்தார். 
பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை முடிந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை சோனியா வீடு திரும்பினார். அப்போது கைப்பையில் இருந்த அவரது செல்போன் காணாமல் போனதை அறிந்து திடுக்கிட்டார்.

அதுவிலை உயர்ந்த பிளாக் பெர்ரி செல்போன் அந்த எண்ணுக்கு போன் செய்தால் ‘சுவிட்ச் ஆப்’ என்று வருகிறது. எனவே அதை யாரோ திருடிச் சென்று விட்டார்கள் என்பது உறுதியாகி உள்ளது.
சோனியாகாந்தியின் போனை தேடும் பணியில் அவரது சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் சிக்னல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே கடைசியாக அந்த போனுக்கு சிக்னல் தொடர்பு கிடைத்த இடத்தின் சுற்று வட்டாரத்தில் அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.

திங்கட்கிழமை காலை பாராளுமன்ற அலுவலில் பங்கேற்ற சோனியாகாந்தி, பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகம், அங்குள்ள அவரது அறை ஆகிய இடங்களுக்கு சென்றார்.
பின்னர் ஆஸ்பத்திரிக்கு சென்று செவ்வாய்க்கிழமை காலை அவர் வீடு திரும்பும் வரை சென்ற இடங்களில் எல்லாம் செல்போன் இருக்கிறதா? என்று அதிகாரிகள் தேடினார்கள். தொடர்ந்து தேடுதல் வேட்டையும், விசாரணையும் தீவிரமாக நடந்து வருகிறது.
[Continue reading...]

பட்டப்பகலில் ஏ.டி.எம். வேனில் இருந்து 3.80 கோடி கொள்ளை Rs 3.80 crores looted from ATM Van

- 0 comments

மும்பையில் பட்டப்பகலில் ஏ.டி.எம். வேனில் இருந்து 3.80 கோடி கொள்ளை Rs 3.80 crores looted from ATM Van in Mumbaiமும்பை நகரின் தானே பகுதியில் பட்டப்பகலில் ஏ.டி.எம். வேனில் இருந்து ரூ.3.80 கோடியை சிலர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சினிமாவில் வருவதைப் போன்ற இந்த பரபரப்பு சம்பவம் தொடர்பாக மும்பை போலீசார் கூறியதாவது:-

தானே அருகே உள்ள நலசோபரா மாவட்டம், பதங்கர் பூங்கா பகுதியின் ஆக்சிஸ் பேங்க் ஏ.டி.எம்.மிற்கு நேற்று மாலை 3.30 மணியளவில் ஏ.டி.எம். இயந்திரங்களுக்கு பணம் போடும் பாதுகாப்பு வாகனம் பணத்துடன் வந்தது.

ஏ.டி.எம். வாகனம் அங்கு எந்த நேரத்திற்கு வரும்? என்பதை முன்கூட்டியே நோட்டமிட்டு வைத்திருந்த ஒரு கும்பல் குவாலிஸ் காரில் தயாராக ஏ.டிஎம். அருகே காத்திருந்தது.

பணம் போடும் வாகனம் ஏ.டி.எம். வாசலருகே வந்து நின்றதும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கதவை திறந்துக் கொண்டு இறங்கினார். தயாராக காத்திருந்த கும்பலை சேர்ந்த சிலர், கையில் ஹாக்கி மட்டைகளுடன் வாகனத்தில் இருந்தவர்களை சரமாரியாக தாக்கினர்.

வங்கி ஊழியர்கள் அவர்களுடன் மோதிக்கொண்ட இருந்த வேளையில் மற்ற சிலர் வாகனத்துக்குள் ஏறி, உள்ளே இரந்த பணப்பெட்டிகளை தயாராக காத்திருந்த காரில் ஏற்றிக்கொண்டு சில நிமிடங்களில் தப்பித்தலைமறைவாகி விட்டனர்.

வாகனத்தில் இருந்த மொத்த பணம் ரூ.3 கோடியே 80 லட்சம் என தெரிய வந்துள்ளது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது .

இவ்வாறு போலீசார் கூறினார்.

[Continue reading...]

நவநீதம் பிள்ளையை திருமணம் செய்ய தயார் Navaneetham pillai ready to get married sri lanka minister speech

- 0 comments

நவநீதம் பிள்ளையை திருமணம் செய்ய தயார்: இலங்கை மந்திரி திமிர் பேச்சு Navaneetham pillai ready to get married sri lanka minister speech 

இறுதிக்கட்ட போரில் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை சென்றுள்ளார். அவர் வருகைக்கு சிங்கள வெறியர்களும், புத்தபிட்சுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், சிங்கள மந்திரி மேர்வின் சில்வா அவரை அவமதிக்கும் வகையில், நவநீதம்பிள்ளையை திருமணம் செய்ய தயாராக இருப்பதாக திமிருடன் கேலி கிண்டலாக பேசியுள்ளார். ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், இலங்கை குவேனியை விஜயனுக்கு திருமணம் செய்து வைத்தது போன்று நவநீதம்பிள்ளை விரும்பினால் நாளையே அவரை திருமணம் செய்ய தயாராக இருக்கிறேன் என்றார்.

மேலும் அவர் கூறும்போது, கிறிஸ்துவுக்கு முன்னரே உலகத்துடன் இலங்கை தொடர்பு கொண்டிருந்தது. ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடிக்கும் முன்னரே இலங்கையில் பறக்கும் எந்திரம் பயன்படுத்தப்பட்டதாக நூல்களில் கூறப்பட்டுள்ளது. வரலாற்றை கற்பிக்கும் நோக்கில் என்னுடன் அவர் இலங்கையை சுற்றி பார்க்க வர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

 

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger