Home
»
மும்பை
» பட்டப்பகலில் ஏ.டி.எம். வேனில் இருந்து 3.80 கோடி கொள்ளை Rs 3.80 crores looted from ATM Van
பட்டப்பகலில் ஏ.டி.எம். வேனில் இருந்து 3.80 கோடி கொள்ளை Rs 3.80 crores looted from ATM Van
மும்பையில் பட்டப்பகலில் ஏ.டி.எம். வேனில் இருந்து 3.80 கோடி கொள்ளை Rs 3.80 crores looted from ATM Van in Mumbaiமும்பை நகரின் தானே பகுதியில் பட்டப்பகலில் ஏ.டி.எம். வேனில் இருந்து
ரூ.3.80 கோடியை சிலர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியது.
சினிமாவில் வருவதைப் போன்ற இந்த பரபரப்பு சம்பவம் தொடர்பாக மும்பை போலீசார் கூறியதாவது:-
தானே அருகே உள்ள நலசோபரா மாவட்டம், பதங்கர் பூங்கா பகுதியின் ஆக்சிஸ்
பேங்க் ஏ.டி.எம்.மிற்கு நேற்று மாலை 3.30 மணியளவில் ஏ.டி.எம்.
இயந்திரங்களுக்கு பணம் போடும் பாதுகாப்பு வாகனம் பணத்துடன் வந்தது.
ஏ.டி.எம். வாகனம் அங்கு எந்த நேரத்திற்கு வரும்? என்பதை முன்கூட்டியே
நோட்டமிட்டு வைத்திருந்த ஒரு கும்பல் குவாலிஸ் காரில் தயாராக ஏ.டிஎம்.
அருகே காத்திருந்தது.
பணம் போடும் வாகனம் ஏ.டி.எம். வாசலருகே வந்து நின்றதும் பாதுகாப்பு அதிகாரி
ஒருவர் கதவை திறந்துக் கொண்டு இறங்கினார். தயாராக காத்திருந்த கும்பலை
சேர்ந்த சிலர், கையில் ஹாக்கி மட்டைகளுடன் வாகனத்தில் இருந்தவர்களை
சரமாரியாக தாக்கினர்.
வங்கி ஊழியர்கள் அவர்களுடன் மோதிக்கொண்ட இருந்த வேளையில் மற்ற சிலர்
வாகனத்துக்குள் ஏறி, உள்ளே இரந்த பணப்பெட்டிகளை தயாராக காத்திருந்த காரில்
ஏற்றிக்கொண்டு சில நிமிடங்களில் தப்பித்தலைமறைவாகி விட்டனர்.
வாகனத்தில் இருந்த மொத்த பணம் ரூ.3 கோடியே 80 லட்சம் என தெரிய வந்துள்ளது.
கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு
வருகிறது .
இவ்வாறு போலீசார் கூறினார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?