Wednesday, 28 August 2013

சோனியாகாந்தியின் செல்போன் திருடு போய்விட்டது hospital soniya gandhi cellphone theft

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடந்த திங்கட்கிழமை உணவு பாதுகாப்பு மசோதா விவாதத்தில் பங்கேற்றார். இரவு பாராளுமன்றத்தில் இருந்தபோது, சோனியா காந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மசோதா மீதான ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் பாதியிலேயே எழுந்து வெளியே வந்தார். 
பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை முடிந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை சோனியா வீடு திரும்பினார். அப்போது கைப்பையில் இருந்த அவரது செல்போன் காணாமல் போனதை அறிந்து திடுக்கிட்டார்.

அதுவிலை உயர்ந்த பிளாக் பெர்ரி செல்போன் அந்த எண்ணுக்கு போன் செய்தால் ‘சுவிட்ச் ஆப்’ என்று வருகிறது. எனவே அதை யாரோ திருடிச் சென்று விட்டார்கள் என்பது உறுதியாகி உள்ளது.
சோனியாகாந்தியின் போனை தேடும் பணியில் அவரது சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் சிக்னல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே கடைசியாக அந்த போனுக்கு சிக்னல் தொடர்பு கிடைத்த இடத்தின் சுற்று வட்டாரத்தில் அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.

திங்கட்கிழமை காலை பாராளுமன்ற அலுவலில் பங்கேற்ற சோனியாகாந்தி, பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகம், அங்குள்ள அவரது அறை ஆகிய இடங்களுக்கு சென்றார்.
பின்னர் ஆஸ்பத்திரிக்கு சென்று செவ்வாய்க்கிழமை காலை அவர் வீடு திரும்பும் வரை சென்ற இடங்களில் எல்லாம் செல்போன் இருக்கிறதா? என்று அதிகாரிகள் தேடினார்கள். தொடர்ந்து தேடுதல் வேட்டையும், விசாரணையும் தீவிரமாக நடந்து வருகிறது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger