கவர்ச்சிதான் என் மூலதனம்… நான் அப்படித்தான் நடிப்பேன்… இலியானா
by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,
டெல்லி: நான் எப்போதுமே கவர்ச்சியை நம்பியே சினிமாவில் இருக்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகை இலியானா. மசாலாப் படங்களில் நடிப்பதுதான் தனக்கு நிறைய பிடித்திருப்பதாகவும் கூறும் இலியானா, வழக்கமான படங்களை விட கமர்ஷியல் படங்கள்தான் தனது விருப்பம் என்றும் கூறியுள்ளார். இந்தியிலும் இப்போது நடித்து வருகிறார் இலியானா. பர்ஃபிதான் அவரது முதல் படம். தற்போது பதா போஸ்டர் நிகலா ஹீரோ என்ற புதிய இந்திப் படத்தில் நடித்து வருகிறார் இலியானா. இதில் அவரது ரோலின் பெயர் கம்ப்ளெயின்ட் காஜல் என்பதாம்.
கவர்ச்சிதான் முக்கியம்
பாலிவுட்டில் கவர்ச்சிக்குத்தான் பிரதான இடம் இருப்பதாக கூறும் அவர் அதில் தவறு இல்லை என்றும் கூறுகிறார். பாலிவுட்டில் ஜொலிக்க வேண்டும் என்றால் கவர்ச்சி கண்டிப்பாக அவசியம். அது இல்லாமல் முடியவே முடியாது.
வித்யாபாலன் போல
என்னால் வித்யா பாலன் போல நடித்துக் கொண்டிருக்க முடியாது. வித்யாபாலன் பெரிய நடிகை, சிறந்த நடிகை. அவருக்கு கவர்ச்சி தேவையில்லை. ஆனால் என்னால் அப்படி இருக்க முடியாது. கவர்ச்சிதான் எனது பலமே .
கவர்ச்சியை நம்பியுள்ளேன் எனக்கு கவர்ச்சிதான் சரிப்பட்டு வரும். பிற நடிகைகள் குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் நான் கவர்ச்சியை பிரதானமாக நம்பியுள்ளேன். இதைச் சொல்ல நான் வெட்கப்படவில்லை
கமர்ஷியல் படங்கள் கவர்ச்சியாக இருந்தால், படத்திலும் நீங்கள் நன்றாகத் தெரிவீர்கள். நான் தெலுங்கில் கவர்ச்சிகரமான, கமர்ஷியலான ரோல்களில்தான் நிறைய நடித்துள்ளேன். இந்தியிலும் அதுபோலவே நடிப்பேன். அதில் எனக்கு சிரமம் இல்லை என்கிறார் இலியானா.
.
Show commentsOpen link