Saturday, 21 September 2013

ஜெயலலிதா பாடலுக்கு நடனம் ஆட தயாராகும் ஹன்சிகா hansika dance for jeyalalitha song

ஜெயலலிதா பாடலுக்கு நடனம் ஆட தயாராகும் ஹன்சிகா

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் ஜெயலலிதா பாடல்களுக்கு நடனம் ஆடுகிறாராம் ஹன்சிகா. பிரம்மாண்டமாக இன்று முதல் 24ம் திகதி வரை நடைபெறுகிறது இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா. இந்த விழாவில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகைச் சேர்ந்தவர்கள் கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்த உள்ளனர். இந்த விழாவில், ஜெயலலிதா திரையில் நடனமாடிய 5 பாடல்களை மிக்ஸ் செய்து ஆடுகிறார் ஹன்சிகா. ரவிச்சந்திரன் – ஜெயலலிதா நடித்த நான் படத்தில் இருந்து ஒரு பாடல், நீ வர வேண்டும் பாடல் உள்பட 5 பாடல்களை இதற்காக மிக்ஸ் செய்துள்ளனர். ஹன்சிகாவுடன் சேர்ந்து சிம்பு ஆடுகிறார் என தகவல்கள் பரவின. ஆனால் உண்மையில் ஹன்சிகாவுடன் ஆடப்போவது நடன இயக்குநர் ராபர்ட் தானாம். ஜெயலலிதா முன்னிலையில் நன்றாக ஆட வேண்டுமே என பயம் கலந்த மகிழ்ச்சியில் இருக்கிறாராம் ஹன்சிகா.

Show commentsOpen link

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger