Wednesday, 16 April 2014

ஒரே பாட்டில் லிப் லாக் முத்த மழை: ஜெய் ஆகாஷின் காதல் விளையாட்டு!

- 0 comments




அகத்தியன் இயக்கிய ராமகிருஷ்ணா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜெய் ஆகாஷ். அதற்குபிறகு அவர் நடித்த எந்த படமும் ஓடவில்லை. இதனால், தானே சொந்தமாக படம் தயாரித்து இயக்கத் தொடங்கினார். அதிலும் ஒரு படம்கூட தேறவில்லை. இப்போது, காதலுக்கு கண்ணில்லை என்ற படத்தை இயக்கி இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

இதன் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. அதில் திரையிடப்பட்ட இரண்டு பாடல்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நான் சிவப்பு மனிதன் படத்தில் விஷால் லட்சுமிமேனனுக்கு கொடுத்த ஒரே ஒரு லிப் லாக் முத்தக்காட்சிக்கே நாடே அதகளப்பட்டது. ஆனால் இந்தப் படத்தில் ஜெய் ஆகாஷ் ஒரே பாடல் காட்சியில் ஹீரோயின் அலிஷா தாஸ் மற்றும் நிஷா ஆகியோருக்கு காட்சிக்கு காட்சி லிப் லாக் முத்த மழையாக பொழிகிறார். அதுவும் காருக்குள்ளேயே ஒரு பாடல் காட்சியை படமாக்கி இருக்கிறார்கள். பார்த்தாலே முகம் சுழிக்க வைக்கிற மாதிரி மூவ்மெண்ட்சுகளை வைத்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் வாழ்க்கையில் போராடி ஜெயிக்கும் ஒரு பெண்ணின் கதை என்று டிரைலரில் சொல்கிறார்கள். இரண்டு நிமிட டிரைலரில் நான்கு லிப் லாக் முத்த காட்சிகள் இருக்கிறது. மற்றபடி பெண்களை போட்டு அடிஅடியென்று அடிக்கிறார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தேறவேண்டிய நேரத்தில் இதுபோன்ற குறுக்குவழியை ஜெய்ஆகாஷ் ஏன் தேர்ந்தெடுக்கிறார் என்றுதான் தெரியவில்லை.
[Continue reading...]

பவர்ஸ்டாராக மாறிக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன்-சந்தானம்!

- 0 comments


கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் ஆடியோ விழா நடந்தபோது, தனது சார்பில் இரண்டு லாரிகளில் ஆட்களை கொண்டு வந்து இறக்கினார் பவர்ஸ்டார் சீனிவாசன். அதனால் அந்த விழா நடந்த அரங்கமே நிரம்பி வழிந்தது. விழாவில், பவர்ஸ்டாரைப் பற்றி யாராவது வாய் திறந்தாலே கைதட்டல் அரங்கை அதிர வைத்தது. அந்த அளவுக்கு அரசியல்வாதிகள் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்தார் சீனிவாசன்.

அவரையடுத்து, மான்கராத்தே படத்தின் ஆடியோ விழா நடந்தபோது, சிவகார்த்திகேயனும் தனது ரசிகர்கள் என்ற பெயரில் பெரும்படையை அடியாட்கள் ரேஞ்சுக்கு கொண்டு வந்து இறக்கியிருந்தார். இதனால் விழாவுக்கு வந்திருந்த விஐபிக்களெல்லாம் எங்கே அமர்வது என்றே தெரியாமல் அலைமோதிக்கொண்டு திரிந்தார்கள். கூடவே மீடியாவினருக்கும் பெரும் தொல்லை கொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து இப்போது சந்தானமும் அந்த வேலையை ஆரம்பித்திருக்கிறார். தான் ஹீரோவாக நடித்துள்ள வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் ஆடியோ விழாவை சமீபத்தில் சென்னையிலுள்ள தேவி தியேட்டரில் நடத்தியவர், ஒரு பெரும் கும்பலையே கொண்டு வந்து இறக்கி விட்டார். ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்டு அவர்கள் தியேட்டருக்குள் செய்த தள்ளுமுள்ளுவில் சில விஐபிக்களே உள்ளே வர முடியாமல் தடுமாறிப்போய் நின்றனர். சிலர் கீழே தள்ளியும் விடப்பட்டனர்.

இந்த செய்தி கோடம்பாக்கத்தை அச்சுறுத்தியுள்ளது. இதையடுத்து, தற்போது யாராவது நடிகர்கள், தங்கள் படங்களின் ஆடியோ விழாக்களில் கலந்து கொள்ள சினிமா விஐபிக்களை அழைக்க சென்றாலே, ஆளை விடு சாமி என்று பயந்து ஓட்டம் பிடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
[Continue reading...]

பணத்துக்காக நடித்ததை விட நட்புக்காக நடித்ததுதான் அதிகம்: சந்தானம் சொல்கிறார்

- 0 comments


சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. மற்றவர்கள் படத்தில் நடித்தபோது அந்த படத்தின் விழாக்களுக்கோ, புரமோஷனுக்கோ வராத சந்தானம் தன் படம் என்பதால் மீடியாக்களை கூப்பிட்டு கூப்பிட்டு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். "நான் பணத்துக்காக நடித்ததை விட நட்புக்காக நடித்ததுதான் அதிகம்" என்ற புதிய தகவலையும் கூறியிருக்கிறார். 

அவர் மேலும் கூறியிருப்பதாவது: நான் ஹீரோவாகவே நடிக்க ஆசைப்பட்டிருந்தால் அறை எண் 305ல் கடவுள் படத்துக்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தது அப்போதே நடித்திருப்பேன். பயந்துதான் நடிக்கவில்லை. கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்துக்கு மக்கள் கொடுத்த ஆதரவுதான் ஹீரோவாக நடிக்கும் துணிச்சலை கொடுத்தது. நான் ஹீரோவாயிட்டா காமெடியன்களுக்கு பஞ்சம் வந்திடாது. வேற ஒருத்தர் வந்து அசரடிப்பார். இப்பவே புதுசா நிறைய பேர் வந்து கலக்குறாங்க.

மற்ற படங்களோட புரமோஷனுக்கு வர்றதில்லைன்னு மைக் கிடைக்கிறவங்கதான் மேடைக்காக சொல்றாங்க. நான் நடிச்ச படத்தோட தயாரிப்பாளரோ, இயக்குனரோ சொல்லியிருக்காங்களா, ஏன்னா அவுங்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். நான் பணத்துக்காக நடிச்சதை விட நட்புக்காக நடிச்சதுதான் அதிகம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்துக்கு பிறகு ஹீரோவத்தான் தொடர்ந்து நடிப்பேன்னு நான் எங்கேயும் சொன்னதில்லை. மீண்டும் காமெடியனாகவும் நடிப்பேன்.

இவ்வாறு சந்தானம் கூறியுள்ளார்.
[Continue reading...]

மனித மாமிசம் தின்ற மிருக ' சகோதரர்கள் ; பாகிஸ்தானில் பிணங்களை தேடி அலைந்தனர்

- 0 comments



கராச்சி: சுற்றும், முற்றும் இருந்த சுடுகாட்டிற்கு சென்று பிணங்களை தோண்டி எடுத்தும், சிலரை கொலை செய்தும் மனித மாமிசம் தின்ற 2 மிருக சகோதரர்களை பாக்., போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் பக்கார் மாவட்டம், இங்குள்ள தர்யாகான் என்ற கிராமம். இங்கு ஒருவர் வீட்டில் பிண வாடை மூக்கை துளைத்தது. இது குறித்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் போலீசில் புகார் செய்யவே இந்த வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை நடத்தியது. வீட்டில் முகம்மது ஆரீப் அலி (35), முகம்மது பர்மன் அலி ( 30) ஆகிய இருவர் இருந்தனர். வீட்டின் ஒரு மறைவு அலமாரியில் 3 வயது சிறுவன் தலை இருந்தது. இதனை போலீசார் கண்டறிந்தனர். தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.


100 பேர் உடல்கள் தின்றனராம் ! இந்த விசாரணையில் " இதுவரை நாங்கள் 100 பேர் உடல்களை தின்றுள்ளோம். அக்கம் பக்கம் உள்ள இடுகாட்டில் புதைக்கப்பட்ட உடல்களை தோண்டி அதன் உடல் பாகங்களை தின்போம். என்று போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனையடுத்து இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டனர். 


இது குறித்து மாவட்ட போலீஸ் உயர் அதிகாரி அமீர் அப்துல்லா, கூறுகையில் போலீசுக்கு தகவல் கிடைத்த உடன் அந்த வீட்டில் சென்று ரெய்டு நடத்தினோம். இங்கு சில உடல் பாகங்கள், தலை, கால், கைகள் இருந்தன. முதலில் ஆரீப் அலியை கைது செய்தோம், தொடர்ந்து சகோதரரை கைது செய்தோம். அருகில் உள்ள சுடு காட்டில் சென்ற பார்த்த போது பல குழிகள் தோண்டப்பட்டது தெரியவந்தது. இந்த இருவரும் ஏற்கனவே கடந்த 2011ல் பெண் உடலை தின்ற குற்றத்திற்காக 2 ஆண்டு சிறைத்தண்டனை அநுபவித்துள்ளனர். என்றார்.


[Continue reading...]

பெங்களூர் பஸ்சில் தீ; அசாம் ரயில் ஏரியில் மூழ்கியது : பயணிகள் உயிருக்கு பாதுகாப்பு இல்லையா?

- 0 comments



புதுடில்லி : பெங்களூரு பஸ்சில் தீ விபத்து, அசாமில் பயணிகள் ரயில் ஏரியில் மூழ்கி விபத்துக்குள்ளானது என ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெற்றுள்ள விபத்துக்கள் பஸ் பயணம், ரயில் பயணம் என எதிலும் பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி உள்ளதை வெட்டவெளிச்சமாக்கி உள்ளது. பெங்களூரு விபத்தில் 6 பேர் உடல் கருகி பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். அசாம் ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். 

பெங்களூரு பஸ்சில் தீ :


கர்நாடகாவின் தாவன்கிரி பகுதியில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த தனியார் சொகுசு ஏசி பஸ்சில் திடீரென தீப்பற்றியது. இதில் 6 பயணிகள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த பஸ்சில் 29 பேர் பயணம் செய்துள்ளனர். பஸ்சில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் காயமடைந்துள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். விபத்து ஏற்பட்டவுடன் தப்பி ஓடிய டிரைவர் தலைமறைவாகி உள்ளார். கர்நாடகாவில் நடைபெறும் 3வது பஸ் விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த ஏசி பஸ்சில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகினர். 40 பேர் படுகாயம் அடைந்தனர். அதற்கு முன் பெங்களூருவில் இருந்து ஐதராபாத்திற்கு சென்ற வால்வோ பஸ்சில் ஏற்பட்ட தீ விபத்தில் 45 பேர் உயிரிழந்தனர். 

ஏரியில் மூழ்கிய ரயில் :


அசாமின் மொரிகான் மாவட்டத்தில் அஜூரி ஸ்டேஷனுக்கு அருகே பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டது. தடம் புரண்ட ரயில் அருகில் இருந்த ஏரிக்குள் மூழ்கியது. 10 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலின் 3 பெட்டிகள் ஏரிக்குள் மூழ்கியது. இதில் சுமார் 100 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஏரிக்குள் மூழ்கிய 3 பெட்டிகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ரயில் விபத்து பற்றி விபரங்கள் அறிந்து கொள்வதற்காக திமாபூர், லம்டிங் மற்றும் கவுகாத்தியில் அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பயமணிகளுக்கு பாதுகாப்பில்லையா? :


ஒரே நாளில் பஸ்சிலும், ரயிலிலும் ஏற்பட்டுள்ள விபத்துக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளன. ஏசி பஸ்களில் தீ விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழப்பதும், ரயில்கள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாவதும் தொடர் கதையாகி வருகிறது. இருப்பினும், இத்தகைய விபத்துக்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க ரயில்வே நிர்வாகமோ, சாலை போக்குவரத்து கழக நிர்வாகமும் எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கையையும் எடுத்தபாடில்லை. பாதுகாப்பில்லாத, உயிருக்கு உத்திரவாதம் இல்லாத அபாயகரமாக பயணத்தையே மக்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். எத்தனை விபத்துக்கள் ஏற்பட்டாலும், எத்தனை உயிர்கள் பலியானாலும் போக்குவரத்து நிர்வாகங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது அனைவரிடமும் அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. 

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger