அகத்தியன் இயக்கிய ராமகிருஷ்ணா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜெய் ஆகாஷ். அதற்குபிறகு அவர் நடித்த எந்த படமும் ஓடவில்லை. இதனால், தானே சொந்தமாக படம் தயாரித்து இயக்கத் தொடங்கினார். அதிலும் ஒரு படம்கூட தேறவில்லை. இப்போது, காதலுக்கு கண்ணில்லை என்ற படத்தை இயக்கி இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.
இதன் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. அதில் திரையிடப்பட்ட இரண்டு பாடல்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நான் சிவப்பு மனிதன் படத்தில் விஷால் லட்சுமிமேனனுக்கு கொடுத்த ஒரே ஒரு லிப் லாக் முத்தக்காட்சிக்கே நாடே அதகளப்பட்டது. ஆனால் இந்தப் படத்தில் ஜெய் ஆகாஷ் ஒரே பாடல் காட்சியில் ஹீரோயின் அலிஷா தாஸ் மற்றும் நிஷா ஆகியோருக்கு காட்சிக்கு காட்சி லிப் லாக் முத்த மழையாக பொழிகிறார். அதுவும் காருக்குள்ளேயே ஒரு பாடல் காட்சியை படமாக்கி இருக்கிறார்கள். பார்த்தாலே முகம் சுழிக்க வைக்கிற மாதிரி மூவ்மெண்ட்சுகளை வைத்திருக்கிறார்கள்.
இதற்கிடையில் வாழ்க்கையில் போராடி ஜெயிக்கும் ஒரு பெண்ணின் கதை என்று டிரைலரில் சொல்கிறார்கள். இரண்டு நிமிட டிரைலரில் நான்கு லிப் லாக் முத்த காட்சிகள் இருக்கிறது. மற்றபடி பெண்களை போட்டு அடிஅடியென்று அடிக்கிறார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தேறவேண்டிய நேரத்தில் இதுபோன்ற குறுக்குவழியை ஜெய்ஆகாஷ் ஏன் தேர்ந்தெடுக்கிறார் என்றுதான் தெரியவில்லை.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?