
கராச்சி: சுற்றும், முற்றும் இருந்த சுடுகாட்டிற்கு சென்று பிணங்களை தோண்டி எடுத்தும், சிலரை கொலை செய்தும் மனித மாமிசம் தின்ற 2 மிருக சகோதரர்களை பாக்., போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் பக்கார் மாவட்டம், இங்குள்ள தர்யாகான் என்ற கிராமம். இங்கு ஒருவர் வீட்டில் பிண வாடை மூக்கை துளைத்தது. இது குறித்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் போலீசில் புகார் செய்யவே இந்த வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை நடத்தியது. வீட்டில் முகம்மது ஆரீப் அலி (35), முகம்மது பர்மன் அலி ( 30) ஆகிய இருவர் இருந்தனர். வீட்டின் ஒரு மறைவு அலமாரியில் 3 வயது சிறுவன் தலை இருந்தது. இதனை போலீசார் கண்டறிந்தனர். தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.
100 பேர் உடல்கள் தின்றனராம் ! இந்த விசாரணையில் " இதுவரை நாங்கள் 100 பேர் உடல்களை தின்றுள்ளோம். அக்கம் பக்கம் உள்ள இடுகாட்டில் புதைக்கப்பட்ட உடல்களை தோண்டி அதன் உடல் பாகங்களை தின்போம். என்று போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனையடுத்து இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டனர்.
இது குறித்து மாவட்ட போலீஸ் உயர் அதிகாரி அமீர் அப்துல்லா, கூறுகையில் போலீசுக்கு தகவல் கிடைத்த உடன் அந்த வீட்டில் சென்று ரெய்டு நடத்தினோம். இங்கு சில உடல் பாகங்கள், தலை, கால், கைகள் இருந்தன. முதலில் ஆரீப் அலியை கைது செய்தோம், தொடர்ந்து சகோதரரை கைது செய்தோம். அருகில் உள்ள சுடு காட்டில் சென்ற பார்த்த போது பல குழிகள் தோண்டப்பட்டது தெரியவந்தது. இந்த இருவரும் ஏற்கனவே கடந்த 2011ல் பெண் உடலை தின்ற குற்றத்திற்காக 2 ஆண்டு சிறைத்தண்டனை அநுபவித்துள்ளனர். என்றார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?