தீபாவளிக்கு துணி–நகைகள் வாங்க போறீங்களா?: போலீசார் சொல்வதை கொஞ்சம் கேளுங்க Diwali clothes jewelry buy Are going to
இதோ..தீபாவளி நெருங்கி வந்து விட்டது. இன்னும் சரியாக ஒரு வாரம்தான். ஜாலிதான்... புத்தாடைகள் தான், பலகாரம் தான்..படார்.. படார்... பட்டாசுகளை கொளுத்த வேண்டியது தான்.
தீபாவளி பண்டிகைக்கு முன்கூட்டியே பொதுமக்கள் பலர் புத்தாடைகள், நகைகள் வாங்கி தயாராக வைத்திருந்தாலும், இன்னும் மீ(பா)திபேர் இந்த ஒரு வாரத்தில் தான் கடைகளுக்கு படையெடுப்பாங்க!
பெரிய...பெரிய ஜவுளிக் கடைகள் நிரம்பி உள்ள ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் காலையில் இருந்து இரவு 10 மணி வரை மக்கள் தலைகளாகத்தான் தென்படுகிறது. ஜனங்க நடந்து போகக்கூட முடியாத அளவுக்கு நெருக்கடி.
ஈரோடு மாநகர் பகுதி மட்டுமல்லாமல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிராமங்களில் இருந்தும் மக்கள் அலை..அலையா... வந்த வண்ணம் உள்ளனர். தங்கள் உள்ளத்தை கொள்ளை கொண்ட துணிமணிகளை உவகையுடன் செலக்ட் செய்து எடுத்துக்கொண்டு செல்கிறார்கள்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி கூட்டத்தோடு புகுந்து திருட்டு ஆசாமிகளும் தங்கள் கைக்கு கிடைச்சதை சுருட்டிக்கிட்டு போக தயாராக இருக்காங்க. மக்கள் அசந்த நேரமா... பார்த்து நகை–பணம் மற்றும் பொருட்களை அபேஸ் செய்திடுவாங்க.
இதனால் பொதுமக்கள் நலன் மீதும் அவர்களின் பொருட்கள் களவு போகாமல் இருக்க அக்கறையின் பேரிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் பகலும்–இரவிலும் ஈடுபட்டு உள்ளார்கள்.
மேலும் பொதுமக்கள் பொருட்கள் வாங்க வரும் போது விழிப்புணர்வுடன் இருக்க எச்சரிக்கை நோட்டீசுகளையும் போலீசார் பொது மக்களுக்கு வினியோகம் செய்து வருகிறார்கள்.
புது துணிகள், நகைகள் வாங்க வரும் மக்கள் தங்களின் நகை–பணத்தை பார்த்து கொள்ள வேண்டும். பஸ்சில் வரும்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி உங்கள் கவனத்தை திசை திருப்பி திருட வாய்ப்புள்ளது, கவனமாக இருக்கணும்.
திருடர்கள் உங்கள் அருகிலேயே இருந்து கொண்டு அசுத்தமான பொருட்களை தடவி கவனத்தை திசை திருப்புவார்கள் ரொம்ப கவனம்.... என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் திருட்டு ஆசாமிகள் 'டிப்–டாப்பாக' உடையணிந்து கொண்டு போலீஸ் என கூறி திருடர்கள் வர இருப்பாங்க, உங்கள் நகையினை கழற்றி கொடுங்க... காகிதத்தில் மடித்து தருகிறேன்.. என கூறி பாதுகாப்பு செய்வது போல நடிப்பாங்க...ரொம்ப உஷாராக இருக்கனும். அதே போல் திருட்டு பொம்பளைங்க பஸ்சில் கையில் குழந்தையை வைத்து கொண்டு, குழந்தைக்கு உட்கார இடம் கேட்பது போல் கவனத்தை திசை திருப்பி நகை– பணத்தை திருடிக்கிட்டு போயிடுவாங்க... கவனம் தேவை.
பணத்தை கீழே போட்டு இதோ..பாருங்க உங்கள் பணம் கீழே கிடக்கிறது என்பார்கள்.. அந்த பணத்துக்கு ஆசைப்பட்டு உங்கள் பணத்தை பறி கொடுத்து விடாதீங்க... என்றும் போலீசார் அறிவுரை கூறி உள்ளனர்.
என்ன...நீங்க இன்னிக்கு தீபாவளி துணிகள்–நகைகள் வாங்க போறீங்களா...? போலீசார் சொல்வதை கொஞ்சம் கேளுங்க!
...
shared via
[Continue reading...]