கற்பழிப்பு வழக்கில் ராஜஸ்தான் முன்னாள் மந்திரி கைது: சி.பி.ஐ. நடவடிக்கை Rajasthan ex minister arrested in harassment case CBI action
ஜெய்ப்பூர், அக். 25-
ராஜஸ்தான் மாநிலத்தல் பால்வளம் மற்றும் கதர்துறை மந்திரியாக இருந்தவர் பாபுலால் நாகர். இவர் 35 வயதுபெண் ஒருவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த செப்டம்பர் மாதம் அந்த பெண்ணை தனது பங்களாவுக்கு அழைத்து கற்பழித்ததாக புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து பாபுலால் நாகர் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்தும் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன்பின்னர் இவ்வழக்கு கடந்த 9-ம் தேதி சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் கற்பழிப்பு புகார் தொடர்பாக பாபுலால் நாகரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர். தடயவியல் பரிசோதனையும் நடத்தப்பட்டது. பின்னர் அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.
...
shared via
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?