Friday, 25 October 2013

சாலைகள் சீரமைக்கப்படும் வரை உடலுறவுக்கு தடா : கொலம்பியா மனைவிகளின் நூதன போராட்டம் columbian women follow crossed legs movement for relaying roads

சாலைகள் சீரமைக்கப்படும் வரை உடலுறவுக்கு தடா : கொலம்பியா மனைவிகளின் நூதன போராட்டம் columbian women follow crossed legs movement for relaying roads

லண்டன், அக். 26-

அர்ஜெண்டினா நாட்டில் உள்ள கொல்பியா மாகாணத்தின் பார்பகோஸ் பகுதியில் உள்ள சாலைகள், வாகனங்கள் செல்ல லாயக்கற்ற நிலையில் குண்டும் குழியுமாக உள்ளன. இதனால், சாலை விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன.

இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவசரத் தேவைக்காக நகரில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சென்றடைய சுமார் 14 மணி நேரம் ஆகிவிடுகின்றது. போகும் வழியிலேயே பல நோயாளிகள் இறந்துப் போகவும் நேரிடுகிறது.

இந்த அவலநிலையை போக்கி சாலைகளை சீரமைத்து தரும்படி பார்பகோஸ் வாசிகள் அரசு நிர்வாகத்திற்கு மனுக்களின் மூலமாகவும் போராட்டங்களின் வாயிலாகவும் இதுவரை நடத்திய அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியில் முடிந்தன.

இதனால், கொதித்துப் போன இப்பகுதியில் வசிக்கும் பெண்கள், நீங்கள் என்ன செய்வீர்களோ.... ஏது செய்வீர்களோ..? எங்களுக்கு தெரியாது. நம் ஊரில் உள்ள சாலைகள் சீர் செய்யப்படும் வரை படுக்கையில் கிட்ட சேர்க்க மாட்டோம் என கணவன்மார்களுக்கு தடை விதித்துள்ளனர்.

கிராஸ்ட் லெக்ஸ் மூவ்மெண்ட் (பின்னிய கால்கள் போராட்டம்) எனப்படும் இதுபோன்ற போராட்டத்தை கடந்த 2011-ம் ஆண்டும் இப்பகுதி பெண்கள் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

...

shared via

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger