அமெரிக்காவில் 75 இடங்களில் ரிலீஸாகும் முதல் தமிழ் படம் அஜீத்தின் ஆரம்பம்!
தமிழ்ப் படங்களுக்கு வெளிநாட்டுகளில் அந்த அளவுக்கு வியாபாரம் இல்லை என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாய் அங்கும் மார்க்கெட் உருவாகிக்கொண்டு வருகிறது. சிவாஜி, எந்திரன் போன்ற படங்கள் இங்கிலாந்தில் நல்ல கலெக்சனைப் பெற்றன.
அமெரிக்காவில் தமிழ் படங்கள் ரிலீஸாகும் இடங்கள் 20-30 ஆகத்தான் இருக்கும். அதுவும் பெரிய நட்சத்திரங்களின் படம் மட்டுமளே ரிலீஸாகும். தமிழர்கள் அதிகமாய் வசிக்கும் நகரங்களில் உள்ள தியேட்டர்களை தேர்ந்தெடுத்து ரிலீஸ் செய்வார்கள்.
சமீப காலமாய் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்போது ரிலீஸாகவிருக்கும் ஆரம்பம் படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு 75 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவிருப்பதாக வட அமெரிக்க பகுதியின் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முந்தைய சாதனை எந்திரன் படமாகும். தமிழ் – இந்தி இரண்டு மொழிகளிலும் சேர்த்து 85 திரையரங்குகளில் ரிலீஸானாலும் தமிழில் மட்டும் 63 இடங்களில் ரிலீஸாகியிருந்தது. அதைத் தாண்டி இப்போது ஆரம்பம் 75 இடங்களில் ரிலீஸாகவிருக்கிறது.
விஜய் நடித்த தலைவா படம் அமெரிக்காவில் கிட்டத்தட்ட 54 இடங்களில் ரிலீஸானது.
The post
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?