Friday, 12 August 2011

தண்ணி பிசினஸ்

- 0 comments


சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசின் கொள்கை முடிவுக்கு உண்மையிலேயே இது தோல்வி தான். ஆனாலும், "கோர்ட் தீர்ப்பு எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்வோம்" என்று தீர்ப்புக்கு முந்தைய தினம் முதல்வர் பேசியது சமாளிபிகேஷன்! "நெருப்புத் தீர்ப்பை பஞ்சுப் பொதிகளால் அணைக்கலாம் என்று பகற் கனவு காணாதீர்!" என்று தனது வழக்கமான சந்தில் சிந்து பாடும் முயற்சியில் இறங்கியுள்ளார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. கூடவே நைஸாக இது தங்களுக்குக் [...]

http://thevadiyal.blogspot.com/




  • http://thevadiyal.blogspot.com/


  • [Continue reading...]

    ஆழி பெரிது

    - 0 comments


    தமிழ் வேதம் – தொடர்ச்சி தமிழர்களின் வேதங்கள் வேறு ஆரியர்களின் வேதங்கள் வேறு. தமிழர்களின் தொன்மையான நான்கு வேதங்களை கடல் கோள் அழித்துவிட்டது. இதையே ஆரியர்கள் கண்டு தங்களிடமும் நான்கு வேதங்கள் இருப்பதாக உருவாக்கிக் கொண்டனர். இதுதான் தமிழ் புத்தெழுச்சியாளர்கள் கூறியது. இதற்கு என்ன ஆதாரம்? அன்று இன்றளவுக்கு புவியியல் துறை வளரவில்லை. கடல் கொண்ட ஒரு பெரிய நிலப்பரப்பு குறித்த ஐதீகம் தியஸோபிக்கல் சொஸைட்டி என்கிற பிரம்மஞான சபையினரால் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த நம்பிக்கை தமிழ் இனவாத [...]

    http://thevadiyal.blogspot.com/




  • http://thevadiyal.blogspot.com/


  • [Continue reading...]

    தமிழகத்தை வாழ வி���ுவதில்லை என்று ��த்திய அரசு தீவிரமாக செயல்படுகிற��ு- ஜெ. ஆவேசம்

    - 0 comments


    தமிழகத்தை வாழ விடுவதில்லை, அதை அனுமதிப்பதில்லை என்று மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்திற்கு மத்திய அரசு இழைத்து வரும் அநீதியை தகர்த்து தமிழக மக்களுக்கு நாங்கள் நன்மை செய்வோம் என்று முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக கூறியுள்ளார்.

    தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. அப்போது சிபிஐ உறுப்பினர் ஆறுமுகம் பேசுகையில்,

    வால்பாறையில் இரவில் யானைகள் பயம் உள்ளது. தீப்பந்தங்களை காட்டினால் யானைகள் ஓடிவிடும். இதற்காக அங்குள்ள மக்களுக்கு கூடுதல் மண்எண்ணெய் வழங்க வேண்டும் என்றார்.

    அப்போது எழுந்த முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசு என்ன காரணத்தினாலோ கடந்த ஜூன் மாதத்திலிருந்து தமிழகத்துக்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை குறைத்து வருகிறது. இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதினோம். நேரிலும் வலியுறுத்தினோம். 

    ஆனால் என்ன காரணத்தினாலோ நமக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறைந்து வருகிறது என்றார்.

    பின்னர் தொடர்ந்து பேசிய ஆறுமுகம், தமிழகத்தின் வளர்ச்சிக்கு இதன் மூலம் மத்திய அரசு தடையாக இருப்பதாகத்தான் தெரிகிறது. இதை எதிர்த்து இடதுசாரிகள் போராடி வருகிறோம். மக்கள் தான் வருவதில்லை என்றார். மக்கள் வருவதில்லை என்று அவர் கூறியதைக் கேட்டு உறுப்பினர்கள் வாய் விட்டுச் சிரித்தனர்.

    பின்னர் பேசிய சிபிஎம் உறுப்பினர் பாலபாரதி, உறுப்பினர் ஆறுமுகம் சொல்வது தவறு. இடதுசாரிகள் கடந்த 5 ஆண்டுகளாக மக்களை திரட்டி போராடி வந்ததால்தான் ஆட்சி மாற்றமே ஏற்பட்டது. எனவே மக்கள் வரவில்லை என்று கூற வேண்டாம் என்றார்.

    மீண்டும் தனது பேச்சைத் தொடர்ந்த ஆறுமுகம், நாம் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் வரவில்லை என்று தான் கூறினேன். ஆட்சி மாற்றத்துக்கு முக்கிய காரணம் உச்சபட்ச இமாலய ஊழலும், முறைகேடுகளும்தான் என்றார்.

    இதையடுத்து குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, மக்களின் உரிமைக்காக மத்திய அரசை எதிர்த்து நாங்களும் போராடுகிறோம். நீங்களும் வாருங்கள். நீங்கள் எதிர்பார்ப்பதைவிட அதிகமாக மக்கள் நிச்சயம் வருவார்கள் என்று தெரிவித்தார்.

    இதைடுத்துப் பேசிய ஆறுமுகம், இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம். இடதுசாரிகளுடன் முதல்வர் சேர்ந்து போராடினால் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார்.

    பின்னர் பேசிய சிபிஎம் தலைவர் செளந்தரராஜன், மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை பாரபட்சத்துடன் நடத்துகிறது என்றார்.

    அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்து வருவது மட்டுமல்ல, நமது தேவைக்கு வெளியில் வாங்க விரும்பினாலும் அதற்கு அனுமதி வழங்குவதில்லை.

    மண்ணெண்ணெய் மட்டுமல்ல தமிழகத்துக்கு தேவையான டி.ஏ.பி. உரத்தையும் போதுமான அளவுக்கு வழங்க வில்லை. பிரதமரிடம் வலியுறுத்தியும் கூட மத்திய அரசு இந்த வகை உரத்தை குறைத்துதான் வழங்குகிறது. 

    நான் பலமுறை தெரிவித்து விட்டேன். மாநில அரசின் நிதி ஆதாரம் மிகக் குறைவாக இருக்கிறது. அதை வைத்து எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு செய்து இருக்கிறோம். மத்திய அரசும் போதிய நிதி வழங்கவில்லை. நிதி பிரச்சனை மட்டுமல்ல மாநில அரசின் பல்வேறு அதிகாரங்களை வருவாய்களை அத்தனைஇனங்களிலும் மத்திய அரசு பறித்துவிட்டது. தற்போது மாநில அரசுக்கு வருவாய் வரக்கூடிய ஒரே இனம் வாட் வரி விதிப்பு தான்.

    இதை வைத்துக்கொண்டு இத்தனை திட்டங்களையும் உருவாக்கி செயல்படுத்தி வருகிறோம். இதை விட கூடுதலாக செய்ய வேண்டும் என்ற மனமும் ஆசையும் எங்களுக்கு உண்டு. நீங்கள் முன் வைக்கிற கோரிக்கைகளை விட ஆயிரம் மடங்கு அதிகம் செய்ய வேண்டும் என்று எண்ணம் உண்டு. ஆனால் நிதி தட்டுப்பாடு காரணமாக எங்கள் கைகள் கட்டுப்பட்டுள்ளன. அந்த கட்டுப்பாட்டை தகர்த்து பகீரத முயற்சி செய்து தமிழக மக்களுக்கு நிச்சயம் நன்மை செய்வோம்.

    மத்திய அரசு எத்தனை தடைகளை விதித்தாலும் அந்த தடைகளை எல்லாம் தகர்த்து தமிழக மக்களுக்கு நன்மை செய்வோம்.

    தமிழ்நாட்டை வாழ விடுவதில்லை என்று மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதை சொல்வதற்கு நான் வேதனைப்படுகிறேன். ஆனால் அதுதான் உண்மைா. தமிழகம் வாழக் கூடாது என்று மத்திய அரசு கருதுகிறது. அப்படித்தான் அது செயல்படுகிறது. 

    எனவே ஜனநாயகத்துக்குட்பட்டு தமிழக மக்களுக்கு நிச்சயம் நன்மை செய்தே தீருவோம் என்றார். இதைக் கேட்டதும் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் 

    உறுப்பினர்கள் மேசைகளைப் பலமாக தட்டி முதல்வரின் பேச்சை வரவேற்றனர்.

    அடுத்தடுத்து மத்திய அரசுக்கு கடும் கண்டனம்
    நேற்றுதான் சட்டசபையில் கோத்தபயாவின் பேச்சைக் குறிப்பிட்டு முதல்வர் ஜெயலலிதா மிகக் கடுமையாக பேசினார். அப்போது மத்திய அரசு வாய் மூடி மெளனமாக இருப்பதால்தான் கோத்தபயா போன்றவர்கள் தமிழகத்தை இழித்துப் பேசும் நிலை ஏற்பட்டுள்ளது என்று மத்திய அரசை மிகக் கடுமையாக சாடியிருந்தார்.

    இந்த நிலையில் மத்திய அரசு தமிழகத்தை வாழ விடக் கூடாது என்று செயல்பட்டு வருவதாக மிகக் கடுமையான குற்றச்சாட்டை அவர் வைத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.








    http://girlsstills.blogspot.com/



  • http://girlsstills.blogspot.com/


  • [Continue reading...]

    சமச்சீர் கல்விய��ப் படித்தால் கிளர்க் வேலைக்கு்த��ன் போகலாம்- டாக்��ிட்டரு விஜயகாந்த்

    - 0 comments


     சமச்சீர் கல்வியைப் படித்தால் கிளர்க்குகளை தான் உருவாக்கலாம். அப்துல் கலாம் போன்றவர்களை உருவாக்க முடியாது என்று தேமுதிக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

    சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    நகர்ப்புறங்களில் வசதிகள் அதிகமுள்ள பள்ளிகளில் படித்த பிள்ளைகள் கூறுகையில், நாங்கள் 4-ம் வகுப்பில் படித்தது தான் தற்போது 8-ம் வகுப்பு பாடத்தில் உள்ளது. இதில் என்ன புதிதாக கற்றுக்கொள்ளப் போகிறோம் என்கின்றனர்.

    இது ஒரு புறம் இருக்க மறு புறம் கிராமப்புற பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 8-ம் வகுப்பு பாடப்புத்தகம் படிப்பதற்கு கடினமாக உள்ளது. பொதுப்பாடத்திட்டதின்படி தேர்வு வைத்தால் நகர்ப்புற மாணவர்கள் எளிதில் தேர்வாகி மேல் படிப்புக்குச் சென்றுவிடுவார்கள். ஆனால் கிராமப்புற மாணவர்களால் அது முடியாது. இதை சமூக நீதி என்று எவ்வாறு கூற முடியும்?

    தற்போதுள்ள பாடத்திட்டத்தை படித்தால் கிளர்க்குகளை உருவாக்கலாம். ஆனால் அப்துல் கலாம் போன்றவர்களை உருவாக்க முடியாது. 

    உண்மையான சமச்சீர் கல்வியைக் கொண்டு வர வேண்டுமானால் முதலில் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.

    வண்டிக்கு முன்புதான் குதிரையை மாட்ட வேண்டுமே தவிர, குதிரைக்குப் பின்னால் வண்டி இழுத்துக் கொண்டு ஓடுவது சரியாக வராது. தற்போதைய பொதுப் பாடத்திட்டம் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.

    நில மீட்பு நடவடிக்கைளால் மக்கள் நிம்மதி பெருமூச்சு
    கடந்த ஆட்சியில் திமுகவினர் சட்ட விரோதமான முறையில் மக்களை பயமுறுத்தி மக்களின் சொத்துக்களை பறித்தனர். இப்போது இத்தகைய சொத்துக்களை மீட்டு உரியவர்களுக்கு தர முன் வந்து இருப்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் வரவேற்வேற்கப்படுகிறது.

    ஆனால் முன்னாள் முதல்வர் கருணாநிதி பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார், பொய் வழக்கு போடுவதாக குற்றம் சொல்கிறார். அப்படி என்றால் நீதிமன்றம் சென்று தங்களை விடுவித்துக் கொள்வது தான் முறையே தவிர திமுகவினர் ஆர்ப்பாட்டம் அமளி என்று நடத்துவது போடப்பட்டது பொய் வழக்கு அல்ல என்பது வெட்ட வெளிச்சமாகிறது. 

    அரசின் நில மீட்பு நடவடிக்கையால் மக்கள் நிம்மதியுடன் இருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் ஆதரித்து வெற்றி பெறச் செய்துள்ள கூட்டணியால் உருவான இந்த ஆட்சி அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் சமுதாயத்தை உருவாக்கும் வகையில் நிதி நிலை அறிக்கை திருப்பு முனையாக அமைந்துள்ளது.

    கண்ணை மூடிக் கொண்டு பாராட்டலாம்
    தமிழக அரசு ஒரு சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. பல்வேறு இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    பல்வேறு உதவிகளும் அதிகமாக்கப்பட்டுள்ளது. அனைவரும் பாராட்டும் வகையில் சிறந்த பட்ஜெட் அமைந்துள்ளது. இதில் புதிய திட்டம் எதுவும் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். அவர்கள் கண் இருந்தும் பாராத கருத்து குருடர்கள். இது கண்ணை மூடிக்கொண்டு பாராட்டக் கூடிய பட்ஜெட்.

    அந்த அளவுக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஏழை நடுத்தர மக்களை விலைவாசி உயர்வு தாக்கத்தில் இருந்து மீட்பதற்கு புதிய திட்டங்கள் உதவும். ரூ.8 ஆயிரத்து 900 கோடி அளவுக்கு புதிய திட்டங்களும், சலுகைகளும் அளிக்கப்பட்டு இருப்பது சமுதாயத்தின் அடித்தள மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும்.

    ஏழைகளை அடையாளம் காண்பித்து அவர்களுக்கு ஏற்படும் குறைகளைகளைய அடையாள அட்டை வழங்க வேண்டும். ஏழைகளுக்கு உதவிகள் முழுமையாக கிடைக்க இடையூறாக இருந்து தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பு அதிகரிக்க கல்லூரிகளிலேயே, அவர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.

    திமுக ஆட்சியில் இதற்கான அக்கறை செலுத்தப்படவில்லை. விவசாயிகளுக்கு இப்போது சலுகைகளை அரசு அறிவித்து உள்ளது. அவர்கள் பயிரிடும் விளை பொருட்களுக்கு உத்தரவாதம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெண்களுக்கு இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பெண்கள் நாட்டின் கண்கள் என்ற திட்டத்தை நான் எனது சொந்த பணத்தில் செயல்படுத்தினேன். எல்.ஐ.சி. மூலம் ரூ. 10 ஆயிரம் முதலீடு செய்தால் திருமண வயதை எட்டும் போது அந்த பெண்ணுக்கு ரூ.2 லட்சம் கிடைக்கும். இது போன்று ரூ.30 ஆயிரம் போட்டால் 18 ஆண்டில் ரூ.3 லட்சம் கிடைக்கும் திட்டம் எல்.ஐ.சி.யில் உள்ளது. இதனை அரசு பரிசீலிக்க வேண்டும்.

    கடந்த திமுக ஆட்சியில் சுய உதவிக் குழுக்கள் அரசியல் நோக்கத்திற்காக பயன்பட்டு வந்தன. சமூக நலத்துறையில் இருந்த சுய உதவி குழுக்கள் மு.க.ஸ்டாலினிடம் உள்ளாட்சி துறை இருந்ததால் அந்த துறைக்கு மாற்றப்பட்டது. எனவே, சுய உதவிக் குழுக்களை மீண்டும் சமூக நலத்துறைக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.



    இப்போ புரிகிறதா மக்களே! எதிகட்சி தலைவர் என்கிறது எவளவு பொறுப்புள்ள பெரிய பதவி என்பது? அந்த இடதுகேல்லாம் இவர மாதிரி உள்ளவங்கள உக்கார வச்சா இப்படி தான் பேசவும் தெரியாது, பேசிறது என்னானும் தெரியாம  தறிக்கெட்டு ஓடும் ....





    http://girlsstills.blogspot.com/



  • http://girlsstills.blogspot.com/


  • [Continue reading...]

    மீண்டும் பொலிவு��ன் சன் பிக்சர்ஸ்? நண்பன் படத்தை வ��ளியிட திட்டம்

    - 0 comments



    சன் பிக்சர்ஸ் வாங்கிய படங்களும், அது தொடர்பான பஞ்சாயத்துகளும் கோர்ட் படியேறியதோடு நில்லாமல், அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ சக்சேனாவையும் சிறைக்குள் தள்ளியது. எந்திரன் படத்தில் தங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் வர வேண்டியிருக்கிறது என்று கடந்த வாரம் கூட சில திரையரங்க உரிமையாளர்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள். ஒரு புறம் புதிய புதிய புகார்கள் வரவர இன்னொரு பக்கம் சக்சேனா மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுகின்றன.

    இதுவரை நான்கு வழக்குகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார். புகார் கொடுத்தவர்கள் வாபஸ் பெற்றதால்தான் இந்த விடுவிப்பு. இருந்தாலும், புதிய வழக்குகளில் அவருக்கு காவல் நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது.

    இதற்கிடையில் மீண்டும் சன் பிக்சர்ஸ் புதிய பொலிவோடு இயங்கவிருக்கிறதாம். அதற்கு அச்சாரம் போடும் விதத்தில், புதிய சி.இ.ஓ நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரது பெயர் செம்பியன். பிரபல தயாரிப்பாளர் கோவை செழியனின் மகன்தானாம் இவர்.

    இதை தொடர்ந்து விஜய் நடித்த நண்பன் படத்தை வாங்கி வெளியிடும் முடிவில் இருக்கிறார்களாம். இதுவரை விஜய்யிடம் முறைப்பு காட்டி வந்தவர்கள், மீண்டும் கைகுலுக்கி விட்டதாகவும் தகவல் உலவுகிறது.





    http://girlsstills.blogspot.com/



  • http://girlsstills.blogspot.com/


  • [Continue reading...]

    கலைஞர் டி.வி.யுடன் தொடர்பில்லை: கனிமொழி

    - 0 comments


    கலைஞர் டி.வி.யுடன் தமக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று 2ஜி சிறப்பு நீதிமன்றத்தில் திமுக எம்.பி. கனிமொழி கூறினார். வழக்குரைஞர்கள் வேலைநிறுத்தம் காரணமாக சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை வாதம் நடைபெறவில்லை.

    இதனால் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிபதியுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மத்திய தொலைத்தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார் உள்ளிட்டோர் தங்கள் தரப்பு பற்றி நீதிபதியிடம் பேசினர்.

    சாஹித் உஸ்மான் பல்வாவின் டி.பி.ரியால்டி நிறுவனத்திடமிருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியது தொடர்பாக கனிமொழி மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

    நீதிபதியிடம் பேசும்போது இந்தக் குற்றச்சாட்டை கனிமொழி மறுத்தார். "கலைஞர் டி.வி.க்கும் எனக்கும் ஒருபோதும் தொடர்பு இல்லை. அந்த நிறுவனம் எப்படி இயங்குகிறது, அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பது பற்றி எனக்கு ஏதும் தெரியாது' என்று அவர் கூறினார்.

    சிபிஐயின் மூன்றாவது குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் இன்னும் தாக்கல் செய்யப்படாதது பற்றி நீதிபதியிடம் சரத்குமார் குறைபட்டார். "என்னைப் போன்ற பலர் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக சிறையில் வாடும் நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பலர் மீது இன்னும் குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யப்படவில்லை' என்று அவர் கூறினார்.

    கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களான கனிமொழி, சரத்குமார் ஆகியோர் கடந்த மே 21-ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரது ஜாமீன் மனுக்களும், அவை தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.



    http://girlsstills.blogspot.com/



  • http://girlsstills.blogspot.com/


  • [Continue reading...]

    50 பைசா சில்லரைக்��ாக தொடரும் வாதங்கள்- மோதல்கள்!

    - 0 comments


    சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பீக் ஹவர் நேரங்களில் 50 பைசா சில்லரை பெற பயணிகள்-நடத்துநர் இடையே தகராறு ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது.

    இந்தியாவிலேயே மிக குறைந்த கட்டணத்தில் பஸ் இயக்கப்படுவது தமிழகத்தில் தான். இதனால், தமிழகத்தில் உள்ள எல்லா போக்குவரத்து கழகங்களும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. ஆனால் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு கட்டண உயர்வு அமல்படுத்தவில்லை என அரசுகள் கூறி வருகின்றன.

    இந்நிலையில் கடந்த தி.மு.க., ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட டீலக்ஸ், எல்.எஸ்.எஸ்., ஆகிய பஸ்களால், மறைமுக கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

    இப்படி ஒரு பக்கம் மறைமுக கட்டண உயர்வால் மக்கள் விழிபிதுங்கி நிற்கும் நிலையில் சில்லரைப் பிரச்சினையால் மக்கள் வேறு சிக்கலையும் சந்தித்து வருகின்றனர்.

    தமிழக நகரங்களில் அதிகளவில் இயங்கும் எல்.எஸ்.எஸ் (முக்கிய ஸ்டாப்புகளில் மட்டும் நிற்பவை) பஸ்களால் மக்கள் அதிக சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

    சாதாரண பஸ்களில் குறைந்த கட்டணமாக 2 ரூபாயும், எல்.எஸ்.எஸ்., பஸ்களில் 2.50 ரூபாயும், டீலக்ஸ் அல்லது சொகுசு பஸ்களில் 5 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பெருநகரங்களில், காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

    ஆனால், இந்த நகரங்களில் ஓடும் பஸ்களில் பயணிகளுக்கு மீதம் சில்லரை கொடுப்பதில் தகராறு ஏற்படுவதை வழக்கமாக காணலாம். குறிப்பாக எல்.எஸ்.எஸ்., பஸ்களில் 50 பைசா, 1 ரூபாய் வாங்க கடும் வாக்குவாதமே ஏற்படுகிறது.

    இதுகுறித்து, சென்னை கோட்டத்தை சேர்ந்த நடத்துனர் ஒருவர் கூறுகையில், பீக் ஹவர் நேரங்களில் கடும் நெரிசலுடன் பஸ்களை இயக்க வேண்டியுள்ளது. சில்லரைகளின் பயன்பாடு குறைந்து வரும் நிலையில் பயணிகள், அதிகளவில் 10 ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட நோட்டுகளை கொண்டு வருகின்றனர். இதனால், எல்லா பயணிகளுக்கு சில்லரை சரியான வழங்க முடியவதில்லை. இதில் கடுப்பாகும் சிலர், வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர், என்றார்.

    சென்னையில், அலுவலக பணிக்கு தினமும் பஸ்சில் செல்லும் பயணிகள் சிலர் கூறுகையில், காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் இருப்பது உண்மை தான். ஆனால், இதற்காக சில நடத்துநர்கள் சில்லரை இல்லை எனக் கூறி வழியிலேயே இறக்கி விடுகின்றனர். இன்னும் சிலர் நோட்டுகளை வாங்கி வைத்து கொண்டு சில்லரை தர இழுத்தடிக்கின்றனர். அப்படியே தந்தாலும், 50 பைசாக்கள் அதிகளவில் தருவதில்லை. இந்த கொடுக்கப்படாத சில்லரைகள் அரசு கஜானாவிற்கு போவதில்லை. மாறாக நடத்துநர்களே எடுத்துக் கொள்கின்றனர்.

    50 பைசா பயன்பாடு குறைந்துள்ள நிலையில், 3 ரூபாய் அல்லது 2 ரூபாய் என கட்டணத்தை ரவுண்டாக வசூலித்தால், மக்கள் அல்லது அரசு என யாராவது ஒருவர் பயன் பெறலாம். 50 பைசாவில் முடியும் கட்டணத்தால், தனிநபர் மட்டுமே பயன்பெறுகிறார், என்றனர்.






    http://girlsstills.blogspot.com/



  • http://girlsstills.blogspot.com/


  • [Continue reading...]

    சுதந்திர காங்கி��ஸும், சோனியா காங��கிரஸும்-சட்டசபை���ில் அனல்!

    - 0 comments


     காங்கிரஸ் ஒரு கட்சியே அல்ல, இப்போது இருப்பது சுதந்திரம் வாங்கியபோது இருந்த காங்கிரஸ் அல்ல, இது சோனியாவின் காங்கிரஸ் என்று கொங்கு இளைஞர் பேரவை உறுப்பினர் தனியரசு கூறியதால் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோபமடைந்து குரல் எழுப்பினர். பின்னர் வெளிநடப்புச் செய்தனர்.

    சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. அதில் கலந்து கொண்டு கொங்கு இளைஞர் பேரவை உறுப்பினர் தனியரசு பேசுகையில்,

    மத்தியில் ஆளும் காங்கிரஸ் தமிழகத்துக்கு துரோகம் இழைக்கிறது. கா ங்கிரஸ் மக்களுக்கான கட்சி அல்ல. இந்திரா காங்கிரஸ், ராஜீவ் காங்கிரஸ், சோனியா காங்கிரஸ், பிரியங்கா காங்கிரஸ் என்றுதான் இருக்கிறது.

    மக்கள் மீது இவர்களுக்கு அக்கறையே கிடையாது. அதனால்தான் தமிழகம் மீது பாராமுகமாக உள்ளனர். தமிழக மக்களின் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்காமல் உள்ளனர் என்று கூறினார்.

    அதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரங்கராஜன் எழுந்து பேசுகையில்,

    தமிழக முதல்வர் டெல்லி சென்று நிதி ஒதுக்க கேட்டபோது, ரூ.23 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் முதலமைச்சர் கூறும்போது கூட நிதி ஒதுக்கீடு திருப்தி அளிப்பதாக கூறினார்.

    மத்திய அரசு மீது சில குறைபாடுகள் இருக்கலாம். அதை மாநில அரசு பேசி சரி செய்து கொள்ள முடியும். ஆனால் இங்கு பேசிய உறுப்பினர்கள் தமிழக அரசுக்கு மத்திய அரசு துரோகம் செய்ததுபோல் பேசினார்கள்.

    கொங்கு இளைஞர் பேரவை உறுப்பினர் பேசும்போது, காங்கிரஸ் ஒரு கட்சியே அல்ல என்று கூறி எங்கள் மனதை புண்படுத்தி உள்ளார். இது வேதனை அளிப்பதாக உள்ளது. எனவே அந்த வார்த்தையை சபை குறிப்பில் இருந்து நீக்கவேண்டும்' என்றார்.

    ஆனால் அதை நீக்க சபாநாயகர் உத்தரவிடவில்லை. இதையடுத்து தொடர்ந்து பேசிய தனியரசு, நான் சுதந்திரம் அடைந்தபோது இருந்த காங்கிரசை பற்றி சொல்லவில்லை. சோனியா காங்கிரசைதான் சொல்கிறேன் என்றார்.

    இதற்கு மீண்டும் காங்கிரஸார் கடும் ஆட்சேபம் தெரிவித்து குரல் எழுப்பினர். பின்னர் தனியரசு பேச்சைக் கண்டித்து வெளிநடப்புச் செய்வதாக கூறி ரங்கராஜன் தலைமையில் அனைவரும் வெளியேறினர்.






    http://girlsstills.blogspot.com/



  • http://girlsstills.blogspot.com/


  • [Continue reading...]

    கருணை மனுக்கள் ந���ராகரிப்பு ஏமாற்றத்தை அளிக்கிறத��:

    - 0 comments


    இராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நிராகரித்திருப்பது வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் தருகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார்.

    முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அறிவு என்கிற பேரறிவாளன், சிறீஹரன் என்கிற முருகன், சாந்தன் ஆகிய மூன்று பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா தேவி சிங் பாட்டீல் நிராகரித்து விட்டார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

    இவர்கள் மூவருக்கும் இந்திய உச்ச நீதிமன்றம் 1999ஆம் ஆண்டில் மரண தண்டனையை உறுதி செய்தது. அதன் பிறகு 2000வது ஆண்டில் இவர்கள் மூவரும் குடியரசுத் தலைவருக்கு தங்கள் மீது கருணை காட்டி, மரண தண்டனையை குறைக்குமாறு கேட்டு கருணை மனுக்களை அனுப்பி வைத்தனர். அந்தக் கருணை மனுக்களின் மீது 11 ஆண்டுகளுக்குப் பிறகு – மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் படி – முடிவெடுத்துள்ள குடியரசுத் தலைவர், கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். இது எதிர்பாராத, வேதனை தரும் முடிவாகும்.

    இந்த மூவரும் கருணை மனுக்களை அனுப்பிய ஆண்டிலோ அல்லது அடுத்த ஓராண்டிலோ இம்முடிவை அறிவித்திருந்தால், இப்படிப்பட்ட வருத்தமும், ஏமாற்றமும் ஏற்பட்டிருக்காது. அவர்களின் இறப்பினால் ஏற்பட்ட வடுக்களும் கூட ஆறியிருக்கும். ஆனால் 11 ஆண்டுகள் கிடப்பில் வைத்துவிட்டு, நிச்சயம் தங்களுடைய கருணை மனுக்கள் ஏற்கப்படும் என்ற நம்பிக்கையோடு, தனிமைச் சிறையில், ஒரு எதிர்பார்ப்புடன் இருந்துவந்த இந்த மூன்று இளைஞர்களுக்கு, இப்படியொரு ஏமாற்றத்தை குடியரசுத் தலைவர் தந்திருப்பது அநீதியானது. இது நம்பவைத்து கழுத்தை அறுப்பது போன்ற ஒரு முடிவாகும்.

    சிறையிலேயே தங்களது இளமையைத் தொலைத்த இவர்கள் மூவருக்கும் விதிக்கப்பட்டது மரண தண்டனை மட்டுமே. ஆனால், அரசு அதனை நிறைவேற்றத் தாமதித்த இந்த இடைக்காலத்தில் ஒரு ஆயுள் தண்டனையையும் இவர்கள் அனுபவித்துவிட்டார்கள். இதற்குப் பிறகு இவர்களுக்கு மேலும் ஒரு தண்டனையாக மரண தண்டனையையும் நிறைவேற்றப் போகிறதா அரசு? ஒரு குற்றத்திற்காக நீண்ட சிறைத்தண்டனை, பிறகு மரண தண்டனை என்று இரண்டு தண்டனையாகும்! இது அநீதியல்லவா?

    ஊஐகஉ இந்த மூவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இது பெரும் துயரமல்லவா? இப்படியொரு கேள்வியை நாம் எழுப்புவது புதியதல்ல, கருணை மனுவின் மீது பல ஆண்டுகள் தாமதித்து முடிவெடுக்கும் மத்திய அரசின் போக்கை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஜெகதீஷ் (எதிர்) மத்தியப் பிரதேச அரசு வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்ச்சித்தது.

    "மரண தண்டனையை நிறைவேற்றுவதில் உள்ள கொடூரத்தையும், அதனால் ஏற்படும் வலியைப் போன்றதே, அதனை நிறைவேற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் காலத்தில் ஏற்படும் மனிதத் தன்மையையே பாதிக்கும் தாமதமாகும். மரண தண்டனை விதிக்கப்பட்ட காலத்தில் இருந்து அதனை நிறைவேற்றும் நாள் வரையிலான காலத்தில் தண்டிக்கப்பட்ட அந்த மனிதனை அது கொடூரமாக வதைக்கிறது" என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.

    தங்கள் வாழ்வின் முடிவை நிர்ணயிக்கப்போகும் மரண தண்டனையை எதிர்பார்த்து 12 ஆண்டுகளாக வேலூர் சிறையில் வாடும் இந்த மூன்று பேரும் அப்படிப்பட்ட கொடுமையைத்தானே அனுபவித்து வந்தனர்? வேதனையான அந்த சிறைக்காலத்திற்குப் பிறகு அவர்களின் தண்டனையை குறைத்து நிவாரணம் அளித்திருந்தால் அது மனிதாபிமானமாக இருந்திருக்கும். மாறாக, மரண தண்டனையை உறுதி செய்வது தண்டனை இரட்டிப்பாக்காதா? என்று கேட்கிறோம்.

    எதற்காக இவ்வளவு தாமதித்து இந்த துயரத்தை அளிக்க வேண்டும்? இதற்கான பதில் தங்களுக்கும் தெரியவில்லை என்று கூறியுள்ள நீதிபதிகள், இந்த தாமதத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் குடும்பத்தினர் அனுபவிக்கும் வேதனையையும் எடுத்துக் கூறியுள்ளனர். "மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள கைதிகள் போல், அவர்களின் குடும்பத்தினரும், மனைவியும், பிள்ளைகளும், சகோதர்ர்களும், சகோதரிகளும் என்ன ஆகுமோ என்ற நிலையற்ற மன நிலையில் அதே துயரத்தை அனுபவித்து வந்துள்ளனர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவர்களை ஏன் இப்படி மோசமான வகையில் நடத்திட வேண்டும் என்பதே எங்களது கேள்வியாகும்" என்று கூறியுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த விமர்சனத்தை மூத்த வழக்கறிஞர் அந்தியர்ஜூனா ஒரு கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

    தனது ஒரே மகனின் மரண தண்டனை குறைக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்த பேரறிவாளனின் தாயார் இன்றைக்கு நொருங்கிப் போயுள்ளார். ஒரு நாள் தனது தந்தை விடுதலைப் பெறுவார் என்று எதிர்பார்த்த நளினியின் மகளுக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு துயரமான அதிர்ச்சி.

    இன்றைய உலகம் மரண தண்டனையை, சட்டத்தின் பார்ப்பட்ட நீதியாகக் கருதவில்லை. அதனால்தான் 137 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. கொலை செய்தவனுக்கு தண்டனையாக நீதமன்றம் அளிக்கும் மரண தண்டனையும் கொலைதான் என்று இன்றைய உலகம் கருதுகிறது. தண்டனையின் நோக்கம், குற்றம் செய்த மனிதனை மாற்றுவதே, மாய்ப்பது அல்ல என்று உலகம் கூறுகிறது. ஆனால், இந்திய அரசு மரண தண்டனைக்கு எதிரான ஐ.நா.வின் அந்த பிரகடனத்தில் இதுவரை கையெழுத்திடவில்லை. அதன் விளைவே, வாழ்வுரிமையை பறிக்கும் மரண தண்டனை மனிதாபிமானமற்று இந்தியாவில் இன்றும் வாழ்ந்து வருகிறது.

    ஊஐகஉ மானுடத்தின் போக்கிற்கும், மனிதாபிமானத்திற்கும் எதிரான மரண தண்டனைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு முன்வராத நிலையில், மானுடம் வெறுக்கும் மரண தண்டனைக்கு முற்றுப் புள்ளி வைக்க மனிதாபிமானத்தோடு ஒரு தீர்மானத்தை தமிழக சட்டப் பேரவையில் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் நிறைவேற்ற வேண்டும். அதன் மூலம் வாழ்வுரிமையை பறிக்கும் மரண தண்டனைக்கு முதலில் முற்றுப் புள்ளி வைத்த மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும். அப்படியொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் ஒரு முன்மாதிரியாகும், அதனைச் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.



    http://girlsstills.blogspot.com/



  • http://girlsstills.blogspot.com/


  • [Continue reading...]

    நேதாஜி விமான விப���்தில் இறந்திருக்க முடியாது: டிரைவர் நிஜாமுத்தீன��

    - 0 comments


    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லை என்று அவரது டிரைவர் நிஜாமுத்தீன் தெரிவித்துள்ளார்.

    சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் இறந்துவிட்டதாக சிலரும், உயிருடன் இருப்பதாக சிலரும் கூறி வருகின்றனர். எனவே, அவர் மரணம் குழப்பமாகவே உள்ளது. இந்நிலையில் நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை என்று அவரது டிரைவர் நிஜாமுத்தீன் என்பவர் தெரிவித்துள்ளார்.

    நேதாஜியின் டிரைவராக இருந்ததாகக் கூறும் நிஜாமுத்தீன் (107) உத்தர பிரதேச மாநிலம் ஆஜம்கட் மாவட்டம், பிலாரியாகஞ்சில் உள்ள இஸ்லாம்புராவில் வசித்து வருகிறார்.

    இது குறித்து நிஜாமுத்தீன் கூறியதாக செய்தித்தாள்களில் வந்த செய்தி:

    1945-ம் ஆண்டு நடந்த விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறுகிறார். இந்த விமான விபத்து நடந்து 3, 4 மாதங்களுக்குப் பிறகு நான் தான் அவரை பர்மா, தாய்லாந்து எல்லை அருகே உள்ள சிடங்பூர் ஆற்றங்கரையில் இறக்கிவிட்டேன். விமான விபத்தில் இறந்திருந்தால் நான் எப்படி அவரை சந்திக்க முடியும். அவர் விமான விபத்தில் இறந்திருக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

    ஆனால் ஆற்றங்கரையில் இறக்கிவிட்ட பிறகு நேதாஜி என்ன ஆனார் என்று அவருக்குத் தெரியவில்லை. நேதாஜியுடன் தானும் வருவதாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால் நேதாஜி அவரைத் திருப்பி அனுப்பிவிட்டு சுதந்திர இந்தியாவில் சந்திப்பதாகத் தெரிவித்துள்ளார்.

    நேதாஜிக்கு நெருக்கமான சுவாமி என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நிஜாமுத்தீன் சந்தித்துள்ளார்.

    நேதாஜியின் ஆசாத் ஹிந்த் பௌஜ் வழங்கிய நாடு திரும்பல் சான்றிதழ் தான் நிஜாமுத்தீனுக்கும் நேதாஜியின் இயக்கத்திற்கும் இருந்த தொடர்பின் சான்று. அதில் நேதாஜி இயக்கத்தின் நிவாரணம் மற்றும் நாடு திரும்பல் குழுவின் தலைவர் சுவாமி(எஸ்வி சுவாமி) கையெழுத்திட்டுள்ளார்.



    http://girlsstills.blogspot.com/



  • http://girlsstills.blogspot.com/


  • [Continue reading...]

    அமிதாப் படத்துக��கு எதிராக விடுதலைதச் சிறுத்தைகள�� ஆர்ப்பாட்டம்

    - 0 comments


    இடஒதுக்கீட்டை எதிர்க்கும் அமிதாப்பச்சனின் ஆரக்ஷான் படத்தை எதிர்த்து சென்னையில் இன்று விடுதலை சிறுத்தைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அமிதாப்பச்சன் மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தி படம் ஆராக்ஷன். தமிழில் இடஒதுக்கீடு என்று அர்த்தம். 0இந்தப் படத்தை பிரகாஷ் ஜா தயாரித்துள்ளார்.

    'நான் இடஒதுக்கீட்டுக்கு எதிரானவன்' என்ற துணை தலைப்புடன் இந்த சினிமா பல மாநிலங்களில் ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்றுள்ளன. இதனால், இந்த படத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    ஆரக்ஷான் படம் ஓடும் சத்யம் தியேட்டர் முன்னால் விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் கட்சி கொடிகளுடன் திரண்டார்கள்.

    "இடஒதுக்கீட்டுக்கு எதிரான ஆரக்ஷான் படத்தை தடை செய், பெரியார், அம்பேத்கார் இடஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரான ஆரக்ஷான் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்," என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் வன்னிஅரசு, கருத்தியல் பரப்பு துணை செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, தனிச் செயலாளர் மடிப்பாக்கம் வெற்றிச்செல்வம், மாவட்ட நிர்வாகிகள் விடுதலைச் செல்வன், சாரனாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    அனைவரும் தியேட்டருக்குள் நுழைய முயற்சித்தனர். போலீசார் விரைந்து வந்து அவர்களை கைது செய்தனர்.

    மயிலாப்பூர் ஐநாக்ஸ் தியேட்டரிலும் ஆரக்ஷான் படம் திரையிடப்படுவதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். மாவட்ட நிர்வாகிகள் இளஞ்செழியன், வக்கீல் எழில் கரோலின், பகலவன், குமரப்பா உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    தடையை நீக்கக் கோரி வழக்கு

    இதற்கிடையே, இந்தப் படத்துக்கு உத்திரபிரதேசம், பஞ்சாப் மற்றும் ஆந்திர மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி இயக்குநர் பிரகாஷ் ஜா அலகாபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்



    http://girlsstills.blogspot.com/



  • http://girlsstills.blogspot.com/


  • [Continue reading...]

    பழக்கத்தை மாற்ற��ங்கள்

    - 0 comments


    பலமுறை கம்ப்யூட்டரில் இன்று எளிதில் பற்றிக் கொள்ளும் அபாயங்கள் குறித்து பல இதழ்களிலும், நூல்களிலும் எழுதினாலும், இன்னும் பலர் தொடர்ந்து, இவற்றுக்கு வழி விடும் பழக்கத்தினை மாற்றிக் கொள்ளாமலேயே கம்ப்யூட்ட ரைப் பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில் கம்ப்யூட்டர் குறித்து ஆய்வு மேற்கொண்ட ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. பெரும்பாலானவர்கள் இன்னும் பாதுகாப்பைக் காட்டிலும் தங்கள் வசதி களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர். பாதுகாப்பு நடவடிக்கைகள், பதற்ற மில்லாத அமைதியை வழங்கினாலும், தங்கள் பழக்கங்களுக்கு அவை ஒரு தடையை ஏற்படுத்துவதாகவே கருது கிறார்கள். அப்படிப்பட்ட அபாயம் தரும் சில மாற்றவேண்டிய பழக்கங்களை இங்கு காணலாம்.
    1.அளவுக்கதிக தகவல்களைத் தருதல்: பல பயனாளிகள், குறிப்பாக இளைஞர்கள், தங்களைப் பற்றிய தனிநபர் தகவல்கள், உணர்ச்சி பூர்வமான விஷயங்கள், வசிக்கும் இடம் போன்ற அந்தரங்க தகவல் களைத் தேவைக்கு அதிகமாகவே தருகின்றனர். இந்த பழக்கம், கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்களை அனுப்பித் தகவல்களைத் திருடுபவர்களுக்கு எளிதாக அமைந்து விடுகிறது. நமக்கு வேதனை தரும் விஷயமாக மாறுகிறது. சீனாவில், ஒருவரின் வீடு, அவர் பேஸ்புக் தளத்தில் இந்த வகையில் நட்பு ஏற்படுத்திக் கொண்ட ஒருவராலேயே கொள்ளையடிக்கப்பட்டது. இதற்குக் காரணம், அவர் தன்னைப் பற்றிய அந்தரங்க தகவல்கள் பலவற்றைத் தந்ததுதான்.
    2.நிறுவன தளங்களில் கட்டுப்பாடு: நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள், தங்கள் நிறுவன இணைய தளம் மிகவும் பாதுகாப்பானது என்பதால், தங்களைப் பற்றிய அனைத்து விபரங்களையும், தங்களின் பாஸ்வேர்ட், நிதிநிலை போன்ற தகவல் களையும், பதிந்து வைக்கின்றனர். இந்த தகவல்கள் சம்பந்தப் பட்டவர்களின் தனிச் சொத்து. எனவே நிறுவனத்தின் சர்வர் பாதுகாப்பினை நம்பி தகவல்களைத் தருவது, ஆபத்தை வரவழைக்கும் செயலாகும். ஏனென்றால், எவ்வளவு பாதுகாப்பு இருந்தாலும், அனைத்து இணையதளங்களும் பாதுகாப்பு அற்றவையே. மேலும் நிறுவன தளங்களின் பாதுகாப்பு குறித்து, நாம் தனிப்பட்ட முறையில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
    3. ஆபத்தான வெப் லிங்க்: இணைய தளங்களில், மின்னஞ்சல்களில் தரப்படும் இணைய தளங்களுக்கான லிங்க் எனப்படும், சிறிய அளவிலான இணைய முகவரிகள் என்றுமே ஆபத்தானவை. குறிப்பாக, இணைய சமுதாய தளங்களுக்கானவை என்று தரப்படும் சிறிய லிங்க்குகளில் பெரும்பாலானவை ஆபத் தானவை என்று கண்டறியப் பட்டுள்ளது. இவற்றில் கிளிக் செய்தால், நாம் சோஷியல் நெட்வொர்க் தளங்களுக்குப் பதிலாக, ஆபத்தைத் தரும் பிற தளங்களுக்கு இழுத்துச் செல்லப்படுவோம். எனவே, இணைய தளங்களில், அல்லது இந்த தளங்கள் அனுப்பியதாகப் பெறப்படும் லிங்க்குகள் குறித்து மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். முழுமையான முகவரிகளை டைப் செய்வது சிரமமாக இருந்தாலும், அவ்வாறு டைப் செய்தே அந்த தளங்களுக்குச் செல்ல வேண்டும்.
    4. அபாயங்கள் குறித்து கற்றுக் கொள்ளுதல்: இணையத்தில் நம்மைச் சிக்கவைக்கும் அபாய வழிகள் குறித்து பலர் கற்றுக் கொள்ள மறுக்கின்றனர். குறிப்பாக, பாதுகாப்பான சூழ்நிலையில் வாழப் பழகிக் கொண்டவர்கள், தாங்கள் பயன்படுத்தும் இணைய தளங்களும் பாதுகாப்பானவையே என்ற எண்ணத் தில் உள்ளனர். இது தவறான முடிவாகும். இணைய எச்சரிக்கை குறித்து தரப்படும் செய்திகளை அலட்சியம் செய்கின்றனர். இது தவறு. இணையம் என்பது அனைவராலும் பயன்படுத்தப்படும் ஓர் இடம். இங்கு பாதுகாப்பு என்பது ஒரு சமுதாய விஷயமாகிறது. எனவே இது குறித்து நன்கு அறிந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டுவது நம் கடமையாகிறது.
    5. அப்டேட்டிங் சாப்ட்வேர்: இந்தியாவில் கம்ப்யூட்டர் பயன்படுத்துவபவர்கள், பாதுகாப்பிற்குத் தேவையான சாப்ட்வேர் புரோகிராம்களை தங்கள் கம்ப்யூட்டர் களில் இன்ஸ்டால் செய் வதில் சிறிது கூட தாமதப்படுத்துவதில்லை. ஆனால் அதன் பின்னர் அவற்றை அப்டேட் செய்வதில் மிகவும் பின்தங்கி விடுகின்றனர். பலர் அது குறித்து எண்ணுவதே இல்லை. இந்தப் போக்கும் பழக்கமும் மிகவும் மோசமான விளைவுகளைத் தோற்று விக்கும்.
    6. மால்வேர் எப்போதும் வரும்: பலர், கெடுதல் விளைவிக்கும் வைரஸ் மற்றும் பிற மால்வேர் புரோகிராம்கள், குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே இணையத்தில் வெளியிடப்படும் என்று எண்ணு கின்றனர். இது தவறு. விடுமுறை நாட்களிலும், சில விழா கொண்டாட்டத்தின் போதும், இந்த மால்வேர் புரோகிராம்கள் அதிகமாகத் தென்பட்டாலும், இவை 24 மணி நேரமும் இயங்கும் வகையிலேயே அமைக்கப்படுகின்றன. தொடர்ந்து பெருகி நாசம் விளைவிக்கும் தன்மை கொண்டதாகவே இயக்கத்தினைக் கொண்டுள்ளன. எனவே நாமும் முழு நேரமும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டியுள்ளது.
    7. திருட்டு சாப்ட்வேர் தரவிறக்கம்: ஆசிய நாடுகளில், குறிப்பாக சீனாவிலும் இந்தியாவிலும் கம்ப்யூட்டர் பயன் படுத்துபவர்கள், இலவச மற்றும் விலை மலிவான சாப்ட்வேர் புரோகிராம்களை டவுண்லோட் செய்வதில் மிக ஆர்வம் காட்டுகின்றனர். இத்தகைய சாப்ட்வேர் தொகுப்புகளைத் தரும் பிரபலமில்லாத இணைய தளங்கள், இந்த சாப்ட்வேர் தொகுப்புகளுடன், தங்களுடைய மால்வேர் புரோகிராம்களையும் இணைத்தே அனுப்புகின்றன. சாப்ட்வேர் பயன்படுத்தத் தொடங்கிய சில நாட்கள் கழித்து, இந்த மால்வேர் புரோகிராம்கள் தங்கள் வேலையைக் காட்டுகின்றன.
    8. ஒரே பாஸ்வேர்ட்: பாஸ்வேர்ட்களை நினைவில் வைத்துக் கொள்வது சிரமம் என்பதால், பலர் ஒரே பாஸ்வேர்டினை அனைத்து தளங்களுக்கும் வைத்துக் கொள்கின்றனர். இது மிகவும் தவறான பழக்கமாகும். இதனால், ஒரு இணையதளத்தில் உங்கள் அக்கவுண்ட் கைப்பற்றப் பட்டாலும், மற்றவற்றையும் கெடுப்பது மால்வேர் அனுப்பியவர்களுக்கு எளிதாகிவிடும். எனவே சிரமம் எடுத்தாவது, ஒவ்வொரு இணைய தளத்திற்கும் தனித்தனி பாஸ்வேர்ட் வைத்துக் கொள்வது பாதுகாப்பான தாகும்.
    9:அவசரப்படுவது: தங்களுக்குத் தகவல் கள் அவசரமாகத் தேவைப்பட்டு, இணையத்தில் தேடும்போது, பலர், சில இணைய தளம் குறித்து சந்தேகம் அடைந்தாலும், நம் கம்ப்யூட்டரை இவை என்ன செய்து விடும் என்ற இறுமாப்பில், பயன்படுத்தத் தொடங்கிவிடுகின்றனர். இவர்களிடம் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை ஏமாற்றி நாசப்படுத்தும் வைரஸ்களும் உண்டு என இவர்கள் அறிவது இல்லை.
    இது போல, பல பழக்கங்களுக்கு நாம் அடிமையாகி, நம் பாதுகாப்பினை மறந்து விடுகிறோம். இதனால், நம் கம்ப்யூட்டர் முடங்கும்போதுதான், அடடா! அவசரப் பட்டுவிட்டோமே என்று வேதனைப் படுகிறோம். பழக்க வழக்கங்களை மாற்றுங்கள். பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுங்கள்.




    http://girlsstills.blogspot.com/



  • http://girlsstills.blogspot.com/


  • [Continue reading...]

    சோனியா காந்திக்��ு புற்றுநோயா..?வெ���ிவராத மர்மங்கள்

    - 0 comments


    சோனியாகாந்தி இந்தியாவில் இல்லை.அவர் வெளிநாட்டில் தீவிர சிகிசை பிரிவில் இருக்கிறார் ..இதுபற்றி வெளிநாட்டு சேனல்கள் பரபரப்புடன் செய்தி வாசித்தபிந்தான் நம் இந்திய ஊடகங்களுக்கு தெரியும்
    மேலும் படிக்க »

    http://tamilsmsgalatta.blogspot.com/




  • http://tamilsmsgalatta.blogspot.com/


  • [Continue reading...]

    கலைஞர் டிவி எப்ப���ி செயல்படுகிறது என்று எனக்குத் தெரியாது: கனிமொழி

    - 0 comments


    2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதன் மீதான விவாதம், இரண்டு வாரங்களாக, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.

    டில்லி வழக்கறிஞர்கள், நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டதை அடுத்து, இந்த வழக்கு விசாரணை தடைபட்டது. வழக்கறிஞர்கள் யாரும் நேற்று, வாதாட மறுத்து விட்டனர். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு, நீதிபதி ஓ.பி.சைனி, அனுமதியளித்தார்.

    இதையடுத்து, ஒவ்வொருவராக, தங்கள் கருத்துக்களை, சுருக்கமாக, அதிகாரபூர்வமற்ற வகையில், எடுத்து வைத்தனர்.

    தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி ''கலைஞர் டிவி' செயல்பாட்டிற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள், எப்படி செயல்படுகின்றனர் என்பதும், அங்கு என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதும் எனக்குத் தெரியாது'என்றார்.

    கலைஞர் டிவி' மேலாண் இயக்குனர் சரத் குமார் கூறுகையில், ''கடந்த சில மாதங்களாக, சிறையில் நாங்கள் அவதிப்படுகிறோம்.

    குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்கள் மீது, இன்னும் குற்றப்பத்திரிகை கூட, தாக்கல் செய்யவில்லை'என்றார்.

    http://sirappupaarvai.blogspot.com/




  • http://sirappupaarvai.blogspot.com/


  • [Continue reading...]

    கருணை மனுக்கள் ந���ராகரிப்பு வருத்தத்தையும் ஏமாற்��த்தையும் அளிக்க���றது!: சீமான்

    - 0 comments


    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அறிவு என்கிற பேரறிவாளன், சிறீகரன் என்கிற முருகன், சாந்தன் ஆகிய மூன்று பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நிராகரித்து விட்டார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

    இவர்கள் மூவருக்கும் இந்திய உச்ச நீதிமன்றம் 1999ம் ஆண்டில் மரண தண்டனையை உறுதி செய்தது. அதன் பிறகு 2000வது ஆண்டில் இவர்கள் மூவரும் குடியரசுத் தலைவருக்கு தங்கள் மீது கருணை காட்டி, மரண தண்டனையை குறைக்குமாறு கேட்டு கருணை மனுக்களை அனுப்பி வைத்தனர்.

    அந்தக் கருணை மனுக்களின் மீது 11 ஆண்டுகளுக்குப் பிறகு – மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் படி முடிவெடுத்துள்ள குடியரசுத் தலைவர், கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். இது எதிர்பாராத, வேதனை தரும் முடிவாகும்.

    தங்கள் வாழ்வின் முடிவை நிர்ணயிக்கப்போகும் மரண தண்டனையை எதிர்பார்த்து 12 ஆண்டுகளாக வேலூர் சிறையில் வாடும் இந்த மூன்று பேரும் அப்படிப்பட்ட கொடுமையைத்தானே அனுபவித்து வந்தனர்.

    வேதனையான அந்த சிறைக்காலத்திற்குப் பிறகு அவர்களின் தண்டனையை குறைத்து நிவாரணம் அளித்திருந்தால் அது மனிதாபிமானமாக இருந்திருக்கும். மாறாக, மரண தண்டனையை உறுதி செய்வது தண்டனை இரட்டிப்பாக்காதா? என்று கேட்கிறோம்.

    தனது ஒரே மகனின் மரண தண்டனை குறைக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்த பேரறிவாளனின் தாயார் இன்றைக்கு நொருங்கிப் போயுள்ளார். ஒரு நாள் தனது தந்தை விடுதலைப் பெறுவார் என்று எதிர்பார்த்த நளினியின் மகளுக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு துயரமான அதிர்ச்சி.

    இன்றைய உலகம் மரண தண்டனையை, சட்டத்தின் பார்ப்பட்ட நீதியாகக் கருதவில்லை. அதனால்தான் 137 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. கொலை செய்தவனுக்கு தண்டனையாக நீதமன்றம் அளிக்கும் மரண தண்டனையும் கொலைதான் என்று இன்றைய உலகம் கருதுகிறது.

    தண்டனையின் நோக்கம், குற்றம் செய்த மனிதனை மாற்றுவதே, மாய்ப்பது அல்ல என்று உலகம் கூறுகிறது. ஆனால், இந்திய அரசு மரண தண்டனைக்கு எதிரான ஐ.நா.வின் அந்த பிரகடனத்தில் இதுவரை கையெழுத்திடவில்லை. அதன் விளைவே, வாழ்வுரிமையை பறிக்கும் மரண தண்டனை மனிதாபிமானமற்று இந்தியாவில் இன்றும் வாழ்ந்து வருகிறது.

    மானுடத்தின் போக்கிற்கும், மனிதாபிமானத்திற்கும் எதிரான மரண தண்டனைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு முன்வராத நிலையில், மானுடம் வெறுக்கும் மரண தண்டனைக்கு முற்றுப் புள்ளி வைக்க மனிதாபிமானத்தோடு ஒரு தீர்மானத்தை தமிழக சட்டப் பேரவையில் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் நிறைவேற்ற வேண்டும்.

    அதன் மூலம் வாழ்வுரிமையை பறிக்கும் மரண தண்டனைக்கு முதலில் முற்றுப் புள்ளி வைத்த மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும். அப்படியொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் ஒரு முன்மாதிரியாகும், அதனைச் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

    http://sirappupaarvai.blogspot.com/




  • http://sirappupaarvai.blogspot.com/


  • [Continue reading...]

    கோத்தபாயவை சட்ட��ன்றத்திற்குள் க���ண்டுவந்து தண்டிக்க முடியும்!: வீ��மணி

    - 0 comments


    தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ஈழத் தமிழர் பிரச்னை குறித்த தீர்மானத்தை இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய விமர்சனம் செய்தது குறித்து மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய அரசியல் தீர்மானம் குறித்து வெளிநாட்டவர் இவ்வாறு முதல்வரையும், அதன்மூலம் தமிழக சட்டப்பேரவையையும் கொச்சைப்படுத்திப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

    இதுபோன்றவர்களை சட்டமன்றத்துக்குள் கொண்டுவந்து விசாரணை நடத்தி தண்டனைகூட கொடுக்க முடியும் என வீரமணி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    இதேவேளை, திருச்சியில் இலங்கை பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபாய ராஜபக்சேவின் உருவபொம்மையை எரித்து புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    http://sirappupaarvai.blogspot.com/




  • http://sirappupaarvai.blogspot.com/


  • [Continue reading...]

    எமது இலக்கு சுதந���திர தமிழீழமே!: பிரதமர் வி.ருத்ரகு���ாரன்

    - 0 comments


    தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டத்தை புறந்தள்ளி விட்டு, சலுகை - அபிவிரித்தி அரசியலை முன்னிறுத்தும் மகிந்தவின் நிகழ்ச்சி நிரலுக்குள், விடுதலைப் போராட்டத்தை பயணிக்க முடியாது. எமது இலக்கு சுந்திர தமிழீழமே என நாடு கடநத தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

    சமகால அரசியல் நிலைவரங்கள், நா.த.அரசாங்கத்தின் செயற்பாடுகள், தமிழர் அரசியல் முன்னெடுப்புகள் என பல்வேறுபட்;ட விடயங்களுக்கு, மக்களின் கேள்விகளுக்கு பதிலுரைக்கும், ஐ பி சி தமிழ் வானொலியின் நிகழ்ச்சியொன்றில் பிரதமர் வி.ருத்ரகுமாரன் அவர்கள் பங்கெடுத்திருந்தார்.

    இந்நிகழ்ச்சியில், நேயர் ஒருவரின் கேள்விக்கு பதிலுரைக்கும் பொழுதே மேற்குறிப்பிட்ட கருத்தினை பிரதமர் அவர்கள் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

    இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கான அரசியல் வெளி முழுiமாக அற்ற காரணத்தினாலேயே, புலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தோற்றம் பெற்றது.

    இந்நிலையில், சலுகைகளையும - அபிவிரித்திகளையும் முன்னிறுத்தி, மகிந்தாவினால் முக்கியத்துவப்படுத்தப்பட்டு வரும் தேர்தல் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள், விடுதலைப் போராட்டத்தை பயணிக்க முடியாது. எமது இலக்கு சுதந்திர தமிழீழமே.

    இதனை வெளிப்படுத்தும் முகமாகவே, தாயக மக்கள் உள்ளுராட்சி சபைத் தேர்தலில், மகிந்தவினால் முன்னிறுத்தப்பட்ட சலுகை - அபிவிருத்தி அரசியலை முற்றாக நிராகரித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்துள்ளனர் என பிரதமர் தெரிவித்தார்.

    தாயக மக்களின் இந்த உறுதியான நிலைப்பாட்டு தலைசாய்ப்பதென குறிப்பிட்ட பிரதமர் அவர்கள், இலங்கைத் தீவை நோக்கியதாக சர்வதேசத்தின் கவனம் இருக்கின்ற நிலையில், தமிழர் தாயகத் பகுதியில் மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற சாத்வீக வழியிலான போராட்டங்கள் முக்கியத்துவம் பெறுமென குறிப்பிட்டார்.

    சாத்வீகவழிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் போதே, எமக்கான அரசியல் வெளி மெது மெதுவாக பெரிதுபெறும் என தெரிவித்ததோடு, நிலத்திலும் - புலத்திலும் சமாந்திரமாக முன்னெடுக்கப்படுகின்ற போராட்டமாக இது மாற்றம் பெறும் பொழுது, விடுதலைப் போராட்டத்தின் வீச்சு வலுவடையும் என தெரிவித்தார்.

    தமிழீழம் என்பதான புலம்பெயர் தமிழர்களின் இறுக்கமான நிலைப்பாட்டினால் தான், தாயகத்தில சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன என்பதாக குறித்துரைத்த நேயர் ஒருவரின் கேள்விக்கு பதிலுரைத்த பிரதமர் அவர்கள், இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதலே, இலங்கைத் தீவை சிங்களத் தீவாக்கும் நோக்கில், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றன என்பதனை சுட்டிக்காட்டினார்.

    இதேவேளை, உள்நாட்டு விவாகாரம் என்ற நிலைக்குள் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றம் என்ற கட்டத்தைக் கடந்து, தமிழர் போராட்டம் சர்வதேச மயப்பட்டிருக்கும் இவ்வேளை, தற்போது வலுதீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவரும் சிங்கள் குடியேற்றங்களை, அனைத்துலகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்கான வழிவகைகளை காண வேண்டுமென தெரிவித்தார்.

    ஐ.நா நிபுணர் குழு அறிக்கை - சனல் 4 காணொளி ஆவணம் உட்பட சிறிலங்கா தொடர்பிலான வேகமாக மாறிவரும் சர்வதேச நிலைப்பாட்டை, எமது விடுதலைப் போராட்டத்துக்கு, சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில்தான், எமது இராஜதந்திரம் தங்கியுள்ளதென, நேயர் ஒருவரின் இன்னுமொரு கேள்விக்கு பதிலுரைத்த பொழுது தெரிவித்தார்.

    நாதம் ஊடகசேவை
    தகவல்துறை அமைச்சகம்
    நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

    http://sirappupaarvai.blogspot.com/




  • http://sirappupaarvai.blogspot.com/


  • [Continue reading...]

    நினைத்தாலே இனிக��கும்

    - 0 comments
    [Continue reading...]

    பூர்ணா

    - 0 comments
    [Continue reading...]

    தமிழகத்தின் பல ம���வட்டங்களில் நில அதிர்ச்சி - பீதி��ில் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந���தனர்

    - 0 comments


    தமிழகத்தில் இன்று காலை திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. வீடு, பள்ளிகள், அலுவலகங்களில் இருந்தவர்கள் பலர் அச்சத்துடன் வீதிக்கு வந்தனர்.

    திருச்சி, சேலம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக மேலும்படிக்க

    http://ahotstills.blogspot.com/




  • http://ahotstills.blogspot.com/


  • [Continue reading...]

    களைகட்டுகிறது க��சிகவுண்டன் புதூ���்

    - 0 comments


    ஒரு ஊரே திருமணத்துக்கு தயாராகிறது. நண்டு சிண்டு பொண்டு பொடிசு என ஒருவர் பாக்கியில்லாமல் 'நான் கல்யாணத்துக்கு போறேனுங்...' என்று மகிழ்ச்சியோடு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஊர் காசிகவுண்டன் புதூர். கோவை சூலூருக்குப் பக்கத்தில் உள்ள கிராமம். சிவகுமாரின் இளைய மகன் கார்த்தி - ரஞ்சனிக்கு நடக்கும் திருமணம்தான் இந்த கிராமத்தினரின் மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாக மாறியுள்ளது. இங்குள்ள 250 குடும்பங்களும் இதனை தங்கள் வீட்டு திருமணமாகவே நினைத்து, தயாராகி வருகிறார்கள். நடிகர் சிவகுமாரின் சொந்த ஊர்தான் இந்த காசிகவுண்டன் புதூர். இங்கு இன்னும் அவரது பழைய வீடு அந்த கிராமத்துக்கே உரிய மணம் மாறாமல் அப்படியே உள்ளது. சிவகுமாரின் சொந்த அக்கா உள்ளிட்ட உறவுக்காரர்கள் அத்தனைபேரும் கிராமத்தில் வசிக்கின்றனர். கார்த்தி-ரஞ்சனி திருமணம் வருகிற 3-ந் தேதி கோவையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. கோவை கொடிசியா அரங்கில் நடைபெறும் இந்த திருமணத்துக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கார்த்தியின் அண்ணன் சூர்யா-ஜோதிகா திருமணத்தின் போது குறிப்பிட்டவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர்.


    உறவினர்கள் அனைவரையும் மகன் திருமணத்திற்கு அழைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் சிவகுமாருக்கு. அதனை போக்கும் வகையில் கார்த்தி-ரஞ்சனி திருமணத்திற்கு உறவினர்கள் அனைவரையும் அழைத்து விருந்து படைக்க முடிவு செய்து, அத்தனை பேருக்கும் நேரில் போய் அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு உறவினரிடமும், "இது உங்கள் வீட்டு திருமணம். கண்டிப்பாக திருமணத்துக்கு வந்து மணமக்களை ஆசீர்வதிக்க வேண்டும்" என்று அன்பாக அழைப்பு விடுத்தனர். "நீங்கள் சொன்னாலும் சரி, சொல்லாவிட்டாலும் சரி, இது எங்கள் வீட்டு திருமணம்தான். கண்டிப்பாக வருவோம் என்று கூறியுள்ளனர். திருமணத்திற்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் அனைத்து ஏற்பாடுகளும் ஜரூராக நடக்கின்றன. சிவகுமாரின் பாரம்பரிய குல வழக்கப்படி திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்கு முந்தின நாள் சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் கோவைக்கு வந்து தங்குகிறார்கள். திருமணத்தன்று காலை சிவகுமார் குடும்பத்தினர் காசி கவுண்டன்புதூரில் உள்ள தங்களது சொந்த வீட்டுக்கு செல்கின்றனர். அதைத் தொடர்ந்து திருமண சடங்குகள் நடக்கின்றன. பின்னர் கார்த்தி ரஞ்சனிக்கு தாலி கட்டுகிறார்.

    திருமணத்தை சொந்த ஊரில் நடத்துவது குறித்து கார்த்தி கூறுகையில், "சென்னையில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றுதான் முதலில் நினைத்தோம். அப்புறம் ஒரு ஊரையே சென்னைக்கு அழைத்து வருவதில் உள்ள சிரமம், டிராபிக் ஜாம் மற்றும் சில இடையூறுகள் என எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்தோம். நமக்காக ஏன் ஒரு ஊரையே சிரமப்பட வைக்கணும். அதைவிட அந்த ஊரிலேயே நடத்திவிட்டால் என்ன என்று எண்ணிதான் கோவையில் திருமண விழா நடத்த ஏற்பாடுகள் செய்தோம். கல்யாணத்துக்காக ஒரு மாதம் படப்பிடிப்புக்கு லீவு போட்டுள்ளேன். ஒரு மாதம் கழித்து 'சகுனி' ஷுட்டிங் ஆரம்பிக்கும். சிறு வயதில் அடிக்கடி குடும்பத்துடன் கோவை சென்று வருவோம். அப்போதெல்லாம் விவசாயம் பிரமாதமாக நடக்கும். இப்போது எல்லாருமே வேலை விஷயமாக ஊரை காலி செய்துவிட்டு வெளியூருக்கு வந்துவிட்டனர். விவசாயமும் அங்கு இல்லாமல் போனது. இருந்தாலும் கோவையின் குளிரும், பசுமையும் இங்கு அப்படியே உள்ளது. ஒரு ஊருக்கே ஏ.சி.போட்ட மாதிரி அப்படி ஒரு ஜில் க்ளைமேட்... அங்கு உள்ளது," என்றார்.

    பிரமாண்ட ஏற்பாடுகள்

    கார்த்தி திருமணம் நடைபெற உள்ள கொடிசியா அரங்கம் வெகு விசேஷமாக அலங்கரிக்கப்பட்டு வருகிறது. வேறு உலகத்துக்கே வந்தது போன்ற நினைப்பை பார்ப்பவருக்கு உண்டாக்கும் விதத்தில் அலங்கார வேலைகள் கடந்த 1 வாரமாக நடந்து வருகின்றன. மணமகன்-மணமகளுக்கு தனித்தனி அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த திருமணத்தில் சைவ சாப்பாடு மட்டுமே பரிமாறப்பட உள்ளது. இந்த உணவு 2 வகைகளில் பரிமாறப்படுகிறது. வழக்கமான கல்யாண பந்தி மற்றும் பஃபே முறை என இரு விதங்களில் உணவுகள் பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பட்டினி சாத விருந்து

    திருமணத்துக்கு முந்தின நாள் அதாவது சனிக்கிழமை மதியம் 1 மணிக்கு பாரம்பரிய முறைப்படி பட்டினி சாத விருந்து நடைபெறுகிறது. இதில் நடிகர் சிவகுமார் உறவினர்கள் கலந்து கொள்கிறார்கள். 3 நாட்கள் நடைபெறும் திருமண விழாவில் முதல் நாள் நடைபெறுவதுதான் இந்த பட்டினி சாத விருந்து. அதாவது மணமக்களுக்கு அளவு குறைவான சத்தான உணவு வழங்கப்படும். மணமக்களுடன் மற்றவர்களும் சாப்பிடலாம். இதில் கொஞ்சம் சாதத்துடன் (சோறு) பழம், பழச்சாறு இடம் பெறும். வயிற்றுக்கு முழுச் சாப்பாடு சாப்பிடக் கூடாது. இது முகூர்த்தம் முடியும் வரை தொடரும்.

    ரசிகர்களுக்கும்

    இந்த சிக்கன சாப்பாட்டைத்தான் பட்டினி சாத விருந்து என்கிறார்கள். முன்னதாக காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் பந்தக் கால் நடப்படுகிறது. அன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை வரவேற்பு நிகழ்ச்சியும், 9.10 மணிக்கு இணை சீர் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து ரசிகர் மன்றத்தினருக்கு விருந்து அளிக்கிறார் கார்த்தி. இதற்காக அனைத்து மன்றத்தினருக்கும் தனித்தனியாக அழைப்பு அனுப்பியுள்ளார்.


    http://ahotstills.blogspot.com/




  • http://ahotstills.blogspot.com/


  • [Continue reading...]

    கிழியுதையா சமதர��மம்.

    - 0 comments


    பேசத்தெரிந்த ஊமை - நீ 

    உணர்வுகள் அடக்கு. 
    உரிமைகளை மற.
    அடிமையாய்மாறு.
    கொடி பிடிக்கப் பழகு .
    கோசமிட கற்றுக்கொள். 
    வேசமிட அறி. 
    வேறென்ன 
    வேண்டும் உனக்கு?
    அத்தனையும் 
    உன்னருகில். 
    ஆகா!.....
    அழகான வாழ்வுனக்கு,  
    அழியுதையா ஜனநாயகம். 
    கிழியுதையா சமதர்மம்.


    http://ahotstills.blogspot.com/




  • http://ahotstills.blogspot.com/


  • [Continue reading...]

    புலியின் கோபம்

    - 0 comments



    மிருககாட்சி சாலைக்கு வந்த ஒரு நபரை புலி ஓன்று அடித்து கொன்று விட்டது.
    குரங்கு: ஏன் அவரை கொலை பண்ணுன??

    புலி: அந்த லூசு பய மூணு மணிநேரமா என்ன
    உத்து பார்த்துட்டு சொல்லுறான்
    "எவ்வுளோ பெரிய பூனை"ன்னு



    http://ahotstills.blogspot.com/




  • http://ahotstills.blogspot.com/


  • [Continue reading...]

    பிரித்தானியாவில் வன்செயல்கள் என���ன காரணம்?யார் இந���த மார்க் டக்கன்?

    - 0 comments



    பிரித்தானியாவில் முக்கிய நகரங்களான இலண்டன், மன்செஸ்ரர், பிரிஸ்ரல், நொட்டிங்காம், பேர்மிங்காம் உட்பட பல சிறு நகரங்கள் அடங்கலாக 30 இற்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த நான்கு நாட்களாக வன்செயல்கள் நடந்து வருகின்றன.
    .
    இந்த வன்செயல்களிற்கு காரணம் டங்கன் என்ற 26 வயது இளைஞர் ஒருவர் ரொட்டன்காம் பகுதியில் வைத்து பொலிசாரினால் சுட்டுக்கொல்லப்பட்டதே என்பதுதான் வெளிக்கரணம்.

    யார் இந்த மார்க் டக்கன்
    : லண்டனின் வடக்கில் பிரபல தாதாவாக வலம் வந்தவன் மார்க் டக்கன், 30. இவனது பெற்றோர் பிரிட்டன் - ஆப்ரிக்க தம்பதியினர். துவக்க காலத்தில், நண்பர்கள் சகிதமாக, வார இறுதி நாட்களில் மட்டும் லண்டன் தெருக்களில் அடிதடியில் இறங்கி, சாகசம் காட்டி வந்த டக்கன், அதன்பின் வன்முறையை முழு நேர வாழ்க்கையாக மாற்றிக்கொண்டான். ஒரு கட்டத்தில், லண்டனின் பிரபல தாதாக் குழுக்களுக்கு துப்பாக்கி மற்றும் போதைப் பொருட்கள் சப்ளையராக மாறியவன், போலீஸ் கண்காணிப்பில் சிக்கினான். கடந்த 4ம் தேதி, லண்டனில் உள்ள டோட்டன்ஹேமில் மார்க் டக்கனை போலீசார் சுற்றி வளைத்தனர். சரணடைய மறுத்த மார்க், ஹாலிவுட் படத்தில் வருவது போல், போலீசாருடன் மோதலில் ஈடுபட்டான். இதையடுத்து, போலீசார் அவனை சுட்டுக் கொன்றனர்.

     உண்மையில் அதுவல்ல பிரச்சினை இந்தப்பொரச்சினையால் பாதிக்கப்பட்ட குடும்பம் தனது இழப்பில் இருந்து மீழவில்லை. ஆனால் இந்த விடயத்தை வைத்து  பிரித்தானியாவில் இருக்கும்  கொள்ளைக்கும்பல்கள், வன்செயல் குழுக்கள், வறுமையில் வாடுவோர், கன்சர்வேட்டிவ் கட்சியில், அரசாங்கத்தில் அதிருப்தியுற்றோர் என அனைவரும் சேர்ந்து பிரிட்டனை ஒரு கலக்கு கலக்கி வருகின்றனர். இதுவரை 800 பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளனர். 170 பேர் குற்றம் சுமத்தபப்ட்டுள்ளனர்.
    .
    தொடர்பில்லா நகரங்கள் சிறு நகரங்களில் எல்லாம் நடக்கின்ற வன்செயல்களைப்பார்த்தால் உண்மையில் அது டங்கன் குடும்பத்திற்கு ஆதரவான வன்செயல்களோ அன்றி  தமது ஆத்திரத்தினை வெளிக்காட்டும் வன்செயல்களாகவோ இருக்கவில்லை. மாறாக நூற்றுக்கு  தொண்ணூறு விழுக்காடு வன்செயல்கள் அனைத்தும் மிகப்பெரிய கடைகளை கொள்ளை அடிக்கும் சம்பவமாகவே காணபப்டுகின்றது.
    .
    வறுமையில் வாடும் சமூகங்கள், அதியுயர் பொருட்களை நுகர முடியா சிறு பராயத்தினர், என அனைவரும் அதிஉயர் விலையுடைய பொருட்களை விற்கும் கடைகளை தேடி கொள்ளையடிக்கும் சம்பவங்கள்தான் நடக்கின்றன.
    .
    புறக்காரணங்கள்
    .
    1. அதிகரித்து வரும் சமூகங்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வு.
    2. அதிகரித்துவரும் பொறுப்புணர்வற்ற குடும்ப கலாச்சாரம் மற்றும் சமூக பழக்கவழக்கங்கள்.
    3. தொழில்வாய்ப்பின்மை.
    4. பல்கலாச்சார புரிந்துணர்வினை
    5. இறுதியாக நடப்பு அரசாங்கத்தில் விரக்தியுற்றோர்.
    6. கூடவே பொலிஸ் ஆளணியினை குறைக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை.
    கொல்லப்பட்ட டாங்கனின் விசாரணை
    26 வயதான டங்கன் என்பவர் பொலிசார் மீது துப்பாக்கி மேற்கொண்டதால் பதிலுக்கு பொலிசார் துப்பாக்கி பிரயோகம் செய்ததில் கொல்லப்பட்டார் என்ற வாதம் எடுபடவில்லை. சுயாதீன பொலிஸ் விசாரணையில் டங்கன் பொலிசார் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யவில்லை என கூறப்பட்டுள்ளது.
    .
    பிரித்தானிய அரசு இந்த வன்செயல்களை கடந்த 30 வருடத்திற்குள் நாடளாவிய ரீதியில் பார்த்திருக்கவில்லை. ஒட்டுமொத்த வன்செயல்களின் பிரதிபலிப்பாக எதிர்க்கட்சியான தொழில்கட்சி மற்றும் முக்கியஸ்தர்கள், பொலிஸ் தரப்பினர் எல்லோரும் எதனைக்கூறுகின்றார்கள் என்றால் பொலிஸ் ஆளணி போதாது என்றே.
    அடுத்து கூடுதலான வன்செயல்களின் கூட்டிணைப்பு சமூக வலைத்தளங்கள் ஊடாகவே நடந்தது. இது நான்கு நாட்களாக நடக்கின்றது ஆனால் சமூக வலைத்தளங்களை நடத்தும் கம்பனிகள், அமைப்புக்கள் இது தொடர்பில் நான்கு நாட்களாகியும் விழிப்படையவில்லையா. பிற நாடுகளில் இருக்கும் தளங்களை கட்டுப்படுத்த முடியும் என்றால் பிரிட்டனில் மட்டும் ஏன் முடியவில்லை?


    http://ahotstills.blogspot.com/




  • http://ahotstills.blogspot.com/


  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger