2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதன் மீதான விவாதம், இரண்டு வாரங்களாக, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.
டில்லி வழக்கறிஞர்கள், நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டதை அடுத்து, இந்த வழக்கு விசாரணை தடைபட்டது. வழக்கறிஞர்கள் யாரும் நேற்று, வாதாட மறுத்து விட்டனர். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு, நீதிபதி ஓ.பி.சைனி, அனுமதியளித்தார்.
இதையடுத்து, ஒவ்வொருவராக, தங்கள் கருத்துக்களை, சுருக்கமாக, அதிகாரபூர்வமற்ற வகையில், எடுத்து வைத்தனர்.
தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி ''கலைஞர் டிவி' செயல்பாட்டிற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள், எப்படி செயல்படுகின்றனர் என்பதும், அங்கு என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதும் எனக்குத் தெரியாது'என்றார்.
கலைஞர் டிவி' மேலாண் இயக்குனர் சரத் குமார் கூறுகையில், ''கடந்த சில மாதங்களாக, சிறையில் நாங்கள் அவதிப்படுகிறோம்.
குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்கள் மீது, இன்னும் குற்றப்பத்திரிகை கூட, தாக்கல் செய்யவில்லை'என்றார்.
http://sirappupaarvai.blogspot.com/
http://sirappupaarvai.blogspot.com/
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?