Friday 12 August 2011

களைகட்டுகிறது க��சிகவுண்டன் புதூ���்



ஒரு ஊரே திருமணத்துக்கு தயாராகிறது. நண்டு சிண்டு பொண்டு பொடிசு என ஒருவர் பாக்கியில்லாமல் 'நான் கல்யாணத்துக்கு போறேனுங்...' என்று மகிழ்ச்சியோடு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஊர் காசிகவுண்டன் புதூர். கோவை சூலூருக்குப் பக்கத்தில் உள்ள கிராமம். சிவகுமாரின் இளைய மகன் கார்த்தி - ரஞ்சனிக்கு நடக்கும் திருமணம்தான் இந்த கிராமத்தினரின் மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாக மாறியுள்ளது. இங்குள்ள 250 குடும்பங்களும் இதனை தங்கள் வீட்டு திருமணமாகவே நினைத்து, தயாராகி வருகிறார்கள். நடிகர் சிவகுமாரின் சொந்த ஊர்தான் இந்த காசிகவுண்டன் புதூர். இங்கு இன்னும் அவரது பழைய வீடு அந்த கிராமத்துக்கே உரிய மணம் மாறாமல் அப்படியே உள்ளது. சிவகுமாரின் சொந்த அக்கா உள்ளிட்ட உறவுக்காரர்கள் அத்தனைபேரும் கிராமத்தில் வசிக்கின்றனர். கார்த்தி-ரஞ்சனி திருமணம் வருகிற 3-ந் தேதி கோவையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. கோவை கொடிசியா அரங்கில் நடைபெறும் இந்த திருமணத்துக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கார்த்தியின் அண்ணன் சூர்யா-ஜோதிகா திருமணத்தின் போது குறிப்பிட்டவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர்.


உறவினர்கள் அனைவரையும் மகன் திருமணத்திற்கு அழைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் சிவகுமாருக்கு. அதனை போக்கும் வகையில் கார்த்தி-ரஞ்சனி திருமணத்திற்கு உறவினர்கள் அனைவரையும் அழைத்து விருந்து படைக்க முடிவு செய்து, அத்தனை பேருக்கும் நேரில் போய் அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு உறவினரிடமும், "இது உங்கள் வீட்டு திருமணம். கண்டிப்பாக திருமணத்துக்கு வந்து மணமக்களை ஆசீர்வதிக்க வேண்டும்" என்று அன்பாக அழைப்பு விடுத்தனர். "நீங்கள் சொன்னாலும் சரி, சொல்லாவிட்டாலும் சரி, இது எங்கள் வீட்டு திருமணம்தான். கண்டிப்பாக வருவோம் என்று கூறியுள்ளனர். திருமணத்திற்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் அனைத்து ஏற்பாடுகளும் ஜரூராக நடக்கின்றன. சிவகுமாரின் பாரம்பரிய குல வழக்கப்படி திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்கு முந்தின நாள் சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் கோவைக்கு வந்து தங்குகிறார்கள். திருமணத்தன்று காலை சிவகுமார் குடும்பத்தினர் காசி கவுண்டன்புதூரில் உள்ள தங்களது சொந்த வீட்டுக்கு செல்கின்றனர். அதைத் தொடர்ந்து திருமண சடங்குகள் நடக்கின்றன. பின்னர் கார்த்தி ரஞ்சனிக்கு தாலி கட்டுகிறார்.

திருமணத்தை சொந்த ஊரில் நடத்துவது குறித்து கார்த்தி கூறுகையில், "சென்னையில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றுதான் முதலில் நினைத்தோம். அப்புறம் ஒரு ஊரையே சென்னைக்கு அழைத்து வருவதில் உள்ள சிரமம், டிராபிக் ஜாம் மற்றும் சில இடையூறுகள் என எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்தோம். நமக்காக ஏன் ஒரு ஊரையே சிரமப்பட வைக்கணும். அதைவிட அந்த ஊரிலேயே நடத்திவிட்டால் என்ன என்று எண்ணிதான் கோவையில் திருமண விழா நடத்த ஏற்பாடுகள் செய்தோம். கல்யாணத்துக்காக ஒரு மாதம் படப்பிடிப்புக்கு லீவு போட்டுள்ளேன். ஒரு மாதம் கழித்து 'சகுனி' ஷுட்டிங் ஆரம்பிக்கும். சிறு வயதில் அடிக்கடி குடும்பத்துடன் கோவை சென்று வருவோம். அப்போதெல்லாம் விவசாயம் பிரமாதமாக நடக்கும். இப்போது எல்லாருமே வேலை விஷயமாக ஊரை காலி செய்துவிட்டு வெளியூருக்கு வந்துவிட்டனர். விவசாயமும் அங்கு இல்லாமல் போனது. இருந்தாலும் கோவையின் குளிரும், பசுமையும் இங்கு அப்படியே உள்ளது. ஒரு ஊருக்கே ஏ.சி.போட்ட மாதிரி அப்படி ஒரு ஜில் க்ளைமேட்... அங்கு உள்ளது," என்றார்.

பிரமாண்ட ஏற்பாடுகள்

கார்த்தி திருமணம் நடைபெற உள்ள கொடிசியா அரங்கம் வெகு விசேஷமாக அலங்கரிக்கப்பட்டு வருகிறது. வேறு உலகத்துக்கே வந்தது போன்ற நினைப்பை பார்ப்பவருக்கு உண்டாக்கும் விதத்தில் அலங்கார வேலைகள் கடந்த 1 வாரமாக நடந்து வருகின்றன. மணமகன்-மணமகளுக்கு தனித்தனி அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த திருமணத்தில் சைவ சாப்பாடு மட்டுமே பரிமாறப்பட உள்ளது. இந்த உணவு 2 வகைகளில் பரிமாறப்படுகிறது. வழக்கமான கல்யாண பந்தி மற்றும் பஃபே முறை என இரு விதங்களில் உணவுகள் பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பட்டினி சாத விருந்து

திருமணத்துக்கு முந்தின நாள் அதாவது சனிக்கிழமை மதியம் 1 மணிக்கு பாரம்பரிய முறைப்படி பட்டினி சாத விருந்து நடைபெறுகிறது. இதில் நடிகர் சிவகுமார் உறவினர்கள் கலந்து கொள்கிறார்கள். 3 நாட்கள் நடைபெறும் திருமண விழாவில் முதல் நாள் நடைபெறுவதுதான் இந்த பட்டினி சாத விருந்து. அதாவது மணமக்களுக்கு அளவு குறைவான சத்தான உணவு வழங்கப்படும். மணமக்களுடன் மற்றவர்களும் சாப்பிடலாம். இதில் கொஞ்சம் சாதத்துடன் (சோறு) பழம், பழச்சாறு இடம் பெறும். வயிற்றுக்கு முழுச் சாப்பாடு சாப்பிடக் கூடாது. இது முகூர்த்தம் முடியும் வரை தொடரும்.

ரசிகர்களுக்கும்

இந்த சிக்கன சாப்பாட்டைத்தான் பட்டினி சாத விருந்து என்கிறார்கள். முன்னதாக காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் பந்தக் கால் நடப்படுகிறது. அன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை வரவேற்பு நிகழ்ச்சியும், 9.10 மணிக்கு இணை சீர் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து ரசிகர் மன்றத்தினருக்கு விருந்து அளிக்கிறார் கார்த்தி. இதற்காக அனைத்து மன்றத்தினருக்கும் தனித்தனியாக அழைப்பு அனுப்பியுள்ளார்.


http://ahotstills.blogspot.com/




  • http://ahotstills.blogspot.com/


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger