தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ஈழத் தமிழர் பிரச்னை குறித்த தீர்மானத்தை இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய விமர்சனம் செய்தது குறித்து மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய அரசியல் தீர்மானம் குறித்து வெளிநாட்டவர் இவ்வாறு முதல்வரையும், அதன்மூலம் தமிழக சட்டப்பேரவையையும் கொச்சைப்படுத்திப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இதுபோன்றவர்களை சட்டமன்றத்துக்குள் கொண்டுவந்து விசாரணை நடத்தி தண்டனைகூட கொடுக்க முடியும் என வீரமணி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, திருச்சியில் இலங்கை பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபாய ராஜபக்சேவின் உருவபொம்மையை எரித்து புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
http://sirappupaarvai.blogspot.com/
http://sirappupaarvai.blogspot.com/
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?