Friday, 12 August 2011

சமச்சீர் கல்விய��ப் படித்தால் கிளர்க் வேலைக்கு்த��ன் போகலாம்- டாக்��ிட்டரு விஜயகாந்த்



 சமச்சீர் கல்வியைப் படித்தால் கிளர்க்குகளை தான் உருவாக்கலாம். அப்துல் கலாம் போன்றவர்களை உருவாக்க முடியாது என்று தேமுதிக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நகர்ப்புறங்களில் வசதிகள் அதிகமுள்ள பள்ளிகளில் படித்த பிள்ளைகள் கூறுகையில், நாங்கள் 4-ம் வகுப்பில் படித்தது தான் தற்போது 8-ம் வகுப்பு பாடத்தில் உள்ளது. இதில் என்ன புதிதாக கற்றுக்கொள்ளப் போகிறோம் என்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க மறு புறம் கிராமப்புற பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 8-ம் வகுப்பு பாடப்புத்தகம் படிப்பதற்கு கடினமாக உள்ளது. பொதுப்பாடத்திட்டதின்படி தேர்வு வைத்தால் நகர்ப்புற மாணவர்கள் எளிதில் தேர்வாகி மேல் படிப்புக்குச் சென்றுவிடுவார்கள். ஆனால் கிராமப்புற மாணவர்களால் அது முடியாது. இதை சமூக நீதி என்று எவ்வாறு கூற முடியும்?

தற்போதுள்ள பாடத்திட்டத்தை படித்தால் கிளர்க்குகளை உருவாக்கலாம். ஆனால் அப்துல் கலாம் போன்றவர்களை உருவாக்க முடியாது. 

உண்மையான சமச்சீர் கல்வியைக் கொண்டு வர வேண்டுமானால் முதலில் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.

வண்டிக்கு முன்புதான் குதிரையை மாட்ட வேண்டுமே தவிர, குதிரைக்குப் பின்னால் வண்டி இழுத்துக் கொண்டு ஓடுவது சரியாக வராது. தற்போதைய பொதுப் பாடத்திட்டம் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.

நில மீட்பு நடவடிக்கைளால் மக்கள் நிம்மதி பெருமூச்சு
கடந்த ஆட்சியில் திமுகவினர் சட்ட விரோதமான முறையில் மக்களை பயமுறுத்தி மக்களின் சொத்துக்களை பறித்தனர். இப்போது இத்தகைய சொத்துக்களை மீட்டு உரியவர்களுக்கு தர முன் வந்து இருப்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் வரவேற்வேற்கப்படுகிறது.

ஆனால் முன்னாள் முதல்வர் கருணாநிதி பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார், பொய் வழக்கு போடுவதாக குற்றம் சொல்கிறார். அப்படி என்றால் நீதிமன்றம் சென்று தங்களை விடுவித்துக் கொள்வது தான் முறையே தவிர திமுகவினர் ஆர்ப்பாட்டம் அமளி என்று நடத்துவது போடப்பட்டது பொய் வழக்கு அல்ல என்பது வெட்ட வெளிச்சமாகிறது. 

அரசின் நில மீட்பு நடவடிக்கையால் மக்கள் நிம்மதியுடன் இருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் ஆதரித்து வெற்றி பெறச் செய்துள்ள கூட்டணியால் உருவான இந்த ஆட்சி அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் சமுதாயத்தை உருவாக்கும் வகையில் நிதி நிலை அறிக்கை திருப்பு முனையாக அமைந்துள்ளது.

கண்ணை மூடிக் கொண்டு பாராட்டலாம்
தமிழக அரசு ஒரு சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. பல்வேறு இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு உதவிகளும் அதிகமாக்கப்பட்டுள்ளது. அனைவரும் பாராட்டும் வகையில் சிறந்த பட்ஜெட் அமைந்துள்ளது. இதில் புதிய திட்டம் எதுவும் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். அவர்கள் கண் இருந்தும் பாராத கருத்து குருடர்கள். இது கண்ணை மூடிக்கொண்டு பாராட்டக் கூடிய பட்ஜெட்.

அந்த அளவுக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஏழை நடுத்தர மக்களை விலைவாசி உயர்வு தாக்கத்தில் இருந்து மீட்பதற்கு புதிய திட்டங்கள் உதவும். ரூ.8 ஆயிரத்து 900 கோடி அளவுக்கு புதிய திட்டங்களும், சலுகைகளும் அளிக்கப்பட்டு இருப்பது சமுதாயத்தின் அடித்தள மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும்.

ஏழைகளை அடையாளம் காண்பித்து அவர்களுக்கு ஏற்படும் குறைகளைகளைய அடையாள அட்டை வழங்க வேண்டும். ஏழைகளுக்கு உதவிகள் முழுமையாக கிடைக்க இடையூறாக இருந்து தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பு அதிகரிக்க கல்லூரிகளிலேயே, அவர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.

திமுக ஆட்சியில் இதற்கான அக்கறை செலுத்தப்படவில்லை. விவசாயிகளுக்கு இப்போது சலுகைகளை அரசு அறிவித்து உள்ளது. அவர்கள் பயிரிடும் விளை பொருட்களுக்கு உத்தரவாதம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்களுக்கு இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பெண்கள் நாட்டின் கண்கள் என்ற திட்டத்தை நான் எனது சொந்த பணத்தில் செயல்படுத்தினேன். எல்.ஐ.சி. மூலம் ரூ. 10 ஆயிரம் முதலீடு செய்தால் திருமண வயதை எட்டும் போது அந்த பெண்ணுக்கு ரூ.2 லட்சம் கிடைக்கும். இது போன்று ரூ.30 ஆயிரம் போட்டால் 18 ஆண்டில் ரூ.3 லட்சம் கிடைக்கும் திட்டம் எல்.ஐ.சி.யில் உள்ளது. இதனை அரசு பரிசீலிக்க வேண்டும்.

கடந்த திமுக ஆட்சியில் சுய உதவிக் குழுக்கள் அரசியல் நோக்கத்திற்காக பயன்பட்டு வந்தன. சமூக நலத்துறையில் இருந்த சுய உதவி குழுக்கள் மு.க.ஸ்டாலினிடம் உள்ளாட்சி துறை இருந்ததால் அந்த துறைக்கு மாற்றப்பட்டது. எனவே, சுய உதவிக் குழுக்களை மீண்டும் சமூக நலத்துறைக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.



இப்போ புரிகிறதா மக்களே! எதிகட்சி தலைவர் என்கிறது எவளவு பொறுப்புள்ள பெரிய பதவி என்பது? அந்த இடதுகேல்லாம் இவர மாதிரி உள்ளவங்கள உக்கார வச்சா இப்படி தான் பேசவும் தெரியாது, பேசிறது என்னானும் தெரியாம  தறிக்கெட்டு ஓடும் ....





http://girlsstills.blogspot.com/



  • http://girlsstills.blogspot.com/


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger