இடஒதுக்கீட்டை எதிர்க்கும் அமிதாப்பச்சனின் ஆரக்ஷான் படத்தை எதிர்த்து சென்னையில் இன்று விடுதலை சிறுத்தைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமிதாப்பச்சன் மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தி படம் ஆராக்ஷன். தமிழில் இடஒதுக்கீடு என்று அர்த்தம். 0இந்தப் படத்தை பிரகாஷ் ஜா தயாரித்துள்ளார்.
'நான் இடஒதுக்கீட்டுக்கு எதிரானவன்' என்ற துணை தலைப்புடன் இந்த சினிமா பல மாநிலங்களில் ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்றுள்ளன. இதனால், இந்த படத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆரக்ஷான் படம் ஓடும் சத்யம் தியேட்டர் முன்னால் விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் கட்சி கொடிகளுடன் திரண்டார்கள்.
"இடஒதுக்கீட்டுக்கு எதிரான ஆரக்ஷான் படத்தை தடை செய், பெரியார், அம்பேத்கார் இடஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரான ஆரக்ஷான் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்," என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் வன்னிஅரசு, கருத்தியல் பரப்பு துணை செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, தனிச் செயலாளர் மடிப்பாக்கம் வெற்றிச்செல்வம், மாவட்ட நிர்வாகிகள் விடுதலைச் செல்வன், சாரனாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அனைவரும் தியேட்டருக்குள் நுழைய முயற்சித்தனர். போலீசார் விரைந்து வந்து அவர்களை கைது செய்தனர்.
மயிலாப்பூர் ஐநாக்ஸ் தியேட்டரிலும் ஆரக்ஷான் படம் திரையிடப்படுவதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். மாவட்ட நிர்வாகிகள் இளஞ்செழியன், வக்கீல் எழில் கரோலின், பகலவன், குமரப்பா உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
தடையை நீக்கக் கோரி வழக்கு
இதற்கிடையே, இந்தப் படத்துக்கு உத்திரபிரதேசம், பஞ்சாப் மற்றும் ஆந்திர மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி இயக்குநர் பிரகாஷ் ஜா அலகாபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்
http://girlsstills.blogspot.com/
http://girlsstills.blogspot.com/
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?