கலைஞர் டி.வி.யுடன் தமக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று 2ஜி சிறப்பு நீதிமன்றத்தில் திமுக எம்.பி. கனிமொழி கூறினார். வழக்குரைஞர்கள் வேலைநிறுத்தம் காரணமாக சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை வாதம் நடைபெறவில்லை.
இதனால் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிபதியுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மத்திய தொலைத்தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார் உள்ளிட்டோர் தங்கள் தரப்பு பற்றி நீதிபதியிடம் பேசினர்.
சாஹித் உஸ்மான் பல்வாவின் டி.பி.ரியால்டி நிறுவனத்திடமிருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியது தொடர்பாக கனிமொழி மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
நீதிபதியிடம் பேசும்போது இந்தக் குற்றச்சாட்டை கனிமொழி மறுத்தார். "கலைஞர் டி.வி.க்கும் எனக்கும் ஒருபோதும் தொடர்பு இல்லை. அந்த நிறுவனம் எப்படி இயங்குகிறது, அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பது பற்றி எனக்கு ஏதும் தெரியாது' என்று அவர் கூறினார்.
சிபிஐயின் மூன்றாவது குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் இன்னும் தாக்கல் செய்யப்படாதது பற்றி நீதிபதியிடம் சரத்குமார் குறைபட்டார். "என்னைப் போன்ற பலர் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக சிறையில் வாடும் நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பலர் மீது இன்னும் குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யப்படவில்லை' என்று அவர் கூறினார்.
கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களான கனிமொழி, சரத்குமார் ஆகியோர் கடந்த மே 21-ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரது ஜாமீன் மனுக்களும், அவை தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
http://girlsstills.blogspot.com/
http://girlsstills.blogspot.com/
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?