Friday, 12 August 2011

கருணை மனுக்கள் ந���ராகரிப்பு ஏமாற்றத்தை அளிக்கிறத��:



இராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நிராகரித்திருப்பது வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் தருகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அறிவு என்கிற பேரறிவாளன், சிறீஹரன் என்கிற முருகன், சாந்தன் ஆகிய மூன்று பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா தேவி சிங் பாட்டீல் நிராகரித்து விட்டார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

இவர்கள் மூவருக்கும் இந்திய உச்ச நீதிமன்றம் 1999ஆம் ஆண்டில் மரண தண்டனையை உறுதி செய்தது. அதன் பிறகு 2000வது ஆண்டில் இவர்கள் மூவரும் குடியரசுத் தலைவருக்கு தங்கள் மீது கருணை காட்டி, மரண தண்டனையை குறைக்குமாறு கேட்டு கருணை மனுக்களை அனுப்பி வைத்தனர். அந்தக் கருணை மனுக்களின் மீது 11 ஆண்டுகளுக்குப் பிறகு – மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் படி – முடிவெடுத்துள்ள குடியரசுத் தலைவர், கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். இது எதிர்பாராத, வேதனை தரும் முடிவாகும்.

இந்த மூவரும் கருணை மனுக்களை அனுப்பிய ஆண்டிலோ அல்லது அடுத்த ஓராண்டிலோ இம்முடிவை அறிவித்திருந்தால், இப்படிப்பட்ட வருத்தமும், ஏமாற்றமும் ஏற்பட்டிருக்காது. அவர்களின் இறப்பினால் ஏற்பட்ட வடுக்களும் கூட ஆறியிருக்கும். ஆனால் 11 ஆண்டுகள் கிடப்பில் வைத்துவிட்டு, நிச்சயம் தங்களுடைய கருணை மனுக்கள் ஏற்கப்படும் என்ற நம்பிக்கையோடு, தனிமைச் சிறையில், ஒரு எதிர்பார்ப்புடன் இருந்துவந்த இந்த மூன்று இளைஞர்களுக்கு, இப்படியொரு ஏமாற்றத்தை குடியரசுத் தலைவர் தந்திருப்பது அநீதியானது. இது நம்பவைத்து கழுத்தை அறுப்பது போன்ற ஒரு முடிவாகும்.

சிறையிலேயே தங்களது இளமையைத் தொலைத்த இவர்கள் மூவருக்கும் விதிக்கப்பட்டது மரண தண்டனை மட்டுமே. ஆனால், அரசு அதனை நிறைவேற்றத் தாமதித்த இந்த இடைக்காலத்தில் ஒரு ஆயுள் தண்டனையையும் இவர்கள் அனுபவித்துவிட்டார்கள். இதற்குப் பிறகு இவர்களுக்கு மேலும் ஒரு தண்டனையாக மரண தண்டனையையும் நிறைவேற்றப் போகிறதா அரசு? ஒரு குற்றத்திற்காக நீண்ட சிறைத்தண்டனை, பிறகு மரண தண்டனை என்று இரண்டு தண்டனையாகும்! இது அநீதியல்லவா?

ஊஐகஉ இந்த மூவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இது பெரும் துயரமல்லவா? இப்படியொரு கேள்வியை நாம் எழுப்புவது புதியதல்ல, கருணை மனுவின் மீது பல ஆண்டுகள் தாமதித்து முடிவெடுக்கும் மத்திய அரசின் போக்கை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஜெகதீஷ் (எதிர்) மத்தியப் பிரதேச அரசு வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்ச்சித்தது.

"மரண தண்டனையை நிறைவேற்றுவதில் உள்ள கொடூரத்தையும், அதனால் ஏற்படும் வலியைப் போன்றதே, அதனை நிறைவேற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் காலத்தில் ஏற்படும் மனிதத் தன்மையையே பாதிக்கும் தாமதமாகும். மரண தண்டனை விதிக்கப்பட்ட காலத்தில் இருந்து அதனை நிறைவேற்றும் நாள் வரையிலான காலத்தில் தண்டிக்கப்பட்ட அந்த மனிதனை அது கொடூரமாக வதைக்கிறது" என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.

தங்கள் வாழ்வின் முடிவை நிர்ணயிக்கப்போகும் மரண தண்டனையை எதிர்பார்த்து 12 ஆண்டுகளாக வேலூர் சிறையில் வாடும் இந்த மூன்று பேரும் அப்படிப்பட்ட கொடுமையைத்தானே அனுபவித்து வந்தனர்? வேதனையான அந்த சிறைக்காலத்திற்குப் பிறகு அவர்களின் தண்டனையை குறைத்து நிவாரணம் அளித்திருந்தால் அது மனிதாபிமானமாக இருந்திருக்கும். மாறாக, மரண தண்டனையை உறுதி செய்வது தண்டனை இரட்டிப்பாக்காதா? என்று கேட்கிறோம்.

எதற்காக இவ்வளவு தாமதித்து இந்த துயரத்தை அளிக்க வேண்டும்? இதற்கான பதில் தங்களுக்கும் தெரியவில்லை என்று கூறியுள்ள நீதிபதிகள், இந்த தாமதத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் குடும்பத்தினர் அனுபவிக்கும் வேதனையையும் எடுத்துக் கூறியுள்ளனர். "மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள கைதிகள் போல், அவர்களின் குடும்பத்தினரும், மனைவியும், பிள்ளைகளும், சகோதர்ர்களும், சகோதரிகளும் என்ன ஆகுமோ என்ற நிலையற்ற மன நிலையில் அதே துயரத்தை அனுபவித்து வந்துள்ளனர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவர்களை ஏன் இப்படி மோசமான வகையில் நடத்திட வேண்டும் என்பதே எங்களது கேள்வியாகும்" என்று கூறியுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த விமர்சனத்தை மூத்த வழக்கறிஞர் அந்தியர்ஜூனா ஒரு கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது ஒரே மகனின் மரண தண்டனை குறைக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்த பேரறிவாளனின் தாயார் இன்றைக்கு நொருங்கிப் போயுள்ளார். ஒரு நாள் தனது தந்தை விடுதலைப் பெறுவார் என்று எதிர்பார்த்த நளினியின் மகளுக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு துயரமான அதிர்ச்சி.

இன்றைய உலகம் மரண தண்டனையை, சட்டத்தின் பார்ப்பட்ட நீதியாகக் கருதவில்லை. அதனால்தான் 137 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. கொலை செய்தவனுக்கு தண்டனையாக நீதமன்றம் அளிக்கும் மரண தண்டனையும் கொலைதான் என்று இன்றைய உலகம் கருதுகிறது. தண்டனையின் நோக்கம், குற்றம் செய்த மனிதனை மாற்றுவதே, மாய்ப்பது அல்ல என்று உலகம் கூறுகிறது. ஆனால், இந்திய அரசு மரண தண்டனைக்கு எதிரான ஐ.நா.வின் அந்த பிரகடனத்தில் இதுவரை கையெழுத்திடவில்லை. அதன் விளைவே, வாழ்வுரிமையை பறிக்கும் மரண தண்டனை மனிதாபிமானமற்று இந்தியாவில் இன்றும் வாழ்ந்து வருகிறது.

ஊஐகஉ மானுடத்தின் போக்கிற்கும், மனிதாபிமானத்திற்கும் எதிரான மரண தண்டனைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு முன்வராத நிலையில், மானுடம் வெறுக்கும் மரண தண்டனைக்கு முற்றுப் புள்ளி வைக்க மனிதாபிமானத்தோடு ஒரு தீர்மானத்தை தமிழக சட்டப் பேரவையில் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் நிறைவேற்ற வேண்டும். அதன் மூலம் வாழ்வுரிமையை பறிக்கும் மரண தண்டனைக்கு முதலில் முற்றுப் புள்ளி வைத்த மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும். அப்படியொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் ஒரு முன்மாதிரியாகும், அதனைச் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.



http://girlsstills.blogspot.com/



  • http://girlsstills.blogspot.com/


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger