Friday 12 August 2011

எமது இலக்கு சுதந���திர தமிழீழமே!: பிரதமர் வி.ருத்ரகு���ாரன்



தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டத்தை புறந்தள்ளி விட்டு, சலுகை - அபிவிரித்தி அரசியலை முன்னிறுத்தும் மகிந்தவின் நிகழ்ச்சி நிரலுக்குள், விடுதலைப் போராட்டத்தை பயணிக்க முடியாது. எமது இலக்கு சுந்திர தமிழீழமே என நாடு கடநத தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலைவரங்கள், நா.த.அரசாங்கத்தின் செயற்பாடுகள், தமிழர் அரசியல் முன்னெடுப்புகள் என பல்வேறுபட்;ட விடயங்களுக்கு, மக்களின் கேள்விகளுக்கு பதிலுரைக்கும், ஐ பி சி தமிழ் வானொலியின் நிகழ்ச்சியொன்றில் பிரதமர் வி.ருத்ரகுமாரன் அவர்கள் பங்கெடுத்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில், நேயர் ஒருவரின் கேள்விக்கு பதிலுரைக்கும் பொழுதே மேற்குறிப்பிட்ட கருத்தினை பிரதமர் அவர்கள் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கான அரசியல் வெளி முழுiமாக அற்ற காரணத்தினாலேயே, புலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தோற்றம் பெற்றது.

இந்நிலையில், சலுகைகளையும - அபிவிரித்திகளையும் முன்னிறுத்தி, மகிந்தாவினால் முக்கியத்துவப்படுத்தப்பட்டு வரும் தேர்தல் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள், விடுதலைப் போராட்டத்தை பயணிக்க முடியாது. எமது இலக்கு சுதந்திர தமிழீழமே.

இதனை வெளிப்படுத்தும் முகமாகவே, தாயக மக்கள் உள்ளுராட்சி சபைத் தேர்தலில், மகிந்தவினால் முன்னிறுத்தப்பட்ட சலுகை - அபிவிருத்தி அரசியலை முற்றாக நிராகரித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்துள்ளனர் என பிரதமர் தெரிவித்தார்.

தாயக மக்களின் இந்த உறுதியான நிலைப்பாட்டு தலைசாய்ப்பதென குறிப்பிட்ட பிரதமர் அவர்கள், இலங்கைத் தீவை நோக்கியதாக சர்வதேசத்தின் கவனம் இருக்கின்ற நிலையில், தமிழர் தாயகத் பகுதியில் மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற சாத்வீக வழியிலான போராட்டங்கள் முக்கியத்துவம் பெறுமென குறிப்பிட்டார்.

சாத்வீகவழிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் போதே, எமக்கான அரசியல் வெளி மெது மெதுவாக பெரிதுபெறும் என தெரிவித்ததோடு, நிலத்திலும் - புலத்திலும் சமாந்திரமாக முன்னெடுக்கப்படுகின்ற போராட்டமாக இது மாற்றம் பெறும் பொழுது, விடுதலைப் போராட்டத்தின் வீச்சு வலுவடையும் என தெரிவித்தார்.

தமிழீழம் என்பதான புலம்பெயர் தமிழர்களின் இறுக்கமான நிலைப்பாட்டினால் தான், தாயகத்தில சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன என்பதாக குறித்துரைத்த நேயர் ஒருவரின் கேள்விக்கு பதிலுரைத்த பிரதமர் அவர்கள், இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதலே, இலங்கைத் தீவை சிங்களத் தீவாக்கும் நோக்கில், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றன என்பதனை சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, உள்நாட்டு விவாகாரம் என்ற நிலைக்குள் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றம் என்ற கட்டத்தைக் கடந்து, தமிழர் போராட்டம் சர்வதேச மயப்பட்டிருக்கும் இவ்வேளை, தற்போது வலுதீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவரும் சிங்கள் குடியேற்றங்களை, அனைத்துலகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்கான வழிவகைகளை காண வேண்டுமென தெரிவித்தார்.

ஐ.நா நிபுணர் குழு அறிக்கை - சனல் 4 காணொளி ஆவணம் உட்பட சிறிலங்கா தொடர்பிலான வேகமாக மாறிவரும் சர்வதேச நிலைப்பாட்டை, எமது விடுதலைப் போராட்டத்துக்கு, சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில்தான், எமது இராஜதந்திரம் தங்கியுள்ளதென, நேயர் ஒருவரின் இன்னுமொரு கேள்விக்கு பதிலுரைத்த பொழுது தெரிவித்தார்.

நாதம் ஊடகசேவை
தகவல்துறை அமைச்சகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

http://sirappupaarvai.blogspot.com/




  • http://sirappupaarvai.blogspot.com/


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger