சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பீக் ஹவர் நேரங்களில் 50 பைசா சில்லரை பெற பயணிகள்-நடத்துநர் இடையே தகராறு ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது.
இந்தியாவிலேயே மிக குறைந்த கட்டணத்தில் பஸ் இயக்கப்படுவது தமிழகத்தில் தான். இதனால், தமிழகத்தில் உள்ள எல்லா போக்குவரத்து கழகங்களும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. ஆனால் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு கட்டண உயர்வு அமல்படுத்தவில்லை என அரசுகள் கூறி வருகின்றன.
இந்நிலையில் கடந்த தி.மு.க., ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட டீலக்ஸ், எல்.எஸ்.எஸ்., ஆகிய பஸ்களால், மறைமுக கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
இப்படி ஒரு பக்கம் மறைமுக கட்டண உயர்வால் மக்கள் விழிபிதுங்கி நிற்கும் நிலையில் சில்லரைப் பிரச்சினையால் மக்கள் வேறு சிக்கலையும் சந்தித்து வருகின்றனர்.
தமிழக நகரங்களில் அதிகளவில் இயங்கும் எல்.எஸ்.எஸ் (முக்கிய ஸ்டாப்புகளில் மட்டும் நிற்பவை) பஸ்களால் மக்கள் அதிக சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
சாதாரண பஸ்களில் குறைந்த கட்டணமாக 2 ரூபாயும், எல்.எஸ்.எஸ்., பஸ்களில் 2.50 ரூபாயும், டீலக்ஸ் அல்லது சொகுசு பஸ்களில் 5 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பெருநகரங்களில், காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
ஆனால், இந்த நகரங்களில் ஓடும் பஸ்களில் பயணிகளுக்கு மீதம் சில்லரை கொடுப்பதில் தகராறு ஏற்படுவதை வழக்கமாக காணலாம். குறிப்பாக எல்.எஸ்.எஸ்., பஸ்களில் 50 பைசா, 1 ரூபாய் வாங்க கடும் வாக்குவாதமே ஏற்படுகிறது.
இதுகுறித்து, சென்னை கோட்டத்தை சேர்ந்த நடத்துனர் ஒருவர் கூறுகையில், பீக் ஹவர் நேரங்களில் கடும் நெரிசலுடன் பஸ்களை இயக்க வேண்டியுள்ளது. சில்லரைகளின் பயன்பாடு குறைந்து வரும் நிலையில் பயணிகள், அதிகளவில் 10 ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட நோட்டுகளை கொண்டு வருகின்றனர். இதனால், எல்லா பயணிகளுக்கு சில்லரை சரியான வழங்க முடியவதில்லை. இதில் கடுப்பாகும் சிலர், வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர், என்றார்.
சென்னையில், அலுவலக பணிக்கு தினமும் பஸ்சில் செல்லும் பயணிகள் சிலர் கூறுகையில், காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் இருப்பது உண்மை தான். ஆனால், இதற்காக சில நடத்துநர்கள் சில்லரை இல்லை எனக் கூறி வழியிலேயே இறக்கி விடுகின்றனர். இன்னும் சிலர் நோட்டுகளை வாங்கி வைத்து கொண்டு சில்லரை தர இழுத்தடிக்கின்றனர். அப்படியே தந்தாலும், 50 பைசாக்கள் அதிகளவில் தருவதில்லை. இந்த கொடுக்கப்படாத சில்லரைகள் அரசு கஜானாவிற்கு போவதில்லை. மாறாக நடத்துநர்களே எடுத்துக் கொள்கின்றனர்.
50 பைசா பயன்பாடு குறைந்துள்ள நிலையில், 3 ரூபாய் அல்லது 2 ரூபாய் என கட்டணத்தை ரவுண்டாக வசூலித்தால், மக்கள் அல்லது அரசு என யாராவது ஒருவர் பயன் பெறலாம். 50 பைசாவில் முடியும் கட்டணத்தால், தனிநபர் மட்டுமே பயன்பெறுகிறார், என்றனர்.

http://girlsstills.blogspot.com/
http://girlsstills.blogspot.com/
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?