பிரித்தானியாவில் முக்கிய நகரங்களான இலண்டன், மன்செஸ்ரர், பிரிஸ்ரல், நொட்டிங்காம், பேர்மிங்காம் உட்பட பல சிறு நகரங்கள் அடங்கலாக 30 இற்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த நான்கு நாட்களாக வன்செயல்கள் நடந்து வருகின்றன.யார் இந்த மார்க் டக்கன்?
: லண்டனின் வடக்கில் பிரபல தாதாவாக வலம் வந்தவன் மார்க் டக்கன், 30. இவனது பெற்றோர் பிரிட்டன் - ஆப்ரிக்க தம்பதியினர். துவக்க காலத்தில், நண்பர்கள் சகிதமாக, வார இறுதி நாட்களில் மட்டும் லண்டன் தெருக்களில் அடிதடியில் இறங்கி, சாகசம் காட்டி வந்த டக்கன், அதன்பின் வன்முறையை முழு நேர வாழ்க்கையாக மாற்றிக்கொண்டான். ஒரு கட்டத்தில், லண்டனின் பிரபல தாதாக் குழுக்களுக்கு துப்பாக்கி மற்றும் போதைப் பொருட்கள் சப்ளையராக மாறியவன், போலீஸ் கண்காணிப்பில் சிக்கினான். கடந்த 4ம் தேதி, லண்டனில் உள்ள டோட்டன்ஹேமில் மார்க் டக்கனை போலீசார் சுற்றி வளைத்தனர். சரணடைய மறுத்த மார்க், ஹாலிவுட் படத்தில் வருவது போல், போலீசாருடன் மோதலில் ஈடுபட்டான். இதையடுத்து, போலீசார் அவனை சுட்டுக் கொன்றனர்.
உண்மையில் அதுவல்ல பிரச்சினை இந்தப்பொரச்சினையால் பாதிக்கப்பட்ட குடும்பம் தனது இழப்பில் இருந்து மீழவில்லை. ஆனால் இந்த விடயத்தை வைத்து பிரித்தானியாவில் இருக்கும் கொள்ளைக்கும்பல்கள், வன்செயல் குழுக்கள், வறுமையில் வாடுவோர், கன்சர்வேட்டிவ் கட்சியில், அரசாங்கத்தில் அதிருப்தியுற்றோர் என அனைவரும் சேர்ந்து பிரிட்டனை ஒரு கலக்கு கலக்கி வருகின்றனர். இதுவரை 800 பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளனர். 170 பேர் குற்றம் சுமத்தபப்ட்டுள்ளனர்.
.
தொடர்பில்லா நகரங்கள் சிறு நகரங்களில் எல்லாம் நடக்கின்ற வன்செயல்களைப்பார்த்தால் உண்மையில் அது டங்கன் குடும்பத்திற்கு ஆதரவான வன்செயல்களோ அன்றி தமது ஆத்திரத்தினை வெளிக்காட்டும் வன்செயல்களாகவோ இருக்கவில்லை. மாறாக நூற்றுக்கு தொண்ணூறு விழுக்காடு வன்செயல்கள் அனைத்தும் மிகப்பெரிய கடைகளை கொள்ளை அடிக்கும் சம்பவமாகவே காணபப்டுகின்றது.
.
வறுமையில் வாடும் சமூகங்கள், அதியுயர் பொருட்களை நுகர முடியா சிறு பராயத்தினர், என அனைவரும் அதிஉயர் விலையுடைய பொருட்களை விற்கும் கடைகளை தேடி கொள்ளையடிக்கும் சம்பவங்கள்தான் நடக்கின்றன.
.
புறக்காரணங்கள்
.
1. அதிகரித்து வரும் சமூகங்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வு.
2. அதிகரித்துவரும் பொறுப்புணர்வற்ற குடும்ப கலாச்சாரம் மற்றும் சமூக பழக்கவழக்கங்கள்.
3. தொழில்வாய்ப்பின்மை.
4. பல்கலாச்சார புரிந்துணர்வினை
5. இறுதியாக நடப்பு அரசாங்கத்தில் விரக்தியுற்றோர்.
6. கூடவே பொலிஸ் ஆளணியினை குறைக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை.
கொல்லப்பட்ட டாங்கனின் விசாரணை
26 வயதான டங்கன் என்பவர் பொலிசார் மீது துப்பாக்கி மேற்கொண்டதால் பதிலுக்கு பொலிசார் துப்பாக்கி பிரயோகம் செய்ததில் கொல்லப்பட்டார் என்ற வாதம் எடுபடவில்லை. சுயாதீன பொலிஸ் விசாரணையில் டங்கன் பொலிசார் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யவில்லை என கூறப்பட்டுள்ளது.
.
பிரித்தானிய அரசு இந்த வன்செயல்களை கடந்த 30 வருடத்திற்குள் நாடளாவிய ரீதியில் பார்த்திருக்கவில்லை. ஒட்டுமொத்த வன்செயல்களின் பிரதிபலிப்பாக எதிர்க்கட்சியான தொழில்கட்சி மற்றும் முக்கியஸ்தர்கள், பொலிஸ் தரப்பினர் எல்லோரும் எதனைக்கூறுகின்றார்கள் என்றால் பொலிஸ் ஆளணி போதாது என்றே.
அடுத்து கூடுதலான வன்செயல்களின் கூட்டிணைப்பு சமூக வலைத்தளங்கள் ஊடாகவே நடந்தது. இது நான்கு நாட்களாக நடக்கின்றது ஆனால் சமூக வலைத்தளங்களை நடத்தும் கம்பனிகள், அமைப்புக்கள் இது தொடர்பில் நான்கு நாட்களாகியும் விழிப்படையவில்லையா. பிற நாடுகளில் இருக்கும் தளங்களை கட்டுப்படுத்த முடியும் என்றால் பிரிட்டனில் மட்டும் ஏன் முடியவில்லை?
http://ahotstills.blogspot.com/
http://ahotstills.blogspot.com/
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?