புது டெக்னாலஜிகள் எல்லாம் நமக்கு ஒரு வகையில் பயனுள்ளதாக இருந்தாலும், மற்றொரு வகையில் நம்மை சோம்பேறிகளாகவும், முட்டாள்களாகவும் வளர்க்க போட்டி போட்டுக் கொண்டு கண்டுபிடிக்கப் படுகின்றன.
நான் என்னுடைய மொபைல் நம்பரை தவிர யாருடைய நம்பரையும் நினைவில் வைத்துக் கொள்ள மாட்டேன். எத்தனை நம்பர் மாத்தினாலும் கடைசி நம்பர் மட்டுமே நினைவில் இருக்கும். ஒவ்வொரு முறையும் நம்பர் மாற்றும் போதும்,
"9898989898 இனி என் நம்பர்"என்று Uninor விளம்பரத்தில் வருவது போல நான் பெருமையாக பிறரிடம் சொல்லி கொள்வேன்.
எங்கள் ரூமில் நான் நுழைந்தாலே டிவியில் சன், கே, விஜய், அல்லது ஒரு இசை சேனலோ, காமெடி சேனலோ தான் ஓடி கொண்டிருக்கும். ஒரு செய்தி சேனலுக்கோ, டிஸ்கவரி சேனலுக்கோ தப்பி தவறி கூட போக மாட்டார்கள். அப்படியே சேனல் தவறி சென்று விட்டாலும்,
"சாமி தெரியாம பண்ணிபுட்டோம். எங்கள மன்னிச்சுடு" என்று உடனே கடவுளிடம் மன்னிப்பு கேட்டு தோப்பு கரணம் போட்டு விடுவார்கள்.
ஒரு மணிநேரம் செல்போன் சார்ஜ் இல்லை என்றால் நம் உடலில் ரத்தம் ஓடுவது நின்று பிணமாகி விட்டது போல ஒரு உணர்வு வந்து விடுகிறது.
செயற்கை கருவிகள் நம் உடலில் தங்கத்தை போன்று ஒரு அங்கமாக மாறி விட்டது. நம் உடலிலே நட்டு, போல்டு, செயற்கை இதயம் எல்லாம் வைக்க ஆரம்பித்து வெகு ஆண்டுகள் ஆகிவிட்டது. A-,AB+ போன்ற அரிய ரத்த வகை ஆபரேசன்கள் செய்வதற்கு பயன்படுத்த செயற்கை ரத்தத்தையும் கண்டுபிடித்து விட்டார்களாம்.
இன்னும் சில வருடங்களில் உங்கள் மூளையை கழட்டி விட்டு இன்டெல் Processor வைத்து தேவையான அனைத்து சாப்ட்வேர்களையும் load செய்து விடுவார்கள். சயின்டிஸ்டுகள், சிந்திக்கும் ரோபட்களை கண்டுபிடிப்பதற்கு பதிலாக நம்மையே ரோபட்டாக மாற்றி விடவும் வாய்ப்புண்டு. ஒவ்வொரு முறை processor அல்லது சாப்ட்வேர் அப்கிரேட் (Upgrade) செய்யும் பொழுது எந்திரன் சிட்டி ரஜினி போல,
ஐ ஆம் நாராயணசாமி Upgraded வெர்சன் 2.0 என்று சொல்லி கொள்ளலாம்.
தற்போதைய ஜெனரேசனில் பிறக்கும் குழந்தைகள் எளிதாய் டெக்னாலஜிகளை கற்றுக் கொள்கின்றனர். முன்பெல்லாம் கர்ப்பமாய் இருக்கும் பெண்கள் தங்கள் குழந்தைகள் நல்ல புத்திசாலியாய் பிறக்க நல்ல விசயங்களை பற்றி படித்துக் கொண்டோ, கேட்டுக் கொண்டோ இருப்பார்கள்.
"அர்ஜூனனின் மகன் அபிமன்யூ, அவரது தாயின் வயிற்றில் இருந்தபோது அர்ஜூனன் அவரது தாய் சுபத்ராவிற்கு சக்கரவியூகம் ஏற்பாடுகளைப் பற்றிக் கூறியபோது கேட்டதால், அவனுக்கு சக்கரவியூகம் பற்றி பகுதியளவு தெரியும். சுபத்ரா முதல் பகுதிய விளக்கங்களைக் கூறும்போது மட்டுமே விழிப்புடன் இருந்தார் அதன் பின்னர் அவர் தூங்கிவிட்டார். எனவே அபிமன்யூவிற்கு அந்த அமைப்பிற்குள் நுழைவது எவ்வாறு என்பது மட்டுமே தெரியும். ஆனால் அதிலிருந்து தான் எவ்வாறு வெளிவருவது என்பது தெரியாது. " Read full story
here.
தாய் சாப்பிடும் உணவு தன் வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கு கடத்தப்படுவது போல அவர்களுடைய செயல்பாடுகளின் நுணுக்கங்களும் கடத்தப் படலாம்.
என் அக்கா கர்ப்பமாய் இருந்த நேரத்தில், சீனாவில் இருக்கும் என் மாமாவுடன் தினமும் போனிலும் Skype சாட்டிலும் பேசிக்கொண்டிருப்பாள். என் அக்கா மகன் நகுலன் அவனுக்கு இரண்டு, இரண்டரை வயதான போதே, அவனாகவே இந்தியாவில் இருக்கும் எனக்கு மொபைல் மூலம் போன் செய்து விடுவான். கம்ப்யுட்டரை ஆன் செய்து உள்ளே சென்று தனக்கு பிடித்த பாடல்களை கேட்பது முதல், தன் அப்பாவுக்கு ஆன்லைன் மூலம் போன் செய்வது முதல் எல்லாம் அத்துபடி.
இத்தனைக்கும் அவனுக்கு ABCD கொஞ்சம் கொஞ்சம் சொல்ல தெரிந்தாலும், எழுத்தை recognize பண்ண சுத்தமாக தெரியாது. தமிழில் பேசச் சொன்னால் வேற்று கிரகவாசி போல ஏதோ உளறுவான். அவனை கேமராவில் போட்டோ எடுக்கும் போதெல்லாம்
ஒன், டூ, த்ரீ cheese என்று அழகாய் சீன மொழியில் சொல்லுவான். இரண்டு வருடம் சீனாவில் இருந்ததால் அங்கிருக்கும் சீன மக்களோடு பேசி பேசி என் அக்காவை விட அதிகம் சீன மொழியில் புலமை பெற்று விட்டான்.
சிலநாள் நான் ஆபிசில் வேலை செய்து கொண்டிருக்கும் போது
டொய்ங் டொய்ங்கென்று சத்தத்துடன், ஜிமெயில் சாட் பாக்ஸில் மெசேஜ்
Blink ஆகும்.
sfsdflksjdslkfsdfddddddd[]dddddddddddddsdgnldfgdfgggggg3333333333sdfsnfgoiurtnyrtyrty34343446343erereeyeeertekrt;erke;erbmvmbpmmmmmmmmmmmmerttttttttttttttdvfghgdnoiyldfkds kiiiiiiiiiiiiiiiiiidfgdfdnflknkljoooooooooooooefdsfgdfgdfdfsdfsd[]w4r34534sdf678979 /*dfgsgdfhdghdsghdfsgsdfgrt65ergefgdfgdfgஅவன் அனுப்பிய இந்த
Encrypted மெசேஜ்ஜை யாராவது
Decrypt பண்ணி கொடுத்தால் நல்லது. டெக்னிகல் ப்ளாக் வைத்திருக்கும் ப்ளாகர்களுக்கு கடுமையான சவால்.
அவனைப் பற்றி நான் எழுதிய ஒரு கவிதை,
நகுலன் என்றொரு அழகன்.He is a Little Mark Zuckerberg.மார்க் ஜுகர்பெர்க்கின் வாழ்கையை பற்றிய திரைப் படமான
The Social Network படம் போரடிக்காமல் விறுவிறுப்பாகவே சென்றது. அந்த படம் பார்த்தப் பிறகு எனக்கு பேஸ்புக் தளத்தை
Hack செய்யும் ஆசை வந்தது. சைபர் க்ரைமில் மாட்டிக் கொள்வேன் என்று பயந்து விட்டு விட்டேன். ;-)
-------*-------*-------*-------*-------*-------*-------*-------*-------*-------*-------*-------*-------*-------*
மூன்று வருடங்கள் வேளச்சேரியின் சகதியில் படுத்து உருண்டு விட்டு (வசித்துவிட்டு), பரங்கிமலை பகுதியில் என் நண்பன் ரூமுக்கு மாறியுள்ளேன். வேளச்சேரியை விட்டு வரும் போது பெரும் நிம்மதி ஏற்படுகிறது. சுற்றி சுற்றி ஏரிகள் அதிகம் இருந்தாலும் ரொம்பவும் வறட்சியான ஏரியா. ஏரி இருப்பதால் வேளச்சேரி என்று பெயர் வந்ததா? என்று தெரியவில்லை.
மழைகாலத்தில் மட்டும் வேளச்சேரி சாக்கடையால் நிரம்பி வழியும். பொதுவாக வெள்ளப் பகுதிகளை பெரிய பூட்ஸ் போட்டு கொண்டு பார்வை இட வரும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் வேளச்சேரியில் மட்டும் தங்கள் பொற்பாதங்களை வைப்பதில்லை.
நாம் பேருந்தில் செல்லும் போது சாக்கடையோரம் வசிக்கும் குடியை வாழ் மக்களை பார்த்து பரிதாப்பட்டு விட்டு கடந்து செல்லுவோம். ஆனால் மழைக்காலம் வந்து விட்டால், நம்மை பார்த்து நாமே பரிதாப்பட்டுக் கொள்ள வேண்டும்.
மடிப்பாக்கம் பக்கம் வீடு பார்க்கலாம் என்று நினைத்தேன். ஆனால் மடிப்பாக்கம் ரோட்டின் நடுவில் நின்று வாலை நீட்டி, பைக்கில் செல்லும் நம்மிடம் லிப்ட் கேட்கும் மாடுகளை நினைத்ததும் அந்த எண்ணம் கைவிடப் பட்டது. மடிப்பாக்கத்திற்கு மாடுப்பாக்கம் என்றே பெயர் வைத்திருக்கலாம். ஜெயலலிதாவிடம் சொன்னால் ஒரு
Flow வில் அதையும் மாற்றி இருப்பார்.
பரங்கி மலையில் உள்ள சர்ச்சில் இருந்தோ, மசூதியில் இருந்தோ எதோ ஒரு பாட்டு பாடிக் கொண்டிருக்கும். நான் கூடிய சீக்கிரம் மதம் மாற வாய்ப்புண்டு.
ஹாலிவுட் படங்களில் மூச்சு விடாமல் ஆங்கிலத்தில் பேசுவதை கேட்க்கையில் நம் காதில் புகை வரும். அதேபோல் புது ரூமில் உள்ள ஒரு நண்பன் தமிழை மூச்சு விடாமல் பேசுகிறான். நான்கைந்து தடவை திரும்ப திரும்ப கேட்க வேண்டி உள்ளது. தமிழ் மொழி மற்றும் அதன் காலாச்சாரம் மீது காதல் கொண்டு தமிழை கற்க விரும்பும் வெளிநாட்டு பெண் எவளாவது இவன் பேசுவதை கேட்டால்,
Why This Kolaveri? என்று கேட்டுவிட்டு தன் நாட்டிற்கு அடுத்த பிளைட் பிடித்து விடுவாள்.
தென் இந்தியாவின் புகழ் மிக்க திரையரங்கான பரங்கிமலை ஜோதியை இன்னும் சென்று பார்வையிடவில்லை. பிட்டுக்கு பெயர்போன இத்திரையரங்கில், பிட்டு துணி அணிந்து நடிப்பதற்கு பெயர்போன ஷகிலா ஆண்டியின் படங்கள் போடுவது எப்போதோ நிறுத்தப்பட்டு விட்டது. இப்போது ஆபாசம் இல்லாத (??) சுத்தமான தமிழ் படங்கள் மட்டுமே திரையிடப் படுகின்றன.
அதனால் தற்போது ஐயப்ப சாமி பக்தர்கள் சபரி மலை ஜோதியை கண்டு பக்தியில் பரவசம் அடைவது போல, நான் இந்த பரங்கிமலை ஜோதிக்கு சென்று பரவசம் அடையமுடியாதது மிகப் பெரிய துரதிஷ்டம்.
தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர்..
தமிழ்நாட்டின் ஜான்சி ராணி..
தமிழ்நாட்டின் விடிவெள்ளி..
தமிழ்நாட்டின் கவிமங்கை..
தமிழ்நாட்டின் தியாகச் செம்மல்
ஸ்ஸ்... மூச்சு வாங்குது.திருமதி. கனிமொழி அவர்கள் திகாரில் களி தின்னதை மறக்கடிக்க சென்னை ஏர்போர்ட்டில் கொடுத்த வரவேற்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இந்த வரவேற்ப்பை திகாரிலிருந்து டெல்லி ஏர்போர்ட் வரை ஏன் கொடுக்கவில்லை? ஆங்கில நியூஸ் சேனல்கள் கவர் ஸ்டோரி போட்டு அலங்கரித்து விடுவார்கள்.
ஆனால் இதே வரவேற்ப்பை கனிமொழி டெல்லி செல்லும் போது கொடுத்திருந்தால், தமிழ்நாட்டிற்கு இன்னும் நிறைய செல்வங்களை அள்ளி வந்திருப்பார்.
கனிமொழி சென்னை திரும்பிய பிறகு, திமுக வின் பழைய ரத்தம் எல்லாம் எடுக்கப் பட்டு புது ரத்தம் பாய்ச்சப்பட்டதால் அதன் தலைவர்களும் உறுப்பினர்களும் தெம்பாக கட்சி வேலைகளை செய்கின்றதாக தகவல். வலையுலக தி.மு.க அனுதாபிகளும் சுறுசுறுப்பாக ஒரு நாளைக்கு இரண்டு பதிவுகள் போடுவதாக தெரிகிறது.
தற்போது ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள் படு மொக்கையாக இருப்பது கடும் அயர்ச்சியை தருகிறது. போராளி சூப்பராக இருக்கிறது என்ற விமர்சனத்தை படித்து விட்டு போய் பார்த்தால் சன்டிவியின் காமெடி சீரியல் போல் படு அமெச்சூர் (amateur) தனமாய் இருக்கிறது. இசையும் பாடலும் காதுக்குள் வண்டு புகுந்த பீலிங்கை ஏற்படுத்துகின்றன.
மந்திரப் புன்னகை கரு பழனியப்பனுக்கு அடுத்து சசிகுமார் தான் ரொம்ப புத்திசாலிதனமாய் வசனம் பேசுகிறார். இவரும் நாயகியும் சித்தப்பாவும் மகளும் போல இருப்பது படத்திற்கு பலம்.
இந்த வருடத்தில் எனக்கு பிடித்த படங்கள்.
யுத்தம் செய் மற்றும்
வாகை சூடவா.