Friday 9 December 2011

உலகத்தின் எதிர்��ாலம் அர்த்தமற்ற���ப் போகப்போகிறது - பான் கி மூன்



தென்னாபிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் புவி வெப்பமடைதலைத் தடுத்தல் குறித்த கோப்-15 மாநாட்டின் தொடர்ச்சி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வில் பங்கேற்ற ஐ.நா செயலர் பான் கி மூன் தனது பதவிக்காலத்தில் ஓர் உருப்படியான உரையை ஆற்றியுள்ளார். உலகம் என்கின்ற அழகான இந்தக் கிரகத்தின் எதிர்காலம் அர்த்தமற்றதாக போகப்போகிறது என்ற கவலையை அவர் வெளியிட்டார்.

காலநிலை மாற்றம், வெள்ளப் பெருக்கு, துருவப் பனிமலைகள் கரைதல், கடல்மட்ட உயர்வு என்று புவிமீது நடைபெறும் தாக்கங்கள் எல்லை மீறிவிட்டன. இந்தப் புவி மீது மக்கள் வாழ்வே அர்த்தமற்று போகப்போகிறது. மக்கள் மனதில் வளர்த்துள்ள கனவுகளை எல்லாம் இந்தப் பேரழிவு குலைத்து நாசம் செய்யப்போகிறது.

புவியின் எதிர் காலம் குறித்த நம்பிக்கை மொழிகளை ஐ.நாவால் வழங்க முடியாத அவலம் இருப்பதை அவருடைய உரை சுட்டிக்காட்டியது. அதேவேளை உலகப் பொருளாதார நெருக்கடியும் மக்களுடைய கனவுகளை சிதைத்துக் கொண்டிருக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்ட மறுக்கவில்லை. மக்கள் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராமல் வரும் இயற்கைப் பேரழிவுகள் மனித குலத்தின் ஆனந்தமான கனவுகளையே சிதைத்துவிட வல்லது.

புவியை அதிகமாக வெப்பமாக்கும் நாடுகள் அதனுடைய பாதிப்பை அடைவதற்கு முன்னரே ஏழை நாடுகளை அது பாதித்துவிடுகிறது. தாய்லாந்தில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அந்த நாட்டின் ஏழு முக்கிய பகுதிகளை வெள்ளத்தில் ஆழ்த்தியது.

ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள பஞ்சமும் வரட்சியும் முழு உலகுக்குமே சவாலாகியுள்ளது. எனவே அழகான இந்த உலகத்தை பயன்படுத்தி ஒரு தனிமனிதன் தன்னுடைய கனவுகளை நிறைவேற்ற முடியாதளவுக்கு எங்கும் இறுக்கம் நிறைந்து கிடக்கிறது. இப்படியாக புவியை வெப்பமாக்கி, போரால் சூடாக்கி, நாசம் பண்ணும் அரசியல் தலைவர்களும், உலக அரசுகளும் உலக மக்களுக்கு வரப்பிரசாதமா இல்லை சாபக்கேடா என்ற கேள்விக்கு ஐ.நா செயலர் இப்போதுதான் சரியான பதிலை கொடுத்துள்ளார். ஆனால் வெள்ளம் தலைக்கு மேல் போய்விட்டது, அவருடைய பேச்சு சுடலை ஞானமே என்பதை மறுக்க இயலாது.


http://actressmasaala.blogspot.com



  • http://tamilsexstorys2u.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger