முல்லை பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக் படத்தை சென்னையில் திறத்து வைத்தார் இயக்குனர் தங்கர் பச்சான்.
தென் மாவட்ட தமிழர்கள் வறட்சியில் படும் கஷ்டத்தையும் அதே நேரம் பெரியாறு அணையின் தண்ணீர் கடலில் அநியாயமாக விழுந்து வீணாவதையும் , ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பார்த்த பென்னி குயிக் என்ற வெள்ளைக்கார மனிதன் மனம் நெகிழ்ந்து, அன்றைய ஆங்கில அரசின் எதிர்ப்பையும் மீறி , இங்கிலாந்தில் உள்ள தனது சொத்துகளை விற்று, தென் மாவட்டத் தமிழர்களைக் கொண்டு சென்று ஏராளமான ஆபத்துகளையும் உயிரிழப்புக்களையும் சந்தித்து தனது பணம், பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் பிணம் இரண்டையும் இணைத்து இழைத்துக் கட்டிய அணை முல்லைப் பெரியாறு அணை.
பென்னி குய்க் உருவ படத்தை திறந்து வைத்த இயக்குனர் தங்கர்பச்சான் செய்தியாளர்களிடம் பேசும்போது,
'' ஓட்டு பிச்சைக்காக அணை பலவீனமாக இருக்கிறது என்ற பொய்யான பிரச்சாரம் செய்கிறது கேரள அரசு.
அணை பலவீனமானால் அதை சரி செய்து கொள்ளலாம், ஆனால் மலையாளிகளுக்கும் தமிழர்களுக்கும் உள்ள உறவு பவலவீனமானால் அதை சரி செய்ய முடியாது என்று கேரள அரசை எச்சரித்தார்.
கேரளாவில் எப்படி அணைத்துக் கட்சியும் ஒன்று சேர்ந்து போராடுகிறதோ அதே போல் தமிழகத்திலும் அணைத்துக் கட்சிகளும் ஒன்று சேரர்ந்து முல்லை பெரியாறு விஷயத்தில் போராட வேண்டும்'' என்றார்.
அவர் மேலும், முல்லை பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக் பற்றிய குறிப்புகளை பாடதிட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும் கேரள அரசுக்கும் வேண்டுகோள் வைத்தார்.
http://actressmasaala.blogspot.com
http://tamilsexstorys2u.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?