ஜெர்மனியும், பிரான்சும் இணைந்து அறிவித்த புதிய தீர்வுகள் தேவைப்படாது என, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஹெர்மன் வேன் ரோம்பி தெரிவித்துள்ளார். யூரோ மண்டலப் பொருளாதார நெருக்கடிக்கு, ஜெர்மனியும், பிரான்சும் இணைந்து புதிய தீர்வுகள் சிலவற்றை நேற்று முன்தினம் அறிவித்தன. இந்தத் தீர்வுகள், ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தத்தில் செய்யப்படும் திருத்தங்கள் மூலம் அங்கீகரிக்கப்படும்.
அந்தத் திருத்தங்களுக்கு, ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் தங்கள் பார்லிமென்ட்டில் அங்கீகாரம் அல்லது பொது ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். இதற்கு காலம் ஆகும். ஆனால், புதிய தீர்வுகள் மார்ச் மாதத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என, இரு நாடுகளும் கால வரையறை செய்துள்ளன.
இந்நிலையில், நேற்று ஐரோப்பிய கவுன்சிலின் அறிக்கை ஒன்றை ஐரோப்பிய பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. அதில், இரு நாடுகளின் புதிய தீர்வுகளுக்குப் பதிலாக, ரோம்பி, நிதி ஒப்பந்தம் ஒன்றை பரிந்துரைத்துள்ளார். இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற நாடுகளின் பார்லிமென்ட் அங்கீகாரம் அல்லது பொது ஓட்டெடுப்பு தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், லண்டன் மாநகரின் நிதி நலன்களுக்குப் பாதுகாப்பு கிடைக்காத வரை, புதிய தீர்வுகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதில்லை என, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.
அதேபோல், யூரோ கடன் மீட்புக்காக, சர்வதேச நிதியத்திற்கு (ஐ.எம்.எப்.,) கூடுதல் நிதி எதுவும் அளிக்க முடியாது என, அமெரிக்க நிதியமைச்சர் டிமோதி கெய்த்னர் கூறியுள்ளார்.
http://actressmasaala.blogspot.com
http://tamilsexstorys2u.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?