பள்ளி மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியரை மாவட்ட கல்வி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
கடலூர் அருகே சங்கொலிக்குப்பத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் புதுவை தவளக்குப்பத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி (46) ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக சுந்தரமூர்த்தி பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காட்டி வந்துள்ளார்.
இந்த தகவல் ரகசியமாக இருந்த நிலையில், சில மாணவிகள் மூலம் கசிந்து வெளியே வந்துள்ளது. இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியும், ஆவேசமும் அடைந்த மாணவிகளின் பெற்றோர்கள், ஆசிரியர் சுந்தரமூர்த்தியின் செல்போனை பறித்து அதனை சோதனை செய்தனர்.
அப்போது அதில் பல ஆபாச படங்கள் இருந்தது. ஆத்திரமடைந்த மாணவியரின் பெற்றோர், ஆசிரியர் சுந்தரமூர்த்தியை தாக்க முயன்றனர். அதற்குள் சுந்தரமூர்த்தி அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் மாணவிகளின் பெற்றோர் தெரிவித்தனர். இதனையடுத்து தொடக்க கல்வி அலுவலர், ஆசிரியர் சுந்தரமூர்த்தியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?