Friday, 9 December 2011

கிரிக்கெட்டில் சச்சின் கடவுள்: ஆனால் சேவாக்... ரஜினிகாந்த்!!

 
 
வட இந்திய ஊடகங்களில் இப்போதைய லேட்டஸ்ட் 'ரஜினி கமெண்ட்' இதுதான்.
 
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஷேவாக் வெளுத்துக் கட்டிய 219 ரன்கள்தான் இந்த கமெண்டுக்குக் காரணம்.
 
இந்த இரட்டை சதத்தின் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியொன்றில் உலகிலேயே அதிக ரன் குவித்தவர் என்ற பெருமையை ஷேவாக் பெறுகிறார். 40ஆண்டுகால ஒரு நாள் போட்டி வரலாற்றில் இதுவே அதிகபட்ச தனிமனித ஸ்கோர். 147 பந்துகளில் 25 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் என ரன் மழைதான், இந்தூர் ஸ்டேடியத்தில்.
 
அதேநேரம், அதிகபட்சம் ஸ்கோர் (418 ரன்கள்) செய்த அணி என்ற பெருமையும் இந்திய அணிக்கு கிட்டியுள்ளது.
 
தனது இந்த சாதனை மூலம் கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் ஷேவாக்.
 
ஒருநாள் போட்டியில் மட்டுமல்ல... டெஸ்ட் போட்டியிலும் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற பெருமை ஷேவாக்குக்குதான். 319 ரன்கள். (உலக அளவில் இந்த சாதனை லாராவுக்கு மட்டுமே. )
 
இதன் மூலம் டெண்டுல்கரை விட அதிகம் பேசப்படும் கிரிக்கெட் வீரராக ஷேவாக் மாறியுள்ளார்.
 
வட இந்திய மீடியாவில், 'கிரிக்கெட் உலகில் சச்சின் கடவுள் என்றால்... ஷேவாக் தி ரஜினிகாந்த்' என எழுத ஆரம்பித்துள்ளனர்.
 
இந்த கமெண்ட் குறித்து ஒரு கிரிக்கெட் விமர்சகர் கூறுகையில், டெஸ்ட், ஒருநாள் போட்டிகளின் அதிகபட்ச சாதனைகளை வைத்திருப்பவர் சச்சின் டெண்டுல்கர்தான். ஒரே ஒரு சதம் அடித்துவிட்டால் 100 சதங்களை பூர்த்தி செய்துவிடுவார். ஆனால் இதற்காக அவர் 17 போட்டிகளை வீணடித்திருக்கிறார். அந்த கோபத்தில் இப்படி கமெண்ட் அடித்துள்ளனர் என்று நினைக்கிறேன்.
 
ஆனால் அடுத்த போட்டியிலேயே தனது 100வது சதத்தை சச்சின் பூர்த்தி செய்துவிட்டால், கடவுளுக்கு மீண்டும் மவுசு வந்துவிடும்," என்றார்.
 
ஒரு கிரிக்கெட் ரசிகர் இதுபற்றிக் கூறுகையில், "இந்த சாதனையெல்லாம் கிடக்கட்டும்.... இந்தியாவில் வெளுத்துக் கட்டுவதா பெரிய விஷயம். வெளிநாடுகளில் சாதனை என்றல்ல... குறைந்தபட்ச வெற்றியையாவது நமது அணி எட்டுகிறதா... இங்கிலாந்தில் பட்ட உதை கொஞ்சமா... இதோ அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறார்கள். அங்கே காட்டட்டும் இந்த வீரத்தை!" என்று கொந்தளித்துள்ளார்.
 
நூத்துல ஒரு வார்த்தை!



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger