Friday, 9 December 2011

பல சாதனைகளை படைத்து மேற்கு இந்தியத் ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்தியா

 
 
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் ஷேவாக் விளாசிய 219 ரன்களுடன், அந்த அணியை 153 ரன்களில் வீழ்த்தியதோடு, பல சாதனைகளையும் படைத்து ஒரு நாள் தொடரை வென்றுள்ளது இந்தியா.
 
இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. இதில் 2 அணிகளுக்கும் இடையிலான 4வது ஒருநாள் போட்டி நேற்று இந்தூரில் நடைபெற்றது. போட்டியின் 'டாஸ்' வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்து அதிரடியாக ரன்களை குவித்தனர்.
 
துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷேவாக், கம்பிர் ஜோடி துவக்கம் முதலே அதிரடியாக ரன்களை குவித்தனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களை துவஷம் செய்த ஷேவாக் 69 பந்துகளில் சதமடித்தார். இதன்மூலம் ஷேவாக் கேப்டனாக இருந்து முதல் சதமும், ஒருநாள் அரங்கில் 28வது சதத்தையும் கடந்தார்.
 
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 176 ரன்கள் சேர்த்த போது, காம்பிர் (67) ரன்-அவுட்டானார். அதன்பிறகு வந்த ரெய்னா, ஷேவாக் உடன் ஜோடி சேர்ந்து அரைசதம் கடந்து 55 ரன்கள் எடுத்த போது ரன் அவுட்டானார். விக்கெட்கள் வீழந்தாலும் ஷேவாக் தொடர்ந்து களத்தில் இருந்ததால், ரன் ரேட் 8 ரன்களை குறையாமல் இருந்தது.
 
பின்னர் வந்த ஜடேஜா 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். மறுபக்கம் ஷேவாக் 170 ரன்கள் எடுத்த போது கொடுத்த எளிய கேட்சை சம்மி கோட்டை விட்டார். அதனால் உஷாரான ஷேவாக் அதிரடி ரன் குவிப்பை தொடர்ந்தார்.
 
7 சிக்ஸ், 25 பவுண்டரிகள் அடித்த ஷேவாக் ஒருநாள் அரங்கில் இரட்டை சதம் கடந்த 2 வீரராக சாதனை படைத்தார். அத்தோடு நில்லாமல் 219 ரன்களைத் தொட்டு புதிய உலக சாதனையையும் படைத்தார்.
 
அவர் 206 ரன்களை கடந்த போது, ஒருநாள் அரங்கில் 8,000 ரன்களை கடந்த 24வது வீரரானார். மேலும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ஷேவாக் 6வது இடத்துக்கு முன்னேறினார். ஷேவாக் 219 ரன்களில் ஆட்டமிழந்தார்.
 
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட்களை இழந்து 418 ரன்களை எடுத்தது. இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் 400 ரன்களை 4 முறை கடந்த அணி மற்றும் அதிகபட்ச ரன்கள் எடுத்த அணி உள்ளிட்ட சாதனைகளை இந்திய அணி படைத்தது.
 
பின்னர் ஆடவந்த மேற்குஇந்தியத் தீவுகள் அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 265 ரன்களில் வீழ்ந்தது. அந்த அணியின் ராம்தின் மட்டுமே சிறப்பாக ஆடி 96 ரன்களைக் குவித்தார்.
 
இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ராகுல் சர்மா, ஜடேஜா உள்ளிட்டோர் தலா 3 விக்கெட்களை எடுத்தனர்.
 
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதிரடியாக இரட்டை சதமடித்து இந்திய வெற்றிக்கு வித்திட்ட ஷேவாக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
 
சாதனை மழை:
 
டெஸ்ட் போட்டியில் டிரிபிள் சதமும், ஒருநாள் போட்டியில் இரட்டை சதமும் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ஷேவாக் படைத்துள்ளார். இவர் டெஸ்ட் போட்டியில் எடுத்த 319 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இது குறித்து அதிரடி வீரர் ஷேவாக் கூறியதாவது,
 
'இந்த போட்டியில் இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைப்பேன் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. சமீபகாலமாக சரியாக விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த போதும், எனது பேட்டிங் முறையை நான் மாற்றிக் கொள்ளவில்லை. நான் கொடுத்த எளிமையான கேட்சை, சம்மி கோட்டைவிட்டதை பார்த்த போதே கடவுள் என் பக்கம் இருப்பதாக உணர்ந்தேன், என்றார்.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger