ஈழ விடுதலைப் போராட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்று எடுப்பதற்காக இலங்கை நாடாளுமன்றில் முழங்கியதற்காக கோழைத்தனமாக சுட்டு வீழ்த்தப்பட்ட மாமனிதரும் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜனின் 5 வது ஆண்டு நினைவு தினம் இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை அனுஷ்ரிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வன்னியில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் சுயதொழிலை ஊக்கிவிக்கும் முகமாக உதவித் தொகைகளும் வழங்கப்பட்டது.
குறிப்பாக ஏழ்மையிலும் யுத்தத்திலும் பாதிக்கப்பட்ட 13 குடும்பங்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான திருமதி பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரன் , யாழ்.மாநாகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் மரிய கொறற்றி மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
முன்னர் சாவகச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மாமனிதரும் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினருமான அமரர் நடராஜா ரவிராஜனின் 5 வது ஆண்டு நினைவு தினம் அரச புலனாய்வாளர்களினால் குழப்பப்பட்டது குறிப்பிடத்தகது.
http://actressmasaala.blogspot.com
http://tamilsexstorys2u.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?