Home
»Unlabelled
» சனல் 4 காணொளியை ஐ.நா திரையிட மூன்று மில்லியன் லஞ்சம்?
சனல் 4 காணொளியை ஐ.நா திரையிட மூன்று மில்லியன் லஞ்சம்?

சனல் 4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களம் காணொளி ஆவணப்படத்தை மூன்று அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து, எதிர்வரும் 12 ஆம் திகதி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் திரையிட தீர்மானித்துள்ளன. இந்த நிலையில், சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் திரையிட ஐரோப்பாவில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வலையமைப்பு மூன்று அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு மூன்று மில்லியன் யூரோக்களை லஞ்சமாக வழங்கியுள்ளதாக இலங்கையில் இருந்து வெளியாகும் சிங்கள நாளேடொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பல நாடுகளிலும் திரையிடப்பட்ட சனல் 4 காணொளி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் முதல் முறையாக திரையிடப்படவுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச நெருக்கடிக் குழு மற்றும் மனித உரிமை கண்காணிப்பகம் என்பன இணைந்து இக்காணொளியை ஐரோப்பிய பாராளுமன்றில் திரையிடவுள்ளன.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?