Saturday, 8 October 2011

கடலில் படகு மூழ்கியது: உயிர் தப்பினார் பிரபல சினிமா பாடலாசிரியர்

 
 
பிரபல சினிமா பாடலாசிரியர் சினேகன். இவர் உயர்திரு 420 என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
 
சினேகன் ரணம் என்ற படத்துக்கு பாடல் எழுதுகிறார். இப்படத்தின் மியூசிக் கம்போசிங்கிற்காக இசையமைப்பாளர் மரியா மனோகர், இயக்குனர் விஜய் சேகரன், ஆகியோருடன் சினேகன் மலேசியா அருகில் உள்ள லிங்காவி தீவுக்கு சென்றார்.
 
அங்கு படகில் பயணம் செய்தபோது திடீரென்று படகு கவிழ்ந்தது. சினேகன் கடலில் மூழ்கி தத்தளித்தார். நீச்சல் தெரிந்ததால் உயிர் தப்பினார். படகில் பயணம் செய்து மூழ்கிய இதர பயணிகள் சிலரையும் சினேகன் காப்பாற்றினார். பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று பயணிகளை மீட்டனர்.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger