Saturday, 8 October 2011

விடுதலைப் புலிகள் மூன்று மில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளனராம்

 

செனல் – 4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக் களம் வீடியோ ஆவணப்படத்தை மூன்று அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து, எதிர்வரும் 12 ஆம் திகதி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் திரையிட தீர்மானித்துள்ளன. இதற்கு இலங்கை அரசாங்கம் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.செனல் 4 தொலைக்காட்சியின் விவரணப்படத்தை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வெளியிடுவதற்காக ஐரோப்பாவில் உள்ள புலிகளின் வலையமைப்பு, குறித்த நிறுவனங்களுக்கு மூன்று மில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளதாக திவயின பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஆவணப்படம் திரையிடப்பட்ட பின்னர், கலந்துரையாடல்களை நடத்துவதற்கு, செனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் கெலம் மெக்ரே, கிறீன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மூவர், பல அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் முதல் முறையாக செனல் 4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களம் விவரணப்படம் திரையிடப்பட உள்ளமை குறிப்பிடதக்கது.

சர்வதேச மன்னிப்புச் சபை, இண்டர்நேஷனல் கிரைசீஸ் குறுப், மனித உரிமை கண்காணிப்பகம் என்பனவே இந்த ஆவணத் திரைப்படத்தை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் திரையிட தீர்மானித்துள்ளன.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger