எலன் ஜான்சன் சர்லீப், லேமா போவீ மற்றும் தவக்குல் கர்மன் ஆகிய 3 பெண்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதை எலன் ஜான்சன் சர்லீப், லேமா போவீ மற்றும் தவக்குல் கர்மன் ஆகிய 3 பெண்கள் பகிர்ந்து கொள்ளவிருக்கின்றனர். அவர்களுக்கு 1.5 மில்லியன் டாலர் பரிசுத் தொகை பிரித்துக் கொடுக்கப்படும்.
எல்லன் ஜான்சன் சர்லீப் மேற்கு ஆப்ரிக்க நாடான லைபீரியாவின் அதிபராக உள்ளார். 'லைபீரியாவின் இரும்பு பெண்மணி' என்று அழைக்கப்படும் அவர் தான் ஒரு ஆப்பிரிக்க நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். அவரும், லேமா போவீ, கர்மன் ஆகியோர் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்ணுரிமைக்காக அஹிம்சா முறையில் போராடி வருவதற்காக அவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.
லேமா போவீ மத்திய லைபீரியாவில் பிறந்தவர். 6 குழந்தைகளின் தாய். அவர் லைபீரியப் பெண்களைத் திரட்டி அமைதி இயக்கத்தை துவங்கினார். அதன் மூலம் பெண்ணுரிமைக்காக அமைதியான முறையில் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார்.
தவக்குல் கர்மன் ஒரு ஏமேனி அரசியல்வாதி, மனித உரிமை ஆர்வலர், பெண் பத்திரிக்கையாளர்கள் அமைப்பின் தலைவர். ஏமன் அதிபர் அலி அப்துல்லா சாலேவு்ககு எதிராக போராட்டங்கள் நடத்தி கைதானவர். மனித உரிமைக்காக போராடி வருபவர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?