Saturday, 8 October 2011

ஈரோடு: 2 குழந்தைகளை எரித்து கொலை செய்த தாயும் தற்கொலை

 

ஈரோடு: குடும்பத் தகராறில் மனமுடைந்த பெண் தனது 2 குழந்தைகளுக்கு தீவைத்துவிட்டு, தானும் தீக்குளித்து பலியானார்.

ஈரோடு மாவட்டம், சங்கு நகரை சேர்ந்தவர் சரவணராஜ். ஜவுளி வியாபாரியான இவருக்கு சுபத்ரா என்ற மனைவியும், லிங்கேஸ்வரன்(9) என்ற மகனும், இலக்கியா(1) மகளும் உள்ளார். இவர்கள் சரவணராஜின் பெற்றோருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர்.

சமீபக்காலமாக அவ்வப்போது சரவணராஜ் -சுபத்ரா இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதை சரவணராஜின் பெற்றோர் தலையிட்டு, சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வாக்குவாதம் ஏற்பட்டது. அதை மறந்துவிட்ட சரவணன் நேற்று வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டார்.

இதை நினைத்து மனமுடைந்த நிலையில் காணப்பட்ட சுபத்ரா காலை முதல் வீட்டில் யாரிடமும் சரியாக பேசவில்லை. மதியம் 12 மணியளவில், சுபத்ராவின் அறைக்குள் குழந்தைகளுடன் உள்ளே சென்று கதவை பூட்டி கொண்டார்.

பின்னர் அவர் வெகுநேரமாகியும் அவர் வெளியே வரவே இல்லை. சிறிது நேரத்திற்கு பின் அந்த அறையில் இருந்து புகை வருவதும், 2 குழந்தைகளின் அலறல் சத்தமும் கேட்டது. இதில் சந்தேகமடைந்த சரவணராஜின் பெற்றோர், அந்த அறையை தட்டி பார்த்தனர்.

பின்னர் அருகில் இருப்போரின் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது, சுபத்ரா மற்றும் 2 குழந்தைகளும் தீயில் எரிந்து கொண்டிருப்பது தெரிந்தது. உடனே தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து, 3 பேரையும் மீட்டனர். ஆனால் அதற்குள் அதிகளவிலான தீக்காயமடைந்த சுபத்ரா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

குழந்தைகள் 2 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்த சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். விசாரணையில், குடும்பத் தகராறில் தான் மட்டும் தற்கொலை செய்து கொண்டால் 2 குழந்தைகளும் அனாதையாகி விடுவார்கள் என்ற பயத்தில், தன்னோடு குழந்தைகளுக்கும் தீவைத்து கொளுத்திவிட்டு, சுபத்ரா தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger