Saturday, 8 October 2011

அன்னை தெரசாவுடன் ஒப்புமைப்படுத்தி நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட சோனியா!

 
 
 
 
 
அன்னை தெரசாவுடன் ஒப்புமைப்படுத்தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசுக்கு சர்வதேச விழிப்புணர்வு மையம் என்ற ஒரு அமைப்பு பரிந்துரைத்திருந்தது. ஆனாலும் சோனியாவுக்கு விருது கிடைக்கவில்லை.
 
 
 
சர்வதேச விழிப்புணர்வு மையம் என்ற ஒரு அமைப்பு சோனியா காந்தியின் பெயரை இந்த விருதுக்குப் பரிந்துரைத்திருந்தது. உலக அமைதியை விரும்புபவர் சோனியா காந்தி, சிறந்த சமூக சேவகர் என்றெல்லாம் அந்த அமைப்பு புகழாரம் சூடியிருந்தது.
 
 
 
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் மஜாஸ் முங்கேரி கூறுகையில், தான் மணமாகி வாழ வந்த இந்தியாவை தனது தாய்நாடாகவே தத்தெடுத்துக் கொண்டவர் சோனியா காந்தி (என்ன கொடுமை சார் இது, இந்தியா இவங்கள தத்தெடுதிச்சா? அல்லது இந்தியாவ இவங்க தத்தெடுதாங்களா? பாவம் இந்திய திருநாடு அனாதையா தான் இருந்து இருக்கு...!). இந்தியாவின் அமைதிக்காக மட்டுமல்லாமல், சர்வதேச அமைதிக்காக பாடுபட்டு வருபவர் சோனியா காந்தி. (இது உண்மை தாங்க ஒரு இனத்தையே அழிச்சு அமைதியை நிலைநாட்டலாம்ன்னு ஒரு புது வரலாறே எழுதினவங்களாச்சே!).
 
 
 
அன்னை தெரசாவுக்கு உள்ள அதே அளவிலான மரியாதை சோனியாவுக்கும் உள்ளது. நலிவடைந்த பிரிவினருக்காக ஓயாமல் உழைத்து வருகிறார் சோனியா. (ஒரு சின்ன திருத்தம் அன்னை தெரசா சொந்த பந்தமின்றி தவிக்கும் ஆதரவற்ற அனாதைகளை அரவணைத்து வாழவச்சாங்க. ஆனா, நம்ம சோனியாஜி சொந்த பந்தங்களோட வாழ்ந்திட்டு இருந்த தமிழினத்தை அழிச்சு ஆதரவின்றி அனாதையா நிக்க வச்சாங்க...)
 
 
 
சோனியா காந்தியின் அயராத முயற்சியால் அண்டை நாடுகளில் தீவிரவாதம் ஒழிந்துள்ளது. நட்பு நாடுகளாக அவை மாறியுள்ளன என்றார் முங்கேரி.
 
 
 
இருப்பினும் சோனியா காந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கவில்லை. (அடுத்த வருடம் ராஜபக்சேக்கு அமைதிக்கான நோபல் பரிசுக்கு சிபாரிசு பண்ணுங்க).
 
 
 
உண்மையான அமைதிக்கு புது அர்த்தம் கற்றுக் கொடுத்தவர் மகாத்மா காந்தி. உலகுக்கே அகிம்சை என்ற மாபெரும் தத்துவத்தை கற்றுக் கொடுத்து அறிமுகப்படுத்தியவர் மகாத்மா காந்தி. அவருக்கே விருது கொடுக்காமல் பாலிட்டிக்ஸ் செய்து பாரபட்சமாக நடந்த அமைப்பு நோபல் அமைப்பு. இதற்காக அது சமீபத்தில் வருத்தம் கூட தெரிவித்திருந்தது என்பது நி்னைவிருக்கலாம்.




0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger