1. நயன்தாரா
நயன்தாரா தமிழில் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறார். இவர் தமிழில் "ராஜா ராணி" மற்றும் "இது கதிர்வேலன் காதல்" ஆகிய வெற்றிப்படங்களில் நடித்ததன் மூலம் தனது முதலிடத்தை தக்க வைத்துள்ளார். தற்பொழுது இவர் தமிழில் ஐந்து படங்களில் பணியாற்றி வருகிறார். இவர் 2014ல் தமிழில் ஒரு படமும், பிற மொழிகளில் ஒரு படமும் நடித்திருந்தார். அவை மிகப்பெரிய வெற்றியை கொடுத்தன.
2. சமந்தா
இவர் தமிழ் நடிகைகளின் வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். சமந்தா தாம் குறுகிய காலத்திலேயே அதிக படங்களில் நடித்து தமிழ் திரைப்பட உலகில் தமக்கென ஒரு முத்திரையை பதித்துள்ளார். இவர் நடித்த திரைப்படமான "அஞ்சான்" தோல்வியை தழுவினாலும், அடுத்த படமான "கத்தி" மாபெரும் வெற்றியைத் தழுவியது. இவர் மேலும் "10என்றதுக்குள்ள" என்ற படத்தில் பணியாற்றி வருகின்றார்.
3. ஹன்சிகா
இவர் தமிழ் நடிகைகளின் வரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் 2014ல் 3 படங்களும் 2015ல் ஒரு படமும் நடித்துள்ளார். மேலும் 6 படங்களில் நடித்து வருகின்றார். இவர் நடித்த படங்களில் "அரண்மனை" மற்றும் "ஆம்பள" ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன.
4. அனுஷ்கா
நடிகை அனுஷ்கா தமிழில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார். தெலுங்கு நடிகையான இவர் தமிழில் நான்காவது இடத்தைப் பிடித்திருந்தாலும் தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து முதலிடத்தியே பெற்றுள்ளார். இவர் தமிழில் 2014 மற்றும் 2015ல் மொத்தம் இரண்டு படங்களை நடித்துள்ளார். இவர் நடித்த "லிங்கா" படமானது சுமாரான வெற்றியைத்தழுவினாலும் "என்னை அறிந்தால்" மாபெரும் வெற்றி பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.
5. காஜல் அகர்வால்
இவர் தமிழ் நடிகைகளின் வரிசையில் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். ஏனெனில் கடந்த வருடத்தில் நடிகை "காஜல் அகர்வாலுக்கு ஒரு படம் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது. இதன் மூலம் தனது நடிப்பை வெளிக்காட்ட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன் மூலம் சினிமா நடிகைகளின் வரிசையில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?