Karikalan Karkki புது டெல்லி அரசியல் வரலாற்றில் ஏழாவது முதல்வராக கெஜ்ரிவால் பதவி ஏற்க உள்ளார்.அதுபோல் காங்கிரஸ் பிஜேபி அல்லாத முதல் ஆட்சி டெல்லியில் மலர இருக்கிறது. முன்பு 49 நாட்கள் மட்டுமே தனிப்பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அவரால் ஆட்சி புரிய முடிந்தது.அப்போது அவர் எடுத்த தவறான முடிவுக்காக திறந்த மனத்தோடு மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.மக்கள் அதை ஏற்று மறுவாய்ப்பு அளித்துள்ளனர். இத்தேர்தலில் காங்கிரசின் வாக்கு சதவீதம் வெகுவாக குறைந்துவிட்டது பரிதாபத்துக்குரியது.இம்முறை முஸ்லீம் வாக்காளர்கள் காங்கிரசைப் புறக்கணித்து ஆம் ஆத்மிக்கு வாக்களித்துள்ளனர். மோடி அணிந்த விலை உயர்ந்த சூட்கள் மக்களிடம் எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது.மாறாக மப்ளர் அணிந்த கெஜ்ரிவாலின் நடுத்தர வர்க்கத் தோற்றமோ மக்களிடம் ஆதரைப் பெற்றது. மேலும் கலகக்காரர் என்கிற இமேஜையும் இந்த தேர்தலின் மூலம் கடந்து வந்திருக்கிறார்.பிரச்சாரத்தில் எங்கும் தன் பழைய சகாவான பேடியை அவர் விமர்சிக்கவே இல்லை.மதத்தை தேர்தல் பிரச்சனையாக்காமல் தவிர்த்ததும் புத்திசாலித்தனமான முடிவு. புது டெல்லியில் 75% சதவீத வாக்குகளைப் பெற்று புதியசாதனை படைத்திருக்கும் கெஜ்ரிவால்மக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்க வேணடும் என்பதே நம் விருப்பம். காத்திருப்போம். |
Bobs Haircuts Images
-
[image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image:
Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs
Haircuts][...
9 years ago
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?