Tuesday, 9 July 2013

இந்தியா அபார வெற்றி இறுதிப் போட்டிக்கு தகுதி - tri series india beat sri lanka

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய 3 நாடுகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்த போட்டியின் கடைசி லீக் ஆட்டம் போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று இரவு நடந்தது. இதில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. இப்போட்டியில் இந்தியா அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலையுடன் களம் கண்டது.


டாஸ் வென்ற இலங்கை, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக் காரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். தவான் 15 ரன்னில் ஆட்டம் இழந்தார்.  அடுத்து வந்த கோலி 31 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 12 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். பின்னர் வந்த ரெய்னா, சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார்.

இந்திய அணி 29 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அப்போது, சர்மா 48 ரன்னுடனும், ரெய்னா 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

பின்னர் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி, இலங்கைக்கு 26 ஓவர்களுக்கு 178 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து, இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய தரங்கா 6 ரன்னிலும், ஜெயவர்த்தனே 11 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

அடுத்து வந்த சங்கக்கரா (0), சன்டிமால் (26), மேத்யூஸ்(10) உள்ளிட்ட வீரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்னில் அவுட் ஆனார்கள்.

இதனால் இலங்கை அணி 24.4 ஓவர்களில் 96 ரன்களுக்கு சுருண்டது.

சிறப்பாக பந்து வீசிய புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இஷாந்த் சர்மா, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த அபார வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் விளையாட உள்ளன.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger