Tuesday 9 July 2013

இளவரசன் பிரேத பரிசோதனை வீடியோ

தர்மபுரியில் திவ்யா – இளவரசன் காதல், கலப்பு திருமண விவகாரத்தில் கடந்த 4–ந்தேதி இளவரசன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் அங்கு பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
இளவரசன் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார் கூறியதையடுத்து வக்கீல் ஏ.ரமேஷ் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார்.
அதில் இளவரசன் பிரேத பரிசோதனை தொடர்பாக நாங்கள் விடுத்த கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. எனவே மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும், பிரேத பரிசோதனை முழுவதையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை நீதிபதிகள் வி.தனபால், சி.டி.செல்வம் ஆகியோர் விசாரித்து, இளவரசன் பிரேத பரிசோதனை தொடர்பாக எடுக்கப்பட்ட வீடியோ பதிவை 9–ந் தேதி (இன்று) பார்வையிடுவதாக கூறினர்.
மத்திய – மாநில அரசு டாக்டர்கள், வக்கீல்கள் ஆகியோருடன் பார்வையிடப்படும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.

இதையடுத்து இன்று காலை 10.30 மணிக்கு ஐகோர்ட்டில் இளவரசன் பிரேத பரிசோதனை வீடியோ காட்சிகளை நீதி பதிகள் வி.தனபாலன் பி.டி.செல்வம் ஆகியோர் பார்த்தனர். அவர்களுடன் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த தடயவியல் வல்லுனர் டாக்டர் டெக்கால், மத்திய அரசு தரப்பில் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரி தடய அறிவியல் துறை தலைவர், மாநில அரசு தரப்பில் சென்னை அரசு பொதுமருத்துவமனை தடய அறிவியல் துறை தலைவர், தர்மபுரியில் இளவரசன் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர், மனுதாரர் ரமேஷ், வக்கீல்கள் சத்திய சந்திரன், சங்கரசுப்பு, என்.ஜி.ஆர். பிரசாத் ஆகியோர் பார்த்தனர்.
அந்த வீடியோ 1 மணி நேரம் ஓடக்கூடியது என்பதால் பகல் 12 மணி வரை வீடியோ காட்சிகளை பார்த்தனர். அதன்பிறகு நீதிபதிகள் மறு பிரேத பரிசோதனை தேவையா? என்பது குறித்து உத்தரவு பிறப்பிக்கிறார்கள். தீர்ப்பை பொறுத்து  இளவரசன் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும்.

4-ந்தேதி தர்மபுரி அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு வந்த இளவரசனின் பிணம் 5-ந்தேதி பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே பதப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளது. சவக்கிடங்கு முன்பு 24 மணி நேரமும்  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இளவரசனின் இறுதிச் சடங்கு எப்போது நடைபெறும் என்று இளவரசனின் தந்தை இளங்கோவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
எனது மகனின் பிணத்தை மறு பரிசோதனை செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டால் அதன்படி நடந்து கொள்வோம். மறு பரிசோதனை தேவையில்லை. தர்மபுரியில் நடந்த பிரேத பரிசோதனை போதும், அதில் சந்தேகம் இல்லை என்று கூறி பிணத்தைபெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டால் பிணத்தை வாங்கிச் சென்று இறுதிச் சடங்கு செய்வோம்.
எப்படியோ எனது மகனின் இறுதிச்சடங்கு நல்லபடியாக நடந்தால் போதும்.   சென்னை ஐகோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுக்கு முழுமையாக கட்டுப்படுவோம். அந்த உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்யமாட்டோம்.
இவ்வாறு இளங்கோ கூறினார்.

1 comments:

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger